வீட்டு மருத்துவம்

uses of olive oil in tamil | ஆலிவ் ஆயில் பயன்கள்

uses of olive oil in tamil ஆலிவ் ஆயில் பயன்கள் ஆரோக்கிய வழங்குவதில் ஆலிவ் எண்ணெய் முன்னிலை வகிக்கிறது .உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இந்த எண்ணெயில் உள்ள சத்துக்களைப் பட்டியல் போடுவோம். ஆலிவ் எண்ணெய் தன் நறுமணத்தாலும், சுவையாலும், சத்து பொருட்களாலும் உலகலாவிய புகழ் பெற்றது. இந்த எண்ணை அறுவடை செய்யப்படும் ஆலிவ் காய்களின் முதிர்ச்சிக்கு ஏற்ப நிறம் மாறும்.

uses of olive oil in tamil – ஆலிவ் ஆயில் பயன்கள்

ஆலிவ் எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் வழங்கக்கூடியது .100 கிராம் ஆலிவ் எண்ணெய் சுமார் 88 சதவீதம் ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.

அதிக கொதிநிலை கொண்டது ஆலிவ் எண்ணெய் .210 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் தான் ஆவியாகும். என்பதால் உணவுப் பண்டங்கள் விரைவில் சமைக்க உதவியாக இருக்கிறது.

அதிக அளவில் லிப்பிடுகள் இதில் உள்ளன .இவை பூரிதமான கொழுப்பு,ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு, பலபாரிதமாகாத கொழுப்புகளை, ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாக மாற்றி வழங்கும். கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து,நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்கள் எளிதில் கெடுவதில்லை. நல்ல குளிர்ச்சி கொண்டது;நீண்ட காலம் வைத்திருந்து சமைக்கப் பயன்படுத்தலாம் .

ஒற்றை பூரிதமாகாத கொழுப்புகள், இதய பாதிப்புகள், மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் காப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒமேகா 3,ஒமேகா 6,போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஆலிவ் எண்ணையில் உள்ளன. இவை மூளைத்திறனுக்கு அத்தியாவசியமாகும்.

ஏராளமான நோய் எதிர்ப்புப் பொருட்களும் ஆலிவ் எண்ணெய்யில் இருக்கின்றன. அவற்றுள் ஆலிரோபின், ஆலோகேன்தால், போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள் குறிப்பிடத்தக்கவை, இவை வைட்டமின்களுடான் இணைந்து புற்றுநோய் ,  உடல் எரிச்சல், கரோனரி தமனிபாதிப்பு, நரம்பு வியாதிகள் நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு எதிராக செயலாற்றக் கூடியது.

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்-இ உள்ளது. 100 கிராம் ஆலிவ் எண்ணையில் 14.39 மைக்ரோகிராம் அளவு உள்ளது. இது தினமும் உடலில் சேர்க்க வேண்டிய அளவான ஆகிய அளவின்படி 96 சதவீதமாகும் இது செல் சவ்வுகள் உறுதியாக இருப்பதற்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை இடம் இருந்து தற்காப்பு பெறவும் உதவியாகஇருக்கும்.

வைட்டமின் கே ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு உள்ளது.இது எலும்பின் எடையை அதிகரிக்க அவசியமாகும். இது எலும்பு பாதிப்புகளை கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பழங்கள் நன்மைகள்

ஆலிவ் ஆயில் பயன்கள்

ஆலிவ் எண்ணெய் நன்மைகள் uses of olive oil in tamil olive oil for face benefits in tamil olive oil uses in tamil ஆலிவ் ஆயில் பயன்கள்

ஆலிவ் எண்ணெய் பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது.

பொறித்து எடுக்கும் எண்ணெய்ப் பண்டங்கள் தயாரிக்க உகந்தது ஆலிவ் எண்ணெய்.

ஸ்பெயின் நாட்டின் ஆன்டலுசியன் சாலட் ஆலிவ் எண்ணையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.தக்காளி, வெள்ளரிக்காய், குடமிளகாய், ‘ வெங்காயம் மற்றும் நறுமண இலைகளுடன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது.

இத்தாலியின் எக்பிளான்ட் பிரை பிரசித்தி பெற்றது .கத்தரிக்காய்,தக்காளி, வெங்காயம் ஆகியவை ஆலிவ் எண்ணெயில் பொறித்து தயாரிக்கப்படுகிறது இந்த உணவு .

பிரான்சில் ஆலிவு டபனேட் விரும்பி சுவைக்கப்படுகிறது. அக்ரோட்டு கொட்டைகள்,வெங்காயம், பூண்டு,மிளகு,தூள் எலுமிச்சை சாறு , ஆகியவற்றில் ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சுவைக்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button