செடி மரம்மூலிகை

வாகை மரம் பயன்கள்

vaagai maram benefits வாகை மரம் பயன்கள் வாகை உயர்ந்து வளரக்கூடிய மரமாகும். இது மகரந்தத் தாள்களையும், தட்டையானக் காய்களையும் உடையது. காய்கள் உணர்ந்தால் வெண்மையாக இருக்கும். இது தோட்டங்களிலும், காடுகளிலும் தானே வளர்கிறது. இந்த மரத்தின் இலை, பூ பட்டை, பிசின், விதை, வேர் ஆகியவைகள் எல்லாம் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.

வாகை மரம் பயன்கள் – vaagai maram benefits

இரத்த மூலம், வெப்புக் கழிச்சல்

இது போன்ற நோய்களுக்கும் மற்றும் சில விஷங்கள், தாகசுரம், பிரமேகம் போன்றவற்றிற்கும் இம்மரத்தின் பட்டை மருந்தாகிறது.

வாகை பட்டையைக் கொண்டு வந்து நிழலில் நன்கு உணர்த்தி தூளாக்கிப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இத்தூளில் அரைத் தேக்கரண்டி வீதம் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் மேற் கண்ட நோய்கள் குணமாகும்.

கிராம்பு பயன்கள்

தரப்பு, வீக்கம், கட்டி நீங்க

தாப்பு, வீக்கம், கட்டி போன்ற குறைபாடுகள் குணமாக வாகைப் பூவைக் கொண்டு வந்து அம்மில் வைத்து மென்மையாக அரைத்து மேற்கண்ட குறைபாடுகள் உள்ள இடத்தில் பூசி வந்தால் குணமாகும்.

இதன் பூவை அரைத்துச் சுண்டக்காய் அளவு வெந்நீரில் கலந்து கொதேது வந்தால் பாம்பு நஞ்சு இறங்கும். கடிவாவினும் வைத்துக் கட்டலாம்.

தாதுகட்டி உடல் பலம் பெற

வாகைப் பிசினைக் கொண்டு வந்து புது மண் சட்டியில் போட்டு, வறுத்தெடுத்துத் தூளாக்கிக் கொள்ளவும்.

இந்தத் தூளிலிருந்து வேளைக்கு 2 கிராம் வீதம் எடுத்து காலை, மாலை பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாதுகட்டி உடல்பலம்பெறும்.

ஈறுசிதைவு, பல்வலிக்கு

பல்வலி குணமாக

ஈறு சிதைவு, பல்வலிக்கு வாகைப் பட்டையைக் கொண்டு வந்து உலர்த்தி எரித்துக் கரியாக்கித்தூளாக்கவும்.

இந்தத் தூளில் பல் துலக்கிவந்தால் ஈறு சிதைவு, பல்வலி ஆகியவைகள் குணமாகும் vaagai maram benefits வாகை மரம் பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button