நாட்டு மருந்து

வசம்பு மருத்துவ குணங்கள்

வசம்பு மருத்துவ குணங்கள் vasambu uses in tamil வசம்பு இதைப் பொதுவாகப் பிள்ளை மருந்து என்று தான் கூறுவார்கள். குழந்தைகள் உள்ள வீட்டில் வசம்பு கண்டிப்பாக இருக்கும். இருந்தேயாக வேண்டும்.

வசம்பு மருத்துவ குணங்கள் – Vasambu uses in tamil

தேமல் மறைய

மாலை வேளையில் குழந்தையைக் குளிப்பாட்டியவுடன் வசம்பைச் சுட்டுக் கரியாக்கி அதை உரசி, உள்ளங்கை உள்ளங்கால், வயிறு இந்தயிடங்களில் கொஞ்சம் தடவிவிட்டு, நெற்றியிலும் அதையே பொட்டாக வைத்து விடுவார்கள்.

வசம்பைத் தண்ணீரில் ஊறவைத்து அதைச் சிறு துண்டுகளாக வெட்டி மணிபோலக் கோர்த்து, குழந்தைகளின் இடுப்பு, கழுத்து, கை இந்தயிடங்களில் கட்டி வைப்பார்கள். இப்படிச் செய்தால் குழந்தைகளுக்கு எந்த வியாதியும் வராது. தோஷம் தாங்காது என்பது ஆதிகால முதல் நம்பெண்மணிகள் கையாண்டு வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாகும்.

வாந்தி நிற்க

வாந்தி நிற்க

குழந்தைகள் சிலசமயம் அடிக்கடி வாந்தி எடுப்பதுண்டு. இந்த சமயம் வசம்பைச் சுட்ட சாம்பலுடன், கொஞ்சம் தேன் சேர்த்து வாயில் தடவி விட்டால் வாந்தி நிற்கும்.

உஷ்ணபேதி குணமாக

ஐந்து கிராம் வசம்பும், பட்டாணியளவு படிகாரத்தையும் தூள் செய்து தேன் கலந்து இதே அளவில் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்து வந்தால் உஷ்ணபேதி குணமாகும் வசம்பு மருத்துவ குணங்கள் vasambu uses in tamil.

காது நோய் குணமாக

காது நோய் குணமாக

ஒரு சிறு கரண்டியில் இரண்டு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் விட்டு, 5 கிராம் எடை வசம்பு, ஐந்து வெள்ளைப்பூண்டு சுக்கு பற்கள், சுண்டைக்காயளவு இவைகளைத் தட்டிப் போட்டு, எண்ணெயைக் கொதிக்க வைத்து, இறக்கி வைத்து ஆறியபின் சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை காதில் மூன்று துளி வீதம் விட்டு வந்தால் காது நோய் குணமாகும்.

தலையில் ஏற்படும் சிரங்கு, புண், சுண்டு குணமாக

வசம்பு, வெள்ளைப்பூண்டு, அவுரிவேர், வலம்புரிக்காய் இவைகளில் 10 கிராம் எடை வீதம் எடுத்து நன்றாகத் தூள் செய்து லித்து, இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெயில் போட்டு ஏழுநாள் வெய்யிலில் வைத்து எடுத்து வாரத்திற்கு ஒருமுறை மருந்தும் எண்ணெயுமாக எடுத்துத் தலையில் தடவி ஊறியபின், தலைக்குச் கட்ட சியக்காயை அரைத்துத் தேய்த்துத் தலைமுழுகி வந்தால் சொரி, சிரங்கு புண், பொடுகு, சுண்டு இருந்தால் மறையும்.

அஸ்வகந்தா மருத்துவ பயன்கள்

குழந்தை வயிற்று வலிக்கு

வசம்பு சுட்ட சாம்பலுடன் தேன் கூட்டிக் குழைத்து உள்ளுக்குக் கொடுத்து விட்டு, வசம்புச் சுட்டக் கரியை நீர் விட்டு உரசி எடுத்து வயிற்றில் கனமாகப் பூசி விட்டால் வயிற்று வலி குணமாகும்.

கக்குவானுக்கு

வசம்பைச் சுட்டுக் கரியாக்கி, தூள் செய்து சிட்டிகையளவு எடுத்து, முசுக்கைச்சாறு நான்கு துளி விட்டுக் கலக்கிக் காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை தொடர்ந்து கொடுத்து வந்தால் கக்குவான் குணமாகும்.

கொசு ஒழிய

வசம்பைத் தூள் செய்து, அத்துடன் வெங்காயத் தோலையும் சேர்த்து நெருப்பில் போட்டு, சாம்பிராணி போல புகை போட்டால் கொசு எல்லாம் வீட்டை விட்டு வெளியேறி விடும் வசம்பு மருத்துவ குணங்கள் vasambu uses in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button