மூலிகைசெடி மரம்

velai keerai in tamil |வேளைக் கீரை பயன்கள்

velai keerai in tamil வேளைக் கீரை மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் ஒரு சிறந்த கிரையாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. பண்டைத் தமிழர்கள் இக்கீரையைப் போற்றி உணவுடன் சேர்த்து உண்டு வந்துள்ளனர். வேளைக் கீரை ஒரு பருவர் சிறு செடி. இது பொதுவாகப் புஞ்செய் திடல்களிலும், வயல் வெளிகளிலும், பொது இடங்களில் தோட்ட வேலிக் கால்களிலும் காட்டுச்செடியாக தானே வளரக்கூடியது.

வேளைக் கீரை பயன்கள் – velai keerai in tamil

வேளைக் கீரை ஏறக்குறைய 22 சென்டி மீட்டர் உயரம் வளரக் கூடிய சிறு பூண்டு வகையைச் சேர்ந்தது. ஏழெட்டு இலைகள் விட்டவுடன் பூத்துக் காய்த்துவிடும். இலைகள் கந்துபிரிவாக இருக்கும்.

வேளைக் கீரையில் ஐந்து வகைச் செடிகள் உண்டு. காய் வேளை, முட்கா வேளை, நல்வேளை, நாய்வேளை, தைவேளை என்பன அவை.

முட்கா வேளை என்பது நீல நிறப் பூக்களைப் பூக்கும். கொத்தவரை போன்ற காய்களைக் காய்க்கும். நாய் வேளை மஞ்சள் நிறப் பூக்களைப் பூக்கும். நல்வேளை வெண்ணிறப் பூக்களைப் பூக்கும். தைவேளை மற்ற வேளைச் செடிகளைவிட இலையிலும், பூ நிறத்திலும், உருவத்திலும் சிறிது வேறுபடும். பூக்கள் வெண்மை கலந்த நீல நிறமாகவும் பெரியதாகவும் இருக்கும் velai keerai in tamil.

கீரை உணவாகப் பயன்படுவது நல்வேளைக் கீரையேயாகும். நல்வேளைக் கீரை ஒருவித நெடிய மணத்தைப் பெற்றிருக்கிறது. இம்மணம் ஏறக்குறைய பெருங்காயத்தின் மணத்தைப் போன்றிருக்கும். இதற்குக் காரணம் இந்தக் கீரையில் அமைந்துள்ள எளிதில் ஆவியாகும் ஒரு வகை எண்ணெய் ஆகும்.

இந்த எண்ணெய் பூண்டு மணமுடையதாகவோ அல்லது கடுகு எண்ணெய் மணமுடையதாகவோ இருக்கும். இலைகளும், கொழுந்தும், பூவும் சமையலுக்குப் பயன்படுகிறது. கீரை கசப்புத் தன்மை உடையது. சமைக்கும் போது இந்தக் கீரையின் கசப்புத் தன்மை நீங்கி விடுகிறது. இக்கீரையுடன் எள் சாந்தும் புளியும் சேர்த்து எளிய கறிவகையாகவும் சமைக்கலாம்.

மூக்கிரட்டைக் கீரை, காணா வேளை, சாறு வேளை, குப்பைமேனி. பிண்ணாக்குக் கீரை முதலியவற்றுடன் வேளைக் கீரையைக் கலை துவட்டலாக வதக்கி தாளித்து அரிசி உணவுடன் கூட்டி உண்ணலாம் அவ்வாறு உண்ணும் போது நெய் அதிகமாக இட்டு உண்ணுதல் வேண்டும் நெய் இல்லையேல் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் velai keerai in tamil.

இக்கீரையைப் பருப்பு வகைகளுடனும் சேர்த்து உண்ட சிறந்ததாகும். சாம்பார் செய்தும் உணவுடன் சேர்த்து உண்ணலாம். கீரைய வேகவைத்து வெள்ளரிக்காய் சேர்த்துத் தயிர் கலந்து மிளகுத் தூளிட்டு நன்றாகப் பிசைந்து தாளிதம் செய்து அவியல் தயாரிக்கலாம். இந்த அவியல் சுவையானதாக இருக்கும்.

கீரையை ஊறுகாய் செய்யவும் பயன்படுத்தலாம். வேளைப் பூவையும் மேலே சொல்லியபடி அவியல் தயாரிக்கலாம்.

வேளைப் பூவை நெய்விட்டு வதக்கித் துவையல் செய்து சோறுடன் சேர்த்து உண்ணலாம். இந்தோனேஷியாவில் இந்தக் கீரை கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. ஆனால் செம்மறி மற்றும் குரும்பை ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் இக்கீரை ஒத்துவருவதில்லை என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நூறுகிராம் வேளைக் கீரையில் 80 விழுக்காடு நீர்ச்சத்தும் 6.5 விழுக்காடு புரதச் சத்தும்; 0.8 விழுக்காடு கொழுப்புச் சத்தும் 3.8 விழுக்காடு தாது உப்புகளும் உள்ளன. மாவுச்சத்து 8.3 விழுக்காடு இக்கீரையில் இருக்கிறது. இந்தக் கீரை 73 கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கிறது.

முப்பெரும் சத்துகள் அடங்கிய உணவு என்று சித்தர்கள் இக்கீரையைக் குறிப்பிடுகின்றனர். முக்கியமாக தாது உப்புக்களாகிய சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து உள்ளதால் சித்தர்கள் இதனை முப்பெரும் சத்துக் கீரை எனக் குறித்தனர் போலும்.

மணிச்சத்து நிறைந்திருப்பதால் இந்தக் கீரையில் ஒருவகை விநோத மணம் வீசும். நூறுகிராம் வேளைக் கீரையில் 778 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும் 100 மில்லிகிராம் மணிச்சத்தும்; 31.6 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உள்ளன. இந்த மிகுதியான இரும்புச் சத்தின் காரணமாகவே இந்தக் கீரையை இரத்த சுத்திக் கீரை எனக் குறிப்பிடுகின்றனர். இரத்தத்தைச் சுத்தி செய்வதோடு இரத்தத்திலுள்ள வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்கள் நன்கு பெருகி வளர்ச்சிபெறவும் இக்கீரை உதவுகிறது.

புதினா மருத்துவ பயன்கள்

வேளைக் கீரை சிறந்து மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. வாத சம்பந்தமான நோய்கள் இக்கீரையால் குணமடையும். இலையைச் சாம்பார் செய்து கொடுக்க வாதப்பிணிகள் சாந்தமாகும்.

சீதள தொடர்புடைய நோய்களை நீக்குவதில் இக்கீரை சிறந்த இடத்தைப் பெறுகிறது. சீதளத்தைத் தணித்து உடல் சூட்டை உருவாக்க வல்லது. சீதளத்தால் உண்டாகும் கொடிய தலை நோய்கு இலையைச் சிதைத்து சாறு பிழிந்து திப்பிலியை உச்சியில் வைத்து அதற்கு மேல் புதுப்பானை ஓட்டை வைத்துத் துணியால் இறுக்கிக் கட்ட, ஒருவித விறுவிறுப்பு உண்டாகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குப் பிறகு கட்டை அவிழ்த்து இலைத் திப்பிலியைப் பிழிய நீர் வடியும், தலைபாரம் குறையும்.

வேளைக் கீரை அதிக பசியை உண்டாக்கக் கூடியது. உணவு செரிமானமாகாமலும், பசி இல்லாமலும் இருப்பவர்களுக்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொடுக்கலாம். உணவு நன்கு சீரணமாவதுடன் நல்ல பசி ஏற்படும். வேளைக் கீரைக்குரிய முக்கிய குணம் யாதெனின் நீரை விரட்டுவதும், வாயுவைக் கண்டிப்பதுமாகும். இது மட்டுமன்றி பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் சிக்குப்பட்டுள்ள உதிரத்தை வெளிப் படுத்தும். இலைகளைக் கசக்கி நரம்பு வலி, மூட்டுவலி, வாதவலி, தலைவலி முதலியவற்றிற்குப் பயன்படுத்தலாம்.

கீரையை அரைத்துச் சாந்தாக்கி மேல் சொல்லப்பட்ட வலிகளுக்குப் பூசலாம். அவ்வாறு பூசும்போது நோய்க்கு மாற்றாக அமைகிறது. ஆனால் இச்சாறு எளிச்சலையும், சிறு கொப்புளங்களையும் உண்டாக்கக் கூடியது. ஆதலால் எரிச்சல் உண்டாகும் போது சாந்தையோ அல்லது சாறையோ கழுவி விடுவது நல்லது. இல்லையேல் பூசிய இடத்தில் புண் உண்டாகிவிடும். கட்டிகள் சீழ்பிடிக்காமல் காப்பதற்கு இந்தக் கீரையைப் பயன்படுத்தலாம்.

தொடர் இருமல் மற்றும் மூச்சடைப்புக்கு இக்கீரையை உள்ளுக்குக் கொடுக்கலாம். வேளைக்கீரையின் சாறை மருந்தாகப் பயன்படுத்து கின்றனர். இலையைப் பிழியும் போதோ அல்லது சாறு எடுக்கும் போதோ நீர் சேர்க்கக் கூடாது.

கீரைச் சாறுடன் எண்ணெய் சேர்த்து இளஞ்சூடாக்கிக் கை பொறுக்கும் அளவிற்கு காது வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். கீழ் வடியும் காதில் இருதுளிகள் விட சிறிது நேரத்தில் எரிச்சல் உண்டாகி பிறகு அடங்கிவிடும். இவ்வாறு காலை மாலை இரு வேளை ஆறு நாட்கள் காதில் விட சீழ் மற்றும் துர்நாற்றம் ஆகியவை நீங்கிவிடும். இது எரிச்சல் உண்டாக்கும் தன்மை உடையது ஆதாலால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நெஞ்சுகரிப்பு மற்றும் பித்தநீர் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்தக் கீரையைப் பயன்படுத்தலாம் velai keerai in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button