மூலிகைசெடி மரம்

வில்வம் மருத்துவ குணங்கள்

வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil வில்வ மரம் இனத்தைச் சேர்ந்தது. வில்வ மரம் முள்ளுடையதாக இருக்கும். சிவன் ஆலயங்களில் வில்வ மரம் வளர்க்கப்பட்டிருக்கும். வில்வ மரத்தின் இலை, காய், பட்டை, வேர் ஆகியவைகள் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. குறிப்பாக வில்வ இலையினால் தயாரிக்கப்படும் குடிநீர் பலவித நோய்களைக்குணமாக்க வல்லது. வில்வக் குடிநீர் என்பது ஒரு கைப்பிடி இலையை சுமார் நான்கு அவுன்ஸ் நீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்துப் பின்னர் இலையை நீக்கிவிட்டு நீரை மட்டும் குடிப்பது வில்வக்குடிநீர் ஆகும்.

வில்வக் குடிநீரால் குணமாகும் நோய்கள்

இந்தக் குடிநீரை அதிகாலையில் ஒரு அவுன்ஸ் குடித்து வந்தால் மூலம், வாதவலிகள், மேக நோய் ஆகியவைகள் குணமாகும். தவிர தீராத நாட்பட்ட வயிற்று வலி தீரும். மூளைக்குப் பலத்தைக் கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

வில்வம் பழம் மருத்துவம்

வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil வில்வம் பழம் மருத்துவம்

வில்வப் பழத்தை எண்ணெயில் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் மூளை, கண் முதலியன குளிர்ச்சி பெறும். இந்தப் பழத்தின் ஓட்டை ஒட்டியுள்ள சதைப் பகுதியைச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம், எரிச்சல், தினவு போன்ற தொந்தரவுகள் நீங்கும் வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil.

ஆடாதோடை பயன்கள்

மார்பு வலி, வாய்வுத் தொந்தரவு நீங்க

மார்பு வலிக்கு

மார்பு வலி, வாய்வுத் தொல்லை, விக்கல் போன்றவை நீங்க, இரண்டு ரூபாய் எடைக்கு வில்வப் பட்டையைக் கொண்டு வந்து இடித்து தண்ணீர் விட்டுக் காய்ச்சிப் பாதியாக சுண்டியதும் ஆறவிட்டு குடிக்க வேண்டும். இதனால் மேற்கண்ட குறைபாடுகள் குணமாகும்.

வில்வ இலை லேகியம்

வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil வில்வ இலை லேகியம்

வில்வ இலையைக் கொண்டு வந்து நன்கு உலர்த்தி இடித்துச் சன்னமாகத் தூளாக்கி ஒரு பாண்டத்தில் போட்டுப் பசுவின்பால் விட்டுக் காய்ச்சவும். காய்ச்சும் போது போதுமான அளவு பனை வெல்லத்தைப் பசும் நெய் சேர்த்துக் கிளறி கீழே இறக்கி ஆறியதும் பாட்டிலில் பத்திப்படுத்திக் கொள்ளவும். இந்த லேகியத்தைச் சாப்பிட்டு வந்தால் குன்ம வயிற்று வலி உடல் பலஹீனம், பசியின்மை போன்ற குறைபாடுகள் குணமாகும் வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil .

மாந்தம், அஜீரண பேதி குணமாக்க வில்வ பூ

மேற்கண்ட குறைபாடுகளைக் குணமாக்குவதில் சிறந்து விளங்கு கிறது வில்வப்பூ. வில்வப் பூக்களைக் கொண்டு வந்து நன்கு உலர்த்தி தூள்செய்து ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும், இதில் இரண்டு சிட்டிகை எடுத்துத் தேனில் குழைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மாந்தம், அஜீரண பேதி போன்றவை குணமாகும் வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil .

  1. வில்வத்தின் மருத்துவப் பயன்கள் வில்வப்பழக்கதுப்பு அதிமதாத்தூள், சர்க்கரை, தேன் இவற்றைக் கலந்து தோன்றும் அதிசாரம் நிற்கும். அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் பித்தத்தாலும், இரத்தத்தாலும் தோன்றும் அதிசாரம் நீங்கும்.
  2. வில்வப்பிஞ்சின் விழுது என் விருது இவற்றைச் சம அளவு எடுத்துத் தயிர்த்தெளவு, புளிப்புச் சுவையுள்ள சாறு ஆகியவற்றைச் சேர்த்துப் பக்குவம் செய்து அதில் நெய் கலந்து உட்கொண்டால் சீதபேதி நீங்கும்.
  3. வில்வக்காயின் விழுதில் சுக்குத்தூளைக் கலந்து வெல்லம் சேர்த்து உட்கொண்டு மோருடன் உணவு சாப்பிட்டால் கிரகணி நீங்கும்.
  4. வில்வ இலைக் கஷாயத்தில் திரிகடுக ( சுக்கு – மிளகு – திப்பிலி) சூரணத்தைச் சேர்த்து உட்கொண்டால் வீக்கம் தணியும். மேலும் மலக்கட்டு, மூலநோய், காமாலை நோய் இவைகள் தணியும்.
  5. வில்வக்காய்த்தூளை வெல்லத்துடன் சேர்த்து உட்கொண்டால் இரத்த அதிசாரம், ஆம் வலி (உணவுரசம் செரிமானமாகாமல் தோன்றும் வலி), வயிற்று நோய்கள் தீரும்.
  6. வில்வவேர்க் கஷாயத்தில் பொரிமா, சர்க்கரை கலந்து சிறுவர்களுக்கு, வாந்தி அதிசாரபேதி என்னும் நோய்கள் தோன்றியபோது பயன்படுத்தினால் நலம் விளையும்.
  7. வில்வக்காயைப் பசுவின் சிறுநீருடன் (கோமியம் விழுதாக அரைத்து எள் எண்ணெய், ஆட்டுப்பால் ஆகியவற்றையும் கலந்து தைலம் காய்ச்சிக் காதில் சில துளிகள் விட்டு வந்தால் செவிட்டுத்தன்மை நீங்கும்.
  8. வில்வ இலைச் சுரசத்தை உடலின் மேல் பூசிக் கொண்டால் துர்நாற்றம் நீங்கும் வில்வம் மருத்துவ குணங்கள் vilvam benefits in tamil .

வில்வ இலை பயன்கள் – vilva ilai benefits in tamil

வில்வ இலை வில்வ மரத்தின் இலையினால் தயாரிக்கப்படுவது கூவிளக் குடிநீர், வில்வாதிலேகியம் போன்றவைகளாகும். ஒரு கைப்பிடி இலையை நான்கு அவுன்ஸ் தண்ணீரில் பத்து மணி நேரத்திற்குக் குறையாமல் ஊறப் போட்டு பிறகு இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் சேகரித்துக் கொள்ளவும்.

அந்த நீரினைத் தொடர்ந்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் அளவு வீதம் தினசரி காலைவேளையில் குடித்துவரின் வாதவலிகள், மேகநோய் குணமாகும். மூளைக்குப் பலமும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். உடல் வறட்சி, உஷ்ண எரிச்சல், தினவு போன்றவை நீங்கும்.

கண்கள் குளிர்ச்சி பெறும், உடல் பலபலப்பாகும். வாய்வுத் தொல்லைகள், வலிகள், ஜீரணக் கோளாறுகள் நீங்கும். பலவீனம், பசியின்மை ஆகியவை நீங்க வில்வ இலைகளை உலர்த்தித் தூள் செய்து, பசுவின் பால்விட்டுக் காய்ச்சி அதில் போதிய அளவு பனைவெல்லமும், சுத்தமான நெய்யும் சேர்த்து லேகியமாக செய்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு வரவேண்டும். நோய் முற்றிலும் குணமாகும் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button