கீரை

வெந்தயக்கீரை பயன்கள்

வெந்தயக்கீரை பயன்கள் vendhaya keerai benefits in tamil

வெந்தயக்கீரை பயன்கள் vendhaya keerai benefits in tamil வெந்தய விதையின் இளஞ்செடிகளையே வெந்தயக் கீரை என்று சொல்லப்படுகிறது. இதைக் கீரை கடையில் தாராளமாக வாங்கலாம். இந்தக் கீரையைப் பருப்புச் சேர்த்துக் குழம்பு வைப்பார்கள். சிலர் கூட்டு வைப்பார்கள். வெந்தயக் கீரையில் உயிர்ச்சத்துகள் நிறைந்திருப்பதால், இதை வாரத்திற்கு இருமுறையாவது அவசியம் சாப்பிட வேண்டும்.

வெந்தயக்கீரை வெந்தயச் செடியின் இலைதான் வெந்தயக்கீரையாகும். இது குளிர்ச்சி நிறைந்தது. இதில் சாம்பார் செய்தால் மணமாக இருக்கும்.

பொரியல், கூட்டு, குழம்பு செய்தும் சாப்பிடலாம். இரும்புச் சத்து நிறைந்துள்ள இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

நமக்கு ஏற்படக்கூடிய ருசியின்மை, பசியின்மை, ஜீரணமந்தம், காசநோய், சொறிசிரங்கு, கண்பார்வை கோளாறுகள், மாதவிடாய் கோளாறு, வாதநோய், மேகநோய், அக்னி மாந்தம், வயிற்று எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, இடுப்புவலி, வாய்ரணம், கட்டி, தொண்டைரணம், மார்புவலி, மூச்சடைப்பு, உட்சூடு, வறட்டு இருமல், தலைச்சுற்றல், மூலநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கு இந்த கீரை சிறந்தது.

வெந்தயக்கீரை பயன்கள் உயிர்ச்சத்துக்கள்

 • 20 கிராம் விடையுள்ள வெந்தயக்கீரையில்
 • 100 மில்லிகிராம் வைட்டமின் A உயிர்ச்சத்தும்,
 • மில்லிகிராம் வைட்டமின் B1 உயிர்ச்சத்தும்,
 • 40 மில்லிகிராம் வைட்டமின் B2 உயிர்ச்சத்தும்,
 • 110 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.
 • இதன் காலரி என்னும் உஷ்ண அளவு 19.

வெந்தயக்கீரை பயன்கள் (vendhaya keerai benefits in tamil)

வெந்தயக்கீரை பயன்கள் vendhaya keerai benefits in tamil

 • வெந்தயக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் காசநோய் படிப்படியாக தணிந்து விடும்.
 • வாத சம்பந்தமான வியாதியினால் கஷ்டப்படுகிறவர்கள் வெந்தயக்கீரையை அடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் வாதநோய் தணிந்து விடும்.
 • வெந்தயக்கீரையைச் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை தெளிவடையும்.
 • எலும்புகள் பலப்படும். எலும்புகள் கெட்டியாகும்.
 • நரம்புகளில் முறுக்கு ஏறும். வயோதிகக் காலத்தில் ஏற்படும் உடல் தளர்ச்சி ஏற்படாது.
 • பற்கள் உறுதிப்படும். பல் சம்பந்தமான நோய் உண்டாகாது,
 • இரத்தம் சுத்தமாகும். எந்தவகையான தொத்து நோயும் உடலைத் தாக்காது.

ஆனால், வெந்தயக்கீரை இரும்புச் சத்து சிறிதளவும் கிடையாது

புதினா மருத்துவ பயன்கள்

மலச்சிக்கல்

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து நன்கு வேகவைத்து தேவையான அளவிற்கு தேனினைவிட்டு நன்கு கடைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.

தலைச்சுற்றல் உடல்சூடு

இந்தக் கீரையுடன் புளி, அத்திப்பழம், திராட்சை முதலிய மூன்றையும் சேர்த்துக் கஷாயம் செய்து இதனோடு தேவையான அளவிற்கு தேனினைக் கலந்து சாப்பிட்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், உடல்சூடு, வறட்டு இருமல், மூலநோய், குடல்ரணம் ஆகிய பிணிகள் நீங்கிவிடும்.

உடல் வலிமை

இந்தக் கீரையை நன்கு சுத்தம் செய்து இதனோடு வாதுமைப் பருப்பு, கசகசா, கோதுமை போன்றவற்றினைச் சேர்த்துத் தேவையான அளவிற்குப் பால் ஊற்றி நன்றாக அரைத்து கலக்கி நன்கு காய்ச்சி, இதனோடு நெய்யை ஊற்றிக் கிளறி சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்; வனப்பினைப் பெறும்; இடுப்பு வலி மறையும்.

மூட்டு வலி

வெந்தயகீரை அம்மியில் வைத்து மைபோல் அரைத்துத் தொடர்ந்து பழைய சாதத்து நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் வலியாலும் மூட்டு வலியாலும் துன்பப்படுபவர்கள் குணமடைவார்கள்.

வீக்கம்

மைபோல் அரைத்தக் கீரையை சூடாக்கி வீக்கம் உள்ள இடத்தில் பூச நாளடைவில் வீக்கம் தணிந்துவிடும்.

வயிற்று வலி

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

உஷ்ணத்தினால் ஏற்பட்ட வயிற்று வலி, குடல் எரிச்சல், சூளை எரிச்சல் போன்ற நோயுள்ளவர்கள் வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் வைத்து நீர் சிறிதுவிட்டு மெழுகாக அரைத்தெடுத்து மோரில் சாப்பிட்டால் இந்நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வந்தால் சதை பெருத்து சிறுநீர் கழிக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

இரவில் கண் விழித்து வேலை செய்கின்றவர்கள் இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உஷ்ணமில்லாமல் குளிர்ச்சி அடையும் வெந்தயக்கீரை பயன்கள் vendhaya keerai benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button