விதைகள்

வெந்தயம் மருத்துவ பயன்கள்

vendhayam benefits in tamil வெந்தயம் மருத்துவ பயன்கள் வெந்தயம் வெந்தயத்தைச் சமையல் வகைக்குத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வைத்திய முறைக்கும் வெந்தயம் பயன்பட்டு வருகிறது. வெந்தயம் உஷ்ணத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது.

வெந்தயம் ஓர் அபூர்வமான மூலிகை என்று கூறலாம். வெந்தயக் கீரையையும், வெந்தயத்தையும் உணவுடன் சேர்த்து உண்ணும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் அறிந்து வைத்துள்ளது.

vendhayam benefits in tamil – வெந்தயம் பயன்கள்

vendhayam benefits in tamil வெந்தயம் மருத்துவ பயன்கள் vendhayam health benefits in tamil fenugreek benefits in tamil

ஆற்றல் மிகு வெந்தயக் கீரையை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி பெறும். குடல் புண், குடல் எரிச்சல், வயிற்றுவலி, சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டம், கண் எரிச்சல் போன்றவைகள் குணமாகும். முக்கியமாக இரத்தத்தை உற்பத்தி செய்யக் கூடிய முக்கிய தாதுவான இரும்பு வெந்தயத்திலும், வெந்தயக் கீரையிலும் இருக்கின்றது.

தவிர எலும்பை உறுதியாக வளர்க்கும் பாஸ்பரஸ் உப்புகளும் நிறைந்திருக்கிறது. வெந்தயக் கீரையை வாரத்தில் இரண்டு முறை சாம்பார் செய்து சாதத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அத்துடன் தேங்காய் பருப்பு சேர்த்து பொரியல் செய்தும் உண்ணலாம் vendhayam benefits in tamil.

மலச்சிக்கலுக்கு

மலச்சிக்கல் பிரச்சனை

மலம் சரிவர இறங்காமல் மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கும் சமயம் இரவு படுக்கப் போகுமுன் தேக்கரண்டியளவு கல் நீக்கிச் சுத்தம் செய்யப்பட்ட வெந்தயத்தை வாயில் போட்டு கொஞ்சம் விட்டு அப்படியே விழுங்கிவிட்டுப் படுத்துக் கொண்டால் காலையில் மலம் சரளமாக இறங்கும்.

அப்படியும் மலம் இறங்கவில்லையானால் டம்ளர் அளவில் தேக்கரண்டியளவு உப்பைப் போட்டுக் கரைத்து குடித்துவிட்டால், சற்று நேரத்தில் மலம் இறங்கும். இரண்டு தடவை பேதியாகும். சிறுநீர் சரிவர இறங்காமல் கஷ்டப்படுகிறவர்கள் இதே போல் செய்தால் சிறுநீர் சுலபமாக இறங்கும்.

வயிற்றுவலி குணமாக

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

உஷ்ணம் காரணமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டால் வெந்தயத்தைக் கல் நீக்கி தேக்கரண்டியளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறும்படி வைத்து, காலையில் எடுத்து அரைத்து அல்லது அப்படியே வாயில் போட்டு விழுங்கிவிட்டுக் கொஞ்சம் வெந்நீர் குடித்து விடவேண்டும். தினசரி, மூன்று நாட்களுக்கு இந்தவிதமாகச் சாப்பிட்டால் உஷ்ண வயிற்றுவலி குணமாகும்.

வெள்ளை ஒழுக்கு குணமாக

சோற்றுக் கற்றாழை மடலில் ஒன்று கொண்டு வந்து அதை நடுமையாகப் பார்த்து பக்கவாட்டில் ஒரு கீரல்போட்டு, அது துண்டித்துவிடாமல் இரண்டாகப் பிளக்கும்படிச் செய்து அதனுள் தேக்கரண்டியளவு வெந்தயத்தைக் கல் நீக்கி,

அந்த வெந்தயத்தைக் கற்றாழையினுள் நடுபாகத்தில் மட்டமாகப் போட்டுத் திணித்து, பிளவை ஒன்றாக இணைத்து மேலே நூல்கொண்டு சுற்றிக் கட்டிவிட்டு, மடலை இரவில் ஓட்டின் மேல் வைத்துவிட வேண்டும்.

காலையில் அதை எடுத்துக் கட்டை அவிழ்த்து வெங்காயத்தை மட்டும் எடுத்து அரைத்து அரை ஆழாக்களவு பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் குடித்துவிட வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து ஏழுநாள் சாப்பிட்டு வந்தால் வெள்ளை ஒழுக்கு குணமாகும்.

இருமல் குணமாக வெந்தயம் மருத்துவ பயன்கள்

இருமல் குணமாக

வெந்தயம் 20 கிராம், வெங்காயம் 10 கிராம், ஏலரிசி 2 கிராம், மணத்தக்காளி இலை ஒரு கைப்பிடியளவு இவைகளை சேகரித்துக் கொண்டு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, மணத்தக்காளி இலையைப் போட்டு வதக்கி, இடித்துக் கொண்டு பிறகு வெந்தயம், ஏலரிசி இவைகளைப் போட்டுச் சிவக்க வறுத்து,

அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு அது சிவந்து வரும் சமயம் மணத்தக்காளி இலையை அதில் போட்டு, எல்லாவற்றையும் மறுபடிக் கிளறி இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, பகல், ஆக மூன்று வேளைக்கு, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் மூன்றே நாள் சாப்பிட்டால் போதும் இருமல் குணமாகி விடும்.

வெந்தயக்கீரை பயன்கள்

வாயில் துர்நாற்றம் வாயில் துர்நாற்றம் உள்ளவர்கள் தொடர்ந்து 21-நாள் சாப்பிட்டு வந்தால் வாய் நாற்றம் விலகிவிடும்.

அம்மை நோய் வராதிருக்க

அம்மை நோய் பரவிவரும் காலத்தில் ஒரு சட்டியில், 10 கிராம் வெந்தயத்தையும், அதே அளவு மிளகையும் உடைத்து போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு, அரை ஆழாக்காகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி காலை, மாலை ஒன்றரை அவுன்ஸ் வீதம் தொடர்ந்து மூன்றுநாள் சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் வராது. தடுத்துக் கொள்ளலாம். ஆனால் கஷாயத்தை தினசரி தயார் செய்துக் கொள்ள வேண்டும் vendhayam benefits in tamil.

கீரைப்பூச்சி வெளியேற வெந்தயம் மருத்துவ பயன்கள்

சிலாது வயிற்றில் கீரைப்பூச்சி என்னும் மிகச்சிறிய வெண்ணிறப் பூச்சிகள் ஏராளமாக உற்பத்தியாகி இரவு வேளையில் ஆசனத் துவாரத்தின் வழியே வெளியேற எத்தனிக்கும். அந்த சமயம் அரிப்பு எடுக்கும்.

சில சிறுவர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டு கஷ்டப்படுவார்கள். இதற்கு வெந்தயம் நன்கு பயன்படுகிறது.

பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டியளவும் சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டியளவும் வெந்தயம் எடுத்து அதை வறுத்து, தான் பண்ணி, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து ஒன்னரை அவுன்ஸ் அளவு சிற்றாமணக்கெண்ணெயை விட்டு, நன்றாகக் காய்ந்தவுடன் அதில் இந்தத் தூளைப் போட்டு எண்ணெயில் வெந்தயம் நன்றாகச் சிவக்கும் வரை வறுத்து இறக்கி வைத்து விடவேண்டும். மூன்று மணிநேரத்திற்குள் சில தடவை பேதியாகும்.

மலத்துடன் கீரைப் பூச்சிகள் அத்தனையும் வெளியேறிவிடும். இந்த விதமாக மாதத்தில் இரண்டு தடவை சாப்பிட்டால் போதும், கீரைப்பூச்சி அறவே ஒழியும் vendhayam benefits in tamil.

பெருத்த உடல் இளைக்க

உடல் பெருத்து நடக் டக்கக்கூட முடியாமல் சிரமப்படுகிறவர்கள் வெந்தயக் கீரை சாம்பார் செய்து உபயோகிக்கலாம்.

வெந்தயக் கீரை சாம்பாரில் வெள்ளைப் பூசணிக்காய் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் இளைக்க ஆரம்பிக்கும் fenugreek benefits in tamil.

உடல் சூட்டால் அவதிப்பட்டால்

மலச்சிக்கல் பிரச்சனை

இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகமாகும். வெயிலில் சுற்றி வேலை செய்தால் சூடு அதிகமாகி கொப்பளங்கள் கூட உண்டாகும்.

ஆதலின் இவர்கள் வெந்தயக் கீரையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டுப் பால் குடித்தால் நல்ல பயன் கொடுக்கும். வயிற்றில் கீரிப்பூச்சிகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

நீர்க்கோர்க்க முட்டி வலியால் கஷ்டப்பட்டால்

நீர்க் கோர்த்துக் கொண்டு உடல் வலியாலும், முட்டி வலியாலும் சிரமப்பட்டால் உடனே நிவாரணம் அளிப்பது வெந்தயக் கீரை.

வெந்தயக் கீரையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து மை போல அரைத்து எடுத்துப் பழைய சோற்றுத் தண்ணியில் (நீசத் தண்ணீர்) கலந்து சாப்பிட்டால் நீர் வடிந்து குணமாகும்.

உடல் ஆரோக்கியத்திற்க வெந்தயக் காபி

நோய் வராமல் ஆரோக்கியத்துடன் இருக்க வெந்தயக் காபி அருந்தி வந்தால் மிகவும் நல்லது.

150 கிராம் வெந்தயம், முழு கோதுமை 100 கிராம் ஆகிய இரண்டையும் மட்பாண்டத்தில் போட்டு நன்கு வறுத்து தூள் செய்து கண்லாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

காபி பொடிக்குப் பதில் இந்தப் பொடியைச் சேர்த்துக் காபியாக அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நரம்பு தளர்ச்சிக்கு வெந்தயம் மருத்துவ பயன்கள்

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

நரம்புத் தளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் அதிகாலையில் எழுந்து 5 கிராம் வெந்தயத்தைப் பொடி செய்து கஞ்சியில் கலந்து அல்லது பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் இக்குறைபாடு குணமாகிவிடும்.

முடி உதிராமல் இருக்க

முடி உதிராமல் இருக்க வெந்தயம் மருத்துவ பயன்கள்

சில பெண்களுக்கு முடி உதிர்ந்து கொண்டே இருக்கும். இது போன்றவர்கள் வெந்தயத்தை சிறிது நீர்விட்டு மெழுகாக அரைத்து தலையில் தேய்த்துத் தலைய முசி வந்தால் முடி உதிர்வது நின்று விடும். அத்துடன் முடியும் பளபளவென்று கருமையாக வளரும் vendhayam health benefits in tamil vendhayam benefits in tamil வெந்தயம் மருத்துவ பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button