கீரை

வல்லாரை கீரை பயன்கள்

vallarai keerai benefits in tamil வல்லாரை கீரை பயன்கள்

vallarai keerai benefits in tamil வல்லாரை கீரை பயன்கள் இக்கீரையும் குளிர்ச்சித் தரும் குணமுடையது. கீரை வகைகளிலேயே மருத்துவப்பலன் தருவதில் தலைச் சிறந்தது எனலாம். மிகவும் உயர்ந்த நன்மையான பலன் தரக்கூடிய இக்கீரையை நம்மில் பெரும்பாலோர் உபயோகிக்க விரும்புவதில்லை.

காரணம், இக்கீரையை சமைத்து பக்குவம் செய்த நிலையிலும் கூட, இதன் இயல்பான மண் வாசனை ஓரளவு வருவதே எனலாம். அவ்வாசனையைப் பொருட்படுத்தாது இதனை நாம் உட்கொண் வர, பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது திண்ணம்.

இக்கீரையைச் சமைத்து உட்கொண்டும், மேற் பூச்சாகவும் (அரைத்த சாறு அல்லது விழுதாக்கி) உபயோகித்து வர கீழ்க்கண்ட நோய்களிலிருந்து நிச்சயமாக நிவாரணம் பெறலாம்.

மலக்கழிவு, வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல் நீங்கும். மேலும் பைத்தியம், குஷ்டம், மேகம், மேகப்புண், அண்டவீக்கம், யானைக்கால், கட்டி, காயம், கண்டமாலை, சூதகக்கட்டு, மார்பாணி, வாதவீக்கம், தொண்டைக்கம்மல் போன்ற நோய்களும் குணமாகும் vallarai keerai benefits in tamil வல்லாரை கீரை பயன்கள்.

சிறுவர்களைப் பற்றி வருத்தும் சர்ம நோய்கள், நரம்புக் கோளாறுகள், வயிற்றுக் கடுப்பு, சீதபேதி ஆகியவற்றை நிவர்த்திக்கும் சக்தியும் வல்லாரை கீரைக்குண்டு, இக்கீரையை தைலமாக தயாரித்து எண்ணெய் முழுக்காடி வர, மூளைக்கு வலிவைக் கூட்டும். ஞாபகசக்தி அபிவிருத்தி அடையும்.

இதில் சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து ஆகிய ஊட்டச் சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

இது மிகவும் சக்தி வாய்ந்த கீரையாகும். ஞாபக சக்தியை பெருக்கிக் கொள்ள வல்லாரைக் கீரை மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

இது தொண்டைக்கட்டு, தேமல், படை, வாடி புகைச்சல், கால் எரிவு, வெட்டைக்கும் குடிடம், மாலைக்கண் நீர்ச் சுருக்கு, சூதகக் கட்டு, கண்டமாலை, புகைச்சல், யானைக்கால், இதயநோய், மரம், குரல், சங்கல், போன்ற பல வியாதிகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட பல வியாதிகள் நீங்குவதற்கும் இது பயன்படுகின்றது. இது இரத்தத்தினைப் பெருக்க வல்லது .

வல்லாரை கீரை பயன்கள் ( vallarai keerai benefits in tamil )

vallarai keerai benefits in tamil வல்லாரை கீரை பயன்கள்

இரத்தத்தை சுத்தம் செய்ய

வல்லாரைக் கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அம்மியில் இட்டு அரைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வில்வப் பட்டையை அம்மியில், வைத்து பசும்பாலினை கொஞ்சமாக ஊற்றி நன்கு அனைத்து அந்தச் சாற்றினை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனோடு புளியின் சாறு நெய் கலந்து அடுப்பினில் வைத்து நன்றாக காய்ச்சுதல் வேண்டும். பிறகு பூ கலந்து பாகுபதம் வந்த பிறகு இலுப்பச் சட்டியை இறக்கி கற்கண்டினைப் பொடி செய்துப் போட்டு அதனோடு குங்குமப் வைத்து, பின்னர் குளிர்ந்த பின்பு பாட்டிலில் சேமித்து வைத்து காலையிலும், மாலையிலும் ஒரு தேக்கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் இந்த மருந்தானது இரத்தத்தை சுத்தமாக்க செய்ய வல்லது ஆகும்.

கறிவேப்பிலை பயன்கள்

மாலைக்கண் வியாதி

கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக.

இந்தக் கீரையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து அம்மியில் வைத்து நைசாக அரைத்து அதை ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாலைக் கண் வியாதி நீங்கும்.

ஞாபக சக்தி அதிகரிக்க

ஞாபக சக்தி அதிகரிக்க

இந்தக் கீரையை முதலில் நன்கு சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து வேண்டிய அளவிற்கு சாறு எடுத்துக் கொண்டு அதற்கேற்ப அரிசித் திப்பிலியை எடுத்துக் கொண்டு சாற்றோடு நன்கு ஊறவைத்து அதனை வெயிலில் உலர்த்தி, ஏழு முறை இவ்வாறு செய்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும். தொழு நோயினை அகற்றக் கூடிய சஞ்சீவியாக இந்தக் கீரை போற்றப்படுகின்றது.

இந்தக் கீரையை தொழுநோயின் ஆரம்ப காலத்திலேயே பயன்படுத்தினால் நோய் நீக்கம் பெற்று பயன் அடையலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மனவளர்ச்சி குன்றிய

மன வளர்ச்சிக் குன்றியோர் இந்தக் கீரையைப் பருப்போடும் மற்றைய பயிறு வகைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வருதல் வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவினில் சேர்த்துக் கொள்ளுதல் நல்து. இது மூளையின் ஆற்றலினைப் பெருக்கின்றது.

மலச்சிக்கல் பிரச்சனை

மலச்சிக்கல் பிரச்சனை

இந்தக் கீரையை சமைத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி விடும். இந்தக் கீரையை இரவு வேளைகளில் சாப்பிடுதல் கூடாது.

இந்தக் கீரையுடன் பொடுதலை இலையைச் சேர்த்து பொடியாக்கி அந்தத் தூளுடன் தேனையும் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயானது கட்டுக்குள் அடங்கி விடும்.

வாயு வீக்கம், விரை வீக்கம்

இந்தக் கீரையுடன் மிளகினையும் சேர்த்துப் பச்சையாக மென்று சாப்பிட்டால் வயிற்றில் உள்ள வெட்டுச் சூடு, மர்ம நோய்கள் ஆரம்ப காலத்திலேயே நீங்கிவிடும். தேவையான அளவிற்கு வல்லாரை இலை கொண்டு ஆய்ந்து அம்மியில் நீர் விட்டு நன்கு அரைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் வாயு வீக்கம், விரை வீக்கம் போன்ற நோய்கள் நீங்கும்.

முகம் பொலிவு பெற

முகம் பொலிவு பெற

வல்லாரை இலையைப் பறித்து சுத்தம் செய்து, நீரில் கழுவி உரலில் போட்டு, அதனோடு டைமண்ட் கற்கண்டும், குங்கும பூவும் போட்டு பசும் பாலினை ஊற்றி நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவிற்கு 96 நாள்கள் சாப்பிட்டு வந்தால் முகம் ஒளி பெறுதலுடன், நாம் இளமையாக இருக்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

வல்லாரை மாத்திரைகளை வாங்கி நாம் உண்டு வந்தாலே போதும் மேற்கூறிய அனைத்து வல்லமைகளும் நமக்கு வந்து விடும் vallarai keerai benefits in tamil வல்லாரை கீரை பயன்கள்.

வல்லாரை நீர்ப்பாங்கான இடங்களில் செழித்து வளரக்கூடியது வல்லாரை. இது வட்டமான இலைகளோடு படரும் ஒருவகைக் கொடியாகும். இதன் இலையின் ஓரத்தில் ரம்பம் போன்று பற்கள் இருக்கும்.

வல்லாரையைக் கற்ப மூலிகைகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. வல்லாரை இலையில் குளுக்கோஸ், இரும்பு, கால்ஷியம் போன்ற சத்துகள் மிகுதியாக உள்ளன.

வல்லாரை இலையை நெய்யில் வதக்கி உப்பு, புளி, மிளகாய் சேர்த்துத் துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

காசம்- இருமல்-ஈளை

பல நோய்களை தீர்க்கும் வல்லாரை இந்நோயினால் துன்பப் படுபவர்களுக்கும் மருந்தாகப் பயன்பட்டுப் பலன் அளிக்கின்றது.

வல்லாரை இலையினைக் கொண்டுவந்து மெழுகாக அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து 100 மில்லி பசும்பாலில் கலந்து குடிக்கவும்.

இதுபோன்று தினசரி தொடர்ந்து குடித்து வந்தால் காசம், இருமல், ஈளை போன்ற நோய்கள் குணமாவதுடன், மேகநீர் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும்.

வாயு வீக்கம்- விரைவிக்கம்

இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்தெடுத்து வாயு வீக்கம் விரை வீக்கம் உண்டான இடத்தில் வைத்துக் கட்டுப் போடவும்.

இதனால் வாயு வீக்கம், விரைவீக்கம் அகலும். தவிர யானைக் கால் வீக்கம் இருந்தாலும் இதனைவைத்துக் கட்டினால் குணமாகும்.

எல்லாவிதசுரங்கள் குணமாக

வல்லாரை இலையைக் கொண்டு வந்து அதன் அளவு எடைக்கு சமமாக துளசி, மிளகு சேர்த்துக் கல்வத்திலிட்டு வல்லாரை சாறினால் மைபோல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அதனை குன்றிமணி அளவாக மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்திப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். எவ்வித சுரம் ஏற்பட்டாலும் காலை, மாலை இரு வேளைக்கும் கொடுத்தால் சுரம் குணமாகும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் ஊறல் படைகளுக்கு

குழந்தைகளுக்கு உண்டாகும் ஊறல் படைகள் முதலானவற்றுக்கு வல்லாரையின் சாறு நல்ல பலன் தரும்.

வல்லாரை இலையைக் கொண்டு வந்து சாறு பிழிந்து அந்தச் சாறில் பசும்பால் கலந்து சிறிது அதிமதுர தூள் சேர்த்துக் கொள்ளவும்.

இந்நோய் கண்ட குழந்தைக்கு வயதுக்குத் தக்கபடி கால் / அரை / ஒன்று / இரண்டு சங்கு அளவுக்கு 2 வேளைவீதம் தொடர்ந்து 5 நாட்கள் கொடுத்து வந்தால் நல்ல பயனைத்தரும்.

உடல் சோர்வுக்கு

ஒரு சிலர் உடல் பலஹீனத்தால் எப்போதும் சோர்ந்து காணப் படுவார்கள். இது போன்றவர்களுக்கு வல்லாரை சூப் செய்து கொடுத்தால் உடல் சோர்வுநீங்கி பலஹீனம் அகலும்.

வல்லாரை இலையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துக் கடைந்து கொள்ளவும்.

பின்னர் இதில் தண்ணீர் கலந்து சூடாக்கி இறக்கி, இந்தச் சூப்பைக் குடியுங்கள். சோர்வு நீங்கி புத்துணர்வு கொள்வீர்கள் vallarai keerai benefits in tamil வல்லாரை கீரை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button