வீட்டு மருத்துவம்

அதிர்ஷ்டம் தரும் வலம்புரி சங்கு | valampuri sangu benefits in tamil

வலம்புரி சங்கு அறிமுகம் 

valampuri sangu benefits in tamil “ வாழ்க வளமுடன் “வணக்கம் நண்பர்களே, நாம் இந்த பதிவில் வலம்புரி சங்கு பற்றி தகவல்களை பார்க்கலாம். பொதுவாக அந்த காலத்திலே நல்ல விஷயங்களுக்கும்,வீட்டில் துக்கம் காரியங்களுக்கும் பயன்படுத்திருக்காங்க.

அதிலும் வலம்புரி சங்குகளை கோவில்களிலும்,வீடுகளிலும் செய்யப்படும் பூஜைகளில் அதிகமாகவே பயன் படுத்திருக்காங்க.ஏனெனில் வலம்புரி சங்கு ஒரு தெய்வீக பொருளாகவும் அதிர்ஷ்டம் நிறைந்த பொருளாக வழங்கப்பட்டுவந்துள்ளது.

சாகா வரம் தரும் அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று.

இது போன்று வலம்புரி சங்குகளுக்கு நிறைய புராணங்கள் சொல்லப்படுகின்றன.வாங்க நாம் அதைப்பற்றி தெளிவாக பார்க்கலாம்.

 

வலம்புரி சங்கு என்றால் என்ன – valampuri sangu benefits in tamil

வலம்புரி சங்கு என்பது சங்குவகைகளில் காணப்படக்கூடிய ஒரு அரியவகை சங்கு ஆகும். இவை வலது பக்கம் சுழிந்து காணப்படும்.சங்குகளில் பெரும்பாலும் பல வகைகளில் காணப்பட்டாலும் வலம்புரிச்சங்கு சிறப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது.

கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது ‘ஓம்’ என்ற சப்தத்தை எழுப்பும்.

சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும்.

வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இரண்டு வகையும் கடலில் வாழும் சங்கு இனப் பிராணிகள்தான்.

ஆனால் இந்துக்கள் என்ன காரணத்தால் வலம்புரிச் சங்குகளைப் புனிதமாகக் கருதுகின்றனர் என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வ காரணமும் கிடைக்கவில்லை. இவைகள் அபூர்வமாகக் கிடைப்பதாலும் விஷ்ணுவின் கையில் இருப்பதாலும் தெய்வப் பட்டம் சூட்டினரா என்றும் தெரியவில்லை.

இவை அபூர்வமாகவே கிடைக்கின்றன. இந்த வலம்புரி சங்கு மிகவும் பெரும் மதிப்பாக கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வலம்புரிசங்குகளை பற்றி புராணங்கள்,தமிழ் சங்க இலக்கியங்களில் புலவர்கள் நிறைய கருத்துக்களை சொல்லிருக்கிறார்கள்.

அதிர்ஷ்டம் தரும் வலம்புரி சங்கு valampuri sangu benefits in tamil வலம்புரி சங்கு என்றால் என்ன வலம்புரி சங்கின் நன்மைகள்

சங்கு வகைகள்

valampuri sangu benefits in tamil  கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர்.

இதற்குத் தனியான பெயரும் உண்டு. கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’; பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு:

 • தர்மன்- ‘அநந்த விஜயம்’
 • பீமன்- ‘பௌண்டரம்’ 
 • அர்ஜுனன்-‘தேவதத்தம்’
 • நகுலன்- ‘சுகோஷம்’ 
 • சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’

வலம்புரி சங்கின் நன்மைகள் – valampuri sangu benefits in tami 

 • வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் சர்வ லட்சணமும் நிறைந்து காணப்படும் என்பது ஐதீகம்.
 • அக்கால பெரியவா எல்லாருமே வீட்டில் வலம்புரி சங்கினை வைத்து பூஜை செய்வதும் உண்டு.
 • வலம்புரி சங்கில் கொஞ்சம் துளசி தீர்த்தத்தை விட்டு பின்பு அதை அருந்துவது அமிர்தத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது.
 • கடவுள் பக்தி உடையோர் வலம்புரி சங்கினால் கடவுளுக்கு செய்யப்படும் தீர்த்தத்தினால் தோஷம் விலகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கிறது.
 • கார்த்திகை மதம் வரக்கூடிய சோமவாரத்தில் 108 சங்குகளினால் அபிஷேகம் செய்யப்பட்டு நடுவில் வலம்புரி சங்கு வடிவில் குபேரன் இருப்பது விசேஷமானது.
 • ஒரிஜினல் வலம்புரி சங்கு வைத்திருப்போர் ஒரு விதமான நல்ல உணர்வினை உணர்வோர். அதை ஆங்கிலத்தில் பாசிட்டிவ் வைப்ரஷன் என்று சொல்வார்கள்.

அதிர்ஷ்டம் தரும் வலம்புரி சங்கு valampuri sangu benefits in tamil வலம்புரி சங்கு என்றால் என்ன வலம்புரி சங்கின் நன்மைகள்

வலம்புரி சங்கு பூஜை செய்யும் முறை

 • கடன் பிரச்சினை உடையோர் வலம்புரி சங்கினை வாசல் மேற்படியிலோ இல்லை வீட்டின் நடுபகுதியில் வைத்து காலையில் குளித்து விட்டு பூஜை செய்வது நல்ல பயனை அளிக்கும் .
 • சங்கினை கீழே வைக்காமல் அவர் அவர் வசதி ஏற்ப வெள்ளி தட்டிலோ அல்லது செம்பு தட்டிலோ வைத்து பூக்களை கொண்டு பூஜித்து வ்ருவது நல்லது.
 • பௌர்ணமி அன்று சங்கிற்கு பூக்களால் அலங்காரம் செய்து பூஜைகள் செய்து பின்பு பாலினை சங்கினில் ஊற்றி அதனை பருகுவது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல பாக்கியத்தையும் கொடுக்கும்.

அதிமதுரம் பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button