மூலிகைசெடி மரம்

ஊமத்தை பயன்கள்

ஊமத்தை பயன்கள் datura metel in tamil umathai benefits in tamil  ஊமத்தை என்ற மூலிகை மிக அற்புதமான மூலிகையாகும். ஊமத்தை விஷத்தன்மை உடையதானாலும் மருத்துவத்திற்கு மகத்தான பணியைச் செய்கிறது. இரு ஒரு செடியினமாகும். இந்தச் செடியினுடைய இலைகள், விதைகள், வேர்கள், உலர்ந்த இலைகள், உலர்ந்த பழங்கள் இவைகள் எல்லாம் மருத்துவத்திற்குப் பயன்படுபவையாகும்.

இதன் இலைகள் அகன்று கரும்பச்சை நிறத்தில் இருக்கம். பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் உருண்டையாகவும் அதனைச் சுற்றி முட்கள் நிறைந்திருக்கும்.

ஊமத்தை வெள்ளை, நீலம், கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் பூக்கும். மூன்று இலைகள் உண்டு. இவற்றில் கருப்பு நிறச் செடியே உயர்ந்த மூலிகையாகக் கருதப்படுவதால் இதனையேப் பயன்படுத்த வேண்டும்.

இது கிடைக்காத தருணத்தில் மற்ற இலைகளைப் பயன்படுத்தலாம். மருத்துவப் பயனில் எந்த மாற்றமும் இருக்காது.

ஊமத்தை விஷத் தன்மை கொண்டதாகையால் பொதுவாக மருத்துவத்தில் வெளிப்பூச்சாகவேப் பயன்படுத்தப்படுகிறது.

ஊமத்தை பயன்கள் – umathai benefits in tamil

நாள்பட்ட காதுவலி, சீழ்வடிதல்

காது வலி

காது வலி குணமாகாமல் தொல்லைக் கொடுத்து வந்தாலோ, காதில் சீழ்வடிந்தாலோ ஊமத்தை இலை நல்ல பலனைக் கொடுக்கும் ஊமத்தை பயன்கள் datura metel in tamil umathai benefits in tamil

ஊமத்தை இலையைக் கொண்டு வந்து நன்றாகக் கசக்கிச் சாறு பிழிந்து இந்த சாற்றில் இரண்டு துளி காதில் விட்டு வந்தால் மேற்கண்ட நோய் குணமாகும்.

புட்டாளம்மை

ஊமத்தை காயைக் கொண்டு வந்து அத்துடன் மஞ்சள் சேர்த்து மேற்பூச்சாக தடவினால் புட்டாளம்மை குணமாகும்.

ஆரம்பகால ஆஸ்துமாவுக்கு

தூதுவளை கீரை இளைப்பு நோய் குணமாக

ஆஸ்துமா நோய் இருந்தாலே அல்லது ஆரம்பக் கட்டமாக இருந்தாலோ கீழக்காணும் முறையைக் கையாண்டு குணமடையலாம்.

ஊமத்தை இலையையும், விதையையும் பொடியாக செய்து, சிகரெட்டாகவோ, புகைக் குழாயில் போட்டு இரவில் படுக்கையின் பக்கத்தில் வைத்துக் கொண்டு புகைத்தால் ஆரம்ப கால ஆஸ்துமா உடனடியாகக் குணமாகும்.

தவிர இரைப்பு நோயினால் வெளிவராது சிரமப்படும் கோழை உடனடியாக வெளியாகிவிடும்.

இதனுடைய இலையையும், தண்டையும் சுருட்டிப் புகையாகப் படித்தால் ஆஸ்துமா நோய் மட்டுப்படும்.

கண்வியாதிக்கு

மஞ்சள் காமாலைக்கு

கண் வியாதிக்கு இதன் இலையைக் கொண்டு வந்து வதக்கி, சூடு அதிகம் இல்லாமல் கொஞ்சம் ஆறவிட்டு கண்களின் மீது (கண்களை மூடி இமைகளின் மீது) கட்டினால் கண்வியாதிகுணமாகும்.

தவிர விரைவீக்கம், உடலில் உண்டாகும் கட்டிகள் ஆகியவற்றிற்கு இளஞ்சூட்டோடு அதன் மீது வைத்துக் கட்டினால் குணமாகும்.

வில்வம் மருத்துவ குணங்கள் 

பால்வினை நோய்க்கு

பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த இலையைப் பறித்து வந்து சுத்தமாக கழுவி இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்தசாறில் சிறிதளவு எடுத்து (அதிகம் எடுக்கக் கூடாது. ஏனெனில் இது விஷத்தன்மை மிக்கது ) பசும் பாலிட்டு கலக்கிச் சாப்பிட்டு வரவும். இதனால் பால்வினை நோய் குணமாகும்.

மனநோயாளிக்கு

மனநோயாளியாக இருந்தால் ஊமத்தையின் வேரை சிறிதளவு எடுத்துப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து வெண்ணெய் கலந்து குடித்து வந்தால் மனநோயாளியை விரைவில் குணப்படுத்தலாம்.

ஆண்மைக்கு

விதையிலிருந்து தயாரிக்கப்படும் நெய்யை எடுத்து ஆண் உறுப்பின் மீது ஆண்மையற்று மனக் கவலைப்படுகின்றவர்கள், ஊமத்தை தடவி சிறந்த ஆண்மை பெருக்கத்தைப் பெறலாம். இதன் விதையிலிருந்து தயாரிக்கப்படும் களிம்பை உபயோகித்து உடலிருள்ள சீலைப்பேன்களை ஒழிக்கலாம்.

மாதவிடாய் கோளாறுகள்

பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி, சிறுநீர் எரிச்சல் போன்ற கோளாறுகளுக்கு ஊமத்தை விதை மருந்தாகிறது.

ஊமத்தை விதையை நன்கு நைத்து தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளவும். மாதவிடாய் ஆன நாட்களில் அடிவயிற்றில் தடவி வர மாதவிடாய் கோளாறுகள் அகன்றுவிடும்.

மூட்டுகளில் வீக்கம், நரம்பு சிலந்தி ஆகியவற்றிற்கு

மூட்டுகளில் வீக்கம் நரம்பு சிலந்தி மற்றும் வெளிமூலம், நரம்பு பாதிப்பினால் உண்டாகும் வலிகள், புண்கள் ஆகிய பிணிகளுக்கு சிறந்த மருந்து ஊமத்தை ஆகும்.

ஊமத்தை இலையையும், அரிசி மாவையும் சம அளவாக எடுத்து சிறிது நீர் விட்டு மெழுகாக அரைத்து அடுப்பில் வைத்து களியாகக் கிண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த களியை எடுத்து மூட்டுகளில் வீக்கம், நரம்பு சிலந்தி, வெளிமூலம், நரம்பு பாதிப்பின் மூலம் உண்டான வலி, புண் ஆகிய பிணிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல்

பெண்களுக்கு வெள்ளைப் படுதல் உண்டானால் உடனடியாக ஊமத்தை இலையை இடித்து சாறு பிழிந்து அதில் 5 முதல் 8 துளிகள் சாறை தயிருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் இக்குறை குறைந்து குணமாகும் ஊமத்தை பயன்கள் datura metel in tamil umathai benefits in tamil

தலையில் புழுவெட்டா?

தலையில் புழு வெட்டினால் முடி உதிரந்து அசிங்கமாக இருந்தால், பிஞ்சு ஊமத்தங்காயைக் கொண்டு வந்து உமிழ்நீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்து அதனைத் தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் வெகுவிரைவில் முடி வளருவதைக் காணலாம்.

தாய்மார்களுக்கு பால்கட்டிக் கொண்டால்

குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குச் சிலசமயம் பால் கட்டிக் கொண்டு மார்பு வீக்கம் உண்டாகும். இதற்கு ஊமத்தை இலையை வதக்கி சூட்டோடு மார்பின் மீது ஒத்தடம் கொடுத்துவந்தால் இக்குறை நீங்கும்.

ஆறாதபுண், வயிற்றில் பூச்சி இவற்றிற்கு கஷாயம்

ஊமத்தை இலையைக் கொண்டுவந்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி, இதில் சிறிதளவு குடித்துவந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.

உடலில் உண்டான புண் ஆறாமல் இருந்தால் இந்தகஷாயத்தினால் ஒருநாளைக்கு மூன்று வேளை கழுவி வந்தால் ஆறாத புண் ஆறிவிடும்.

கணுக்காலில் வீக்கம்

கணுக்காலில் வீக்கம் இருந்து வலி, பிடிப்பு இருந்து துன்பத்தைக் கொடுத்து வந்தால் ஊமத்தை இலை, நொச்சி இலை, தழுதாழை இலை ஆகிய மூன்றையும் சம எடை எடுத்துச் சுத்தமாகக் கழுவி அம்மியில் வைத்து விழுது பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலக் கரண்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அதில் அரைத்த விழுதைப் போட்டுக் கிளறி அடுப்பில் வைத்து களிபோல் செய்து உடல் பொறுக்கக் கூடிய சூட்டல் கால் ரூபாய் எடை பொரித்து வெங்காரம் போட்டுப் பிசறிக் கணுக்காலில் ஏற்பட்ட வீக்கத்தில் பற்றுப்போட்டுச் சுத்தமான துணியால் கட்டு போடவும். இதுபோல் தினசரி செய்து வந்தால் விரைவில் கணுக்காலில் இருந்த வீக்கம், வலி, பிடிப்புகள் அகன்றுவிடும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button