வீட்டு மருத்துவம்

மஞ்சள் மருத்துவ பயன்கள்

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள் மஞ்சள் எத்தனையோ வகையான மருந்துப் பொருள்களை பற்றிக் கூறவந்த நான் முதலில் மஞ்சளைத் தேர்ந்தெடுத்தற்குப் பல காரணங்கள் உண்டு.

மஞ்சள் ஒரு மங்களகரமான பொருள் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் மஞ்சளைத் தட்டில் வைப்பது நம் நாட்டுப் பழக்க வழக்கங்களில் ஒன்று.

புதிய உடை அணியுமுன் மஞ்சளை உரசி உடையின் விளிம்பில் சிறிதளவு தடவிய பின்னரே அதை அணிகிறோம் அதேபோல, புதிய கணக்குப் புத்தகத்தைத் துவங்கும் போது மேலும், உட்புறத்திலும் சிறிதளவு மஞ்சளைத் தடவுகிறோம். மங்கள காரியம் பற்றி எழுதும் தபால் கார்டு, கவர் இவற்றின் மூலையில் மஞ்சளை உரசித் தடவுகிறோம் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

வெள்ளிக் கிழமைகளில் வீட்டு வாசற்படியின் மேல் அரைத்த மஞ்சளைத் தடவி அதன் மேல் குங்குமம் இடுவதையும் நாம் காண்கிறோம்.

மஞ்சள் இல்லாத வீடு பெண்கள் வசிக்காத வீடாகத்தானிருக்கும். இவ்வளவு மங்கள காரியங்களுக்கும் பயன்படும் மஞ்சள் மருத்துவ முறைக்கும் பயன்படுவதால் இந்த நூலில் முதன் முதலாக மஞ்சளை பற்றிக் கூற விரும்பினேன்.

சமையலுக்குத் தேவையான பொருள்களில் மஞ்சள் அதிமுக்கியமானது. மஞ்சள் கிழங்கு இனத்தைச் சேர்ந்தது.

பச்சை மஞ்சளை அவ்வளவாக எந்த வகைக்கும் சேர்ப்பதில்லை. பதம் செய்யப்பட்டு காயவைத்த மஞ்சளையே சமையலுக்கும், மருந்து வகைக்கும் பயன்படுத்துகிறோம்.

மஞ்சளில் பலவகைகளுண்டு. அவைகளில் நீளமஞ்சளும், குண்டு மஞ்சளும் தான் மக்களிடையே அதிக அளவில் பயன்பட்டு வருகிறது.

சமையலுக்குக் குண்டு மஞ்சளை உபயோகப்படுத்துவதில்லை. குண்டு மஞ்சளை பழங்கால பழக்க வழக்கங்களை விடாது கடைபிடித்து வரும் பெண்கள் ஸ்நானம் உடலுக்கும், பலவகையான செய்யும்பொழுது உரசி, முகத்திற்கும், திருமாங்கல்யம் கோர்த்த சரட்டுக்கும் பூசுவது இன்றளவும் நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

மருத்துவ முறையில் கூட குச்சி மஞ்சளைத்தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மஞ்சளுக்கு ஒருவிதமான வாசனை உண்டு. பலவகையான சமையல் பதார்த்தங்களுடன் மஞ்சளைச் சேர்ப்பது நம் நாட்டுப் பழக்கம்.

நாம் உண்ணும் பதார்த்தங்களுடன் விஷக்கிருமிகளும் கலந்திருக்கும். இந்த விஷக்கிருமிகளை அழிப்பதற்காகத்தான் மஞ்சளை பதார்த்தத்துடன் சேர்க்கின்றனர். நமது முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வழிகளில் ஒன்று.

மஞ்சள் நமது பதார்த்தங்களுக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. அதோடு விஷக்கிருமிகளையும் கொல்லப் பயன்படுகிறது.

Table of Contents

மஞ்சள் மருத்துவ பயன்கள் (turmeric in tamil)

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்

மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாமல் மருத்துவ முறையில் பல வியாதிகளைக் குணப்படுத்தவும் பயன்பட்டு வருகிறது. இந்த மஞ்சள் என்னென்ன வியாதிகளைக் குணப்படுத்தும் என்பதைப் பற்றிக் கூறுவோம்.

மேக வியாதியால் ஏற்படும் புண்கள் குணமாக

மேக நீர் சம்பந்தமாக உடலில் பலவகையான புண்கள் ஏற்படும். வெடிப்புகள் தோன்றும். இவற்றைக் குணப்படுத்த மஞ்சள் நன்கு பயன்படுகிறது.

பொடுதலையின் காய் ஆழாக்களவு கொண்டுவந்து அதே அளவு குச்சி மஞ்சளையும் சேர்த்து மைபோல அரைத்து வைத்துக் கொண்டு இரவில் மேகப் புண்ணின்மேல் தடவி வைத்திருந்து, தினசரி காலையில் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிக்கும் பொழுது சுட்ட சீயக்காயை அரைத்துத் தேய்க்க வேண்டும். இந்தவிதமாக இருபது நாட்கள் செய்து வந்தால் மேகப்புண் முழுவதும் ஆறிவிடும் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

காதில் சீல்வடிவதை குணப்படுத்த

காதில் சீல்வடிவதை குணப்படுத்த

இரவாடரை கிராம் மருசளை எடுத்து அதைப் பெரும் பருக்கையாக உடைத்து ஓர் இரும்புக் கரண்டியில் போட்டு, பத்து வெள்ளைப் பாடு பற்களையும் காருத்து அதோடு சேர்த்து, வேப்ப எண்வொய் மூன்று தேக்கரண்டி அளவு அதில்விட்டு, கரண்டியை அடுப்பில் வைத்து மஞ்சளும், பூண்டும் சிவந்துவரும்வரை நன்றாகக் காயவைத்து, ஆறவிட வேண்டும்.

ஆறிய பிறகு, மெல்லிய துணியில் வடிகட்டி சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை காதைச் சுத்தம் செய்துவிட்டு, துளிக்கணக்கில் காது நிறைய விட்டு, பஞ்சைக் கொண்டு அடைத்து விடவேண்டும்.

இந்தவிதமாக ஏழு நாட்கள் வரை செய்துவந்தால் காதில் சீழ் வருவது நின்றுவிடும்.

சிலருக்கு வேப்ப எண்ணெயின் வாசனை பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிக் கொள்ளலாம். இதனால் குற்றமில்லை.

காது நெகிழ்வுக்கு

காதில் சிறுகட்டிகள் கிளம்பி இருந்தாலும், காதினுள் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அதன் காரணமாக வலி ஏற்படும்.

குத்துவலி இருக்கும். இதற்கு மஞ்சள் 10 கிராம், சீயக்காய் 10 கிராம், வசம்பு 5 கிராம், குப்பைமேனி இலையை நைத்துப் பிழிந்து எடுத்த சாறு ஆழாக்கு, 12 வயதிற்குட்பட்ட சிறுவனின் சிறுநீர் ஆழாக்கு இவற்றை எல்லாம் சேகரித்துக் கொண்டு,

ஒரு சுத்தமான இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் ஒரு லிட்டர் நல்லெண்ணெயை விட்டு, மஞ்சளையும், வசம்பையும் பொடியாக உடைத்து அதில் போட்டு அவை சிவந்தவுடன் குப்பைமேனிச் சாற்றைவிட்டு, கொதித்துவரும் சமயம் சிறுநீரை விட்டு நன்றாகக் கலக்கிவிட வேண்டும்.

மருந்துகள் எண்ணெயில் வெந்து நன்றாகச் சிவந்துவரும் சமயம், சட்டியை இறக்கிக் கீழே வைத்து, நன்றாக ஆறியபின் மெல்லிய துணியில் வடிகட்டி எண்ணெயை ஒரு சீசாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி காலை, மாலை ஒவ்வொரு காதிலும் மூன்றுதுளி எண்ணெயைவிட்டுப் பஞ்சு அடைத்துவிட வேண்டும் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதே எண்ணெயைத் தலைக்குத் தேய்த்து தலை முழுகிவர காது நெகிழ்ச்சிக் குணமாகும்.

காது மந்தமாக இருப்பவர்களும், காதில் இரைச்சல் கஷ்டப்படுகிறவர்களும் இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுழுகி வந்தால் நல்ல பலன் காணலாம்.

வெட்டுக் காயம்

வெட்டுக் காயம்

எதிர்பாராத விதமாக காலில் அடிபட்டுச் சதைப் பெயர்த்து இரத்தக் காயம் ஏற்படுவது உண்டு. சிலசமயம் கத்தி, அரிவாள் போன்றவற்றால் வெட்டுக் காயம் ஏற்படுவதுண்டு.

இந்த விதமான காயங்களை ஆற்ற மஞ்சள் நன்கு பயன்படுகிறது. காயத்திற்குத் தேவையான அளவு மஞ்சளையும், அந்த அளவில் இரண்டுபங்களவு வேப்ப மரத்தின் கொழுந்தையும் சேர்த்து மைபோல அரைத்து, காயத்தைச் சுத்தம் செய்துவிட்டு அதன்மேல் கனமாகப் பற்றுபோட்டு விடவேண்டும்.

கட்டு போடவேண்டிய நிலை ஏற்பட்டால், மருந்தின் மேல் ஒரு வெற்றிலையை வைத்துத் துணியை சுற்றி வசதி போல கட்டுப் போட்டு விடவேண்டும்.

மறுநாள் அவிழ்த்துப் பார்க்கும் போது மருந்து காயத்தின் மேல் நகராமல் ஒட்டிக் கொண்டிருக்குமானால் அப்படியே விட்டுவிட வேண்டும்.

மருந்து நகர்ந்து வருமானால் அதை எடுத்துவிட்டு, காயத்தைச் சுத்தம் செய்துவிட்டு புதிதாக மருந்து அரைத்துக் கட்டிவிட வேண்டும். மூன்றே நாளில் புண் ஆறத தொடங்கிவிடும்.

இந்த மருந்தைப் பற்றுப் போட்டிருந்தாலும், கட்டுக்கட்டி இருந்தாலும் அதன் மேல் தண்ணீர் படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கக்குவான் இருமலுக்கு

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்

சிறுவர், சிறுமிகளை வாட்டி வதைக்கும் பலவகையான வியாதிகளில் கக்குவான் இருமலும் ஒன்றாகும். “ஒட்டுவாரொட்டி” என்று சொல்லப்படும் தொற்றுநோய் வகையில் ஒன்று.

ஒரு சிறுமி, அல்லது சிறுவனுக்கு கக்குவான் இருமல் இருந்தால் அவர்களுடன் நெருங்கி விளையாடும் மற்ற சிறுமி, சிறுவனுக்கும் கக்குவான் இருமல் உண்டாகும்.

கக்குவான் இருமல் என்று தெரிந்தவுடனே மருந்து கொடுத்து வந்தால் அது வேகமாக அதிகரிக்காது. அதைத் தடுத்து நிறுத்திவிடலாம்.

இதற்கு மஞ்சள் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது.

மஞ்சள், சீயக்காய், நாயுருவிக்கதிர் இவைகளில் வகைக்கு 5 கிராம் எடுத்து, இவைகளை அம்மியில் வைத்து நன்றாக நைத்து,

ஒரு சுத்தமான சட்டியில் போட்டு, மூன்று ஆழாக்குத் தண்ணீர் விட்டு, ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, அதை வடிகட்டி வைத்துக் கொண்டு மூன்று பங்குகளாக்கி, காலை, பகல், மாலை ஆக மூன்று வேளைக்கு, வேளைக்கு ஒருபங்கு வீதம் தொடர்ந்து கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு ஆரம்பத்திலேயே இதைத் தயார் செய்துக் கொடுத்து வந்தால் அதன் வேகம் தணிந்து படிப்படியாக குணமாகும் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

பாம்பு விஷம் முறிய

எந்த வகையான பாம்பு கடித்தாலும் அதற்குச் சிகிச்சை செய்ய ஆரம்பம் செய்வதற்கு முன் கடிவாயிலுள்ள விஷத்தை முறித்து விடவேண்டும். இதற்கு மஞ்சள் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது.

முனை முறியாத ஒரு குச்சி மஞ்சளை எடுத்து அதை நெருப்பில் காண்பித்து முனையில் கால் அங்குலதூரம் நன்றாக நெருப்புப் பிடித்தவுடன் அதைக் கடிவாயில் அழுத்தி கட்டுவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் எந்தப் பாம்பானாலும் அதன் விஷம் அந்தயிடத்தில் உடனே முறிந்துவிடும். பிறகு சிகிச்சை முறைகளைச் செய்யலாம். சிலசமயம் இந்தச் குட்டோடு விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வதும் உண்டு.

தலையில் ஏற்பட்ட காயம் மாறுவதற்கு

சிலசமயம் எதிர்பாராத விதமாகத் தலையில் இரத்தக்காயம் ஏற்பட்டு விடுவது உண்டு, சிலசமயம் காயத்தின் பக்கத்திலுள்ள ரோமத்தை வெட்டி விட்டு காயம் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டு,

தேவையான அளவு மஞ்சளை எடுத்து அதே அளவு நெல்லையும் சேர்த்து மைபோல அரைத்துக் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும்.

மறுநாள் மருந்து பெயர்த்து காணப்பட்டால் மறுபடி மருந்தை அரைத்துப் பற்றுப் போடவேண்டும் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

மருந்து காயத்தின் மேல் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தால் எடுக்க வேண்டிய அவசியமில்லை. காயம் மூன்றே நாளில் ஆறி மருந்து தானே விழுந்துவிடும்.

நெருப்புச் சுட்ட புண் ஆற

சிலசமயம் நமது உடலில் எங்காவது நெருப்புப்பட்டு வெந்து விடுவதுண்டு. சிலசமயம் வெந்நீர் அல்லது கொதிக்கும் எண்ணெய்பட்டு அந்தயிடம் வெந்து விடுவதுண்டு.

இந்த விதமான விபத்து ஏற்பட்டவுடன் அந்தயிடத்தைச் சுத்தம் செய்துவிட்டு தேங்காயெண்ணையைத் தடவிவிட்டு தேவையான அளவு மஞ்சளைத் தூள் செய்து அதே அளவு புளியமரத்தின் பட்டையையும் தூள் செய்து இரண்டிலும் சமஅளவு எடுத்து நன்றாகக் கலந்து, வெந்தயிடத்தில் நன்றாகத் தூவி விடவேண்டும்.

மருந்தைத் தூவியபின் அது எண்ணெயில் ஒட்டிக் கொள்ளும், மறுபடியும் அதன்மேல் கொஞ்சம் தூளைப் போட்டு எண்ணெயில் ஒட்டும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

மறுநாள் கொப்புளம் கிளம்பினாலும் இதேபோல செய்ய வேண்டும். தண்ணர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொப்புளம் உண்டாகி அது உடைந்து புண் ஆனாலும் இதே தூளையே போட்டு வந்தால் ஏழே நாளில் சுட்ட புண் ஆறிவிடும் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

கர்ப்ப ஸ்திரீகளுக்கு ஏற்படும் களைப்பு, ஆயாசம் தீருவதற்கு

கர்ப்பமடைந்த சில பெண்களுக்கு அடிக்கடி ஒருவிதமான களைப்பு ஏற்படும். ஆயாசமாகத் தோன்றும். இதன் காரணத்தால் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.

சோம்பலாகப் படுத்திருப்பார்கள், முகத்தில் களைப்புக் குறி தோன்றும், இப்படிப்பட்டவர்களுக்கு மஞ்சள் கஷாயம் நல்ல தரக்கூடியதாக இருக்கிறது.

ஒரு சுத்தமான சட்டியை எடுத்து, அதை அடுப்பின் மேல் வைத்து ஒரு முழுவெள்ளைப் பூண்டின் பற்களை எடுத்து அம்மியின் மேல் வைத்து நைத்து சட்டியில் போட்டு, சுண்டு விரல் நீளமுள்ள மஞ்சளையும் எடுத்து உடைத்து போட்டு இரண்டு தேக்கரண்டியளவு கொத்துமல்லி விதையையும் நைத்துப் போட்டு எல்லாவற்றையும் சற்று சிவக்க வறுத்து,

இரண்டு ஆழாக்குத் தண்ணீரை இதில் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி ஒரு நாளைக்குப் பலமுறை கொஞ்சம் கொஞ்சமாக வெறும் கஷாயத்தையாகிலும், சர்க்கரைச் சேர்த்தாகிலும் குடித்து வந்தால் களைப்பு ஆயாசம் குணமாகும்.

இரத்தக் கட்டு குணமாக

சிலசமயம் நமது உடலில் எங்காவது ஊமை அடிபட்டு இரத்தம் உள்ளேயே தேங்கி, அந்தயிடத்தில் விக்கமும், வலியும் ஏற்படும். அந்த இடம் சற்றுக் கருநிறமாகத் தோன்றும். இதைக் குணப்படுத்த மஞ்சள் நன்கு பயன்படுகிறது.

மஞ்சள், கரியபோளம், காசுக்கட்டி, நெல், கஸ்தூரி மஞ்சள் இவைகளை ஒரே அளவில் தேவையாள அளவு எடுத்து அம்மியில் வைத்து தண்ணீர் விட்டு மைபோல அரைத்து வழித்து ஒரு சுத்தமான இரும்புக் கரண்டியில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி தாங்கக்கூடிய சூடு இருக்கும்பொழுது எடுத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டுவிட வேண்டும், பற்றுக் காய்ந்தவுடன் அதன் மேல் மறுபடியும் மருந்தைக் கனமாகப் பூசவேண்டும்.

மறுநாள் காலையில் நன்றாகக் கழுவிவிட்டு மறுபடி பற்றுப் போடவேண்டும்.

இந்த விதமாக மூன்று வேளை பற்றுப் போட்டால் போதும். இரத்தக்கட்டுக் கரைந்து வீக்கம் வாடிவிடும்.

அரைத்த மருந்து மீதம் இருந்தாலும் அதை மறுநாள் பற்றுப் போடும் முன் சுட வைத்து சூட்டுடன் பற்றுப் போடவேண்டும், ஆறிய மருந்தைப் பற்றுப் போடுவதால் பலனில்லை.

வெந்தயக்கீரை பயன்கள்

சிரங்கு சீக்கிரம் ஆற

சிரங்கு வந்துவிட்டால் அதைப் போக்க, பல மருந்துகளைக் கையாள வேண்டியிருக்கிறது. எந்த மருந்தைப் போட்டு வந்தாலும் அந்த ஒரு சில நாட்கள் வரை கஷ்டப்படுத்தி விட்டுத்தான் போகும்.

சுத்தமாக இருந்தால் சீக்கிரம் குணமாகும். அசுத்தமான நிலையில் இருந்தால் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

சிரங்குக்கு எந்த விதமான மருந்தைப் போட்டாலும் அது சீக்கிரம் குணமாக வேண்டுமானால் மஞ்சளையும் பயன்படுத்த வேண்டும்.

சிரங்குக்கு மருந்தை போடுமுன் அதைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். இதற்கு சீயக்காயைச் சுட்டுவிட்டு, அந்த அளவு மஞ்சளையும் அத்துடன் சேர்த்து அரைத்து, அதைக்கொண்டு சிரங்கைக் கழுவி வந்தால் சிரங்கு சீக்கிரமாகக் குணமாகும்.

சிரங்குக்குத் தடவ எண்ணெய்

அரை ஆழாக்குத் தேங்காயெண்ணையை ஒரு சுத்தமான இரும்புக் கரண்டியில் விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். எண்ணெய்க் காய்ந்தவுடன் சுண்டுவிரல் அளவுள்ள ஒரு மஞ்சளை எடுத்து அம்மியில் வைத்துத் தூளாக நைத்து அதில் போடவேண்டும்.

மஞ்சள் சிவந்துவரும் சமயம், ஒரு வெள்ளைப் பூண்டை உடைத்து, அதன் பற்களை அம்மியில் வைத்து நைத்து அதையும், எண்ணெயில் போடவேண்டும்.

இரண்டும் சேர்ந்து நன்றாகச் சிவந்து வரும் சமயம் கரண்டியை இறக்கிவைத்து, இரண்டு மணிநேரம் கழித்தபின் எண்ணெயை மட்டும் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை சிரங்கைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, இந்த எண்ணெயை கோழியிறகினால் தொட்டுத் தடவி வந்தால் சிரங்கு ஆறிவிடும்.

வேனல் கட்டி உடைய

கோடை காலத்தில் பெரியவர்களுக்கும் முக்கிய க குழந்தைகளுக்கு உடலில் ங்காவது குறிப்பாக முகம், தலை இந்தமிடங்களில் சிறிய பெரிய கட்டிகள் தோன்றி கீழ் படத்துக் கொண்டு வேதனை கொடுக்கும். ஒரு சில சிறியதாகவும், ஒரு சில எலுமிச்சம்பழ அளவிலும் தோன்றும்.

இவற்றைப் பழுக்க வைத்துவிட்டால் உடைந்து சீமும், இரத்தமும் வெறியேறிவிடும்

இதற்கு மஞ்சளை எடுத்து உறை கல்லில் தேவையான அளவு மைபோல உரச வேண்டும்.

பிறகு எந்த வகையான ஒரு வாஷிங்சோப் அதாவது துணிதுவைக்க உபயோகிக்கும் சோப்பை எடுத்து, இந்த உரசிய மஞ்சளையும் கூட்டி உறைகல்லில் உரச வேண்டும். இந்த சமயம் மஞ்சளும் சோப்பும் சேர்ந்து சிவந்த நிறமாக மாறும்.

இதை வழித்து எடுத்துக் கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். கூடுமானால் தினசரி தண்ணில் பஞ்சியை பாணந்து மாகக் கொண்டு மருந்தை ஊறவைத்துத் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, மறுபடி மருந்து உரசிப் போடவேண்டும். இவ்விதம் செய்து வந்தால் கட்டி சீக்கிரமே பழுத்து உடையும்.

உடைந்த பிறகு சீழ் இரத்தத்தை வெளியேற்றிவிட்டு கருப்புப் பிளாஸ்திரியைப் போட்டு புண்ணை ஆற்ற வேண்டும்.

சேற்றுப் புண் ஆறுவதற்கு

சேறு, சகதிகளில் நடமாடிவிட்டு காலை, நன்றாகக் கழுவாமல் விட்டு விடுவதினால், அந்தச் சேறு விரல்களின் இடையே தங்கி அந்த இடத்தை வேகவைத்து புண்ணாகச் செய்துவிடும். விசேஷமாக மழைகாலத்தில் தான் சேற்றுப் புண் உண்டாகும்.

சேற்றுப் புண் உள்ள இடத்தை நன்றாகச் சுத்தமாகக் கழுவிவிட்டு, மஞ்சளை உரசி, உரசிய மஞ்சள் அளவிற்குச் சுண்ணாம்பையும் கூட்டிக் கலக்கி இரவு படுக்கப் போகுமுன் விரல் சந்துகளிலுள்ள புண்ணின் மேல் நன்றாகப் படும்படித் தடவி விடவேண்டும். மூன்றே நாளில் சேற்றுப் புண் பூரண குணமாகும் turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்.

மஞ்சள்

மஞ்சள் மங்களப் பொருளாக உபயோகப்படுத்தி வரும் மஞ்சளை அன்றாடம் உண்ணும் உணவுப் பொருள்களில் மஞ்சள் தூளாகக் கலந்து உண்ணுகிறோம்.

மருத்துவத்தில் மஞ்சளைப் போன்ற சிறப்பு வேறு எதற்கும் இல்லை அந்த அளவுக்கு மஞ்சள் மகத்துவம் பெற்றது.

நமது உடலில் வருகின்ற எந்த வியாதியையும் முதலில் தடுத்து நிறுத்தும் ஆற்றல் மிக்க கிருமிநாசினியாகும்.

மஞ்சள் கிழங்கு வகையைச் சார்ந்தது. இது வெப்பம் மிகுந்த பிரதேசங்களில் பயிராகிறது. தண்டில்லாத செடி வகையைச் சேர்ந்தது. கிழங்கின் உட்பகுதி நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கொத்துக்கள் நீண்டும், பூக்கள் அடர்த்தியாகவும் இருக்கும்.

மஞ்சளில் பல வகை உண்டு. கறி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், காட்டு மஞ்சள், மர மஞ்சள், பலா மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள் என்பன அவைகளாகும்.

மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும் நடைமுறையில் கறிமஞ்சள், பூக மஞ்சள் என இரண்டு வகை மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

கஸ்தூரி மஞ்சள் குழந்தையின் உடலில் வரும் கரப்பான், நீர் தோஷங்கள், பெரியவர்களுக்கு வரும் மேக நோய்கள், புண், புரைகள், வெண்குஷ்டம் போன்றவற்றைக் குணமாக்கும் வல்லமை பெற்றது.

குடல் சம்பந்தமான நோய்கள் குணமாக மஞ்சள் உப்பு

வயிற்றில் கிருமிகள், குடலில் தங்கும் தூர்நீர், குடல் வாயு மற்றும் குடல் சம்பந்தமான பல நோய்களுக்கு மஞ்சள் உப்பைத் தயாரித்து உட்கொண்டால் நலமாகும்.

மஞ்சள் உப்பு என்பது, மஞ்சளை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் விட்டு கலக்கிவைத்துவிட வேண்டும்.

பின்னர் தெளியும் நீரை மேலோட்டமாக எடுத்து வடிகட்டி அடி பாகத்தில் தங்கியதை அடுப்பில் ஏற்றி தீயிட்டால், நீர் சுண்டி உப்பு போன்று ஏற்படும். அதனை எடுத்து நன்றாக உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சள் உப்பில் தினசரி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட எல்லாவிதமான குடல் நோய்களும் குணமாகும்.

பவுத்திர கட்டிக்கு

பவுத்திரக் கட்டியினால் கஷ்டப்படுகிறவர்கள் உடனடியாக மஞ்சள் இலையுடன் வெங்காயம். வேளைக் கீரை, தும்பை வேர் இவைகளை சம அளவாக எடுத்து ஒன்றாகச் சேர்த்து மெழுகாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்தெடுத்த விழுதை பவுத்திரக் கட்டியின் மீது வைத்துக் கட்டி வந்தால் விரைவில் பவுத்திக் கட்டி உடைந்து குணமாகும்.

நரம்புச் சிலந்திக்கு நல்ல மருந்து

நரம் புச் சிலந்தி என்பது கடுமையான நோயாகும். இது உடல் சதையில் உற்பத்தியாகி, சதையைக் குடைந்து கொண்டு வெளியே வரும். இது மெல்லிய நாக்குப் பூச்சியைப் போன்று ஆறு அங்கு நீளம் இருக்கும்.

மஞ்சளையும் சிறுபாலை இலையையும் சம அளவு எடுத்து மெழுகாக அரைத்து அப்புண்ணின்மேல் வைத்துக் கட்டி வந்தால் உள்ளே உள்ள புழுமெதுவாக வெளியே வந்துவிடும்.

அந்தப் புழு வெளியே வரும்போது மிகவும் மெதுவாக அறுந்து விடாமல் வெளியே இழுக்க வேண்டும். புழு முழுமையும் வெளியே வந்து விட்டால் குணமாகிவிடும்.

பல் சம்பந்தமான நோய்களுக்கு

பல் ஆட்டம், பல் சொத்தை, ஈறு வீக்கம் ஆகியவற்றால் சிரமப் படுகின்றவர்களுக்கு மஞ்சள் சிறந்த மருந்து.

கஸ்தூரி மஞ்சள், கருந்துளசி, புதினா தழை, உப்பு ஆகிய ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்து இடித்துத் துளாக்கிக் கொண்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

தினசரி காலையில் சிறிது தூள் எடுத்து பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். பல் வலி இருக்கின்ற போது அந்தப் பல்லில் இந்தத் தூளை சிறிது எடுத்து நன்றாகத் தேய்த்து வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குணமாகும்.

நமைச்சல், படை

இதற்கு மஞ்சளுடன் ஆடாதொடை இலையைச் சேர்த்து பசுவின் சிறுநீர் விட்டு அரைத்துப் படை உள்ள இடத்தில் பூசி வந்தால் நமைச்சல் கணமாகும். இதனை சொறி, சிரங்கு இருந்தாலும் பூசி குணம் பெறலாம்.

பொன்னுக்கு வீங்கி

பொன்னுக்கு வீங்கி வந்து இருந்தால் பலா மஞ்சளை அரைத்துப் பூசினால் குணமாகும்.

பலா மஞ்சளை வறுத்து பொடியாக்கி உபயோகித்தால் அம்மை நோயினால் உண்டான தழும்புகள் மறையும்.

தொடர் இருமல் மருந்து

சில சமயம் புகைத்து இருமல் வந்து கொண்டே இருக்கும். அது போன்ற சமயத்தில் பாலை நன்றாகக் கொதிக்க வைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி பால் சிறிது ஆறியதும் குடிக்கவும் தொல்லைக் கொடுத்து தொடர் இருமல் அகலும்.

மூக்கில் சதை

மூக்கில் சதை வளர்ந்து மூக்கடைப்பு ஏற்பட்டால், மருந்து கடையில் “நகம்” என்னும் சரக்கை 20 கிராம் வாங்கி வந்து வில்வ இலைக் கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக நைத்து 50 மில்லி நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சவும்.

நன்றாகக் காய்ந்ததும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி இரண்டு துளி இந்த எண்ணெய்யை மூக்கில் விட்டு வந்தால் விரைவில் சதை கரைந்து மூக்கடைப்பு நீங்கும்.

பெண்கள் முகத்தில் முடி போக

பெண்களில் சிலருக்கு முகத்தில் மீசை போன்று முடிகளும், கை கால்களிலும் முடி வளர்ந்து பெண்மையின் அழகு கெடும்.

இது போன்றவர்கள் தொடர்ந்து மஞ்சள் தேய்த்துக் குளித்து வந்தால் விரைவில் முடி உதிர்ந்து பட்டுப்போன்ற மேனியை பெறமுடியும்.

வயிர்வை நாற்றம் போக

வெயில் காலத்தில் சிலருக்கு வியர்வை நாற்றம் கற்றாதை நாற்றம் என்று நின்று பேச முடியாதபடி நாற்றம் அடிக்கும்.

இது போன்றோர் வேர்வையின் நாற்றத்தைப் போக்கிக் கொள்ள ஒரு வழி.

கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், அரிசி 200 கிராம், அகில் கட்டை 30 கிராம், சந்தனக் கட்டை 30 கிராம் இவை எல்லா வற்றையும் சேர்த்து அரைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

தினசரி காலையில் குளிக்கும் போது இந்தப் பொடியை எடுத்துத் தேய்த்துக் குளித்து வந்தால் வேர்வை நாற்றம், கற்றாழை நாற்றம் அகன்று விடுவதுடன் சருமம் மென்மையுடன் இருக்கும்.

பிரசவித்தப் பெண்ணின் வயிறு சுத்தமாக

பிரசவித்தப் பெண்களின் வயிற்றில் கட்டுப்பட்ட விஷ நீரினை வெளிப்படுத்தக் கீழ்க்காணும் முறையைக் கையாளலாம்.

50 கிராம் மஞ்சள் பொடியைப் போட்டு நன்கு கலக்கி அடுப்பிலேற்றி கால்பாகமாக சுண்டக் காய்ச்சி சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்ட எடுத்து பிரசவமான பெண்கள் உள்ளுக்குச் சாப்பிட்டால் வயிற்றை நன்றாக சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

மாலைக்கண் நோய்

மாலைக் கண் நோய் உள்ளவர்கள் பச்சை மஞ்சள் சாறு ஒருஸ்பூன் எடுத்து அதே அளவு விளக்கெண்ணெய் கலந்து குழைத்து தினசரி அதிகாலையில் கண்களில் விட்டுவந்தால் மாலைக் கண் நோய் குணமாகும்.

மஞ்சளின் மருத்துவ பயன்கள்

 1. மஞ்சளின் விழுதை அல்லது தூளைத் தேனுடனோ, நெல்லிக் கனிச் சாறுடனோ உட்கொண்டால் நீரிழிவு நோய் தணியும்.
 2. மஞ்சள் தூளை நாள்தோறும் விடாமல் ஒரு மாதம் பசுவின் சிறுநீருடன் உட்கொண்டால் குட்டம் தணியும்.
 3. மஞ்சள் கஷாயத்தில் தேனும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டால் கபத்தினால் தோன்றிய நாவறட்சி தணியும்.
 4. மஞ்சள் தூளில் வெல்லமும், பசுவின் சிறுநீரும் சேர்த்து உட்கொண்டால் யானைக்கால் நோய் தணியும்.
 5. பசுவின் சிறுநீரில் மஞ்சள் விழுதைக் கலந்து உட்கொண்டால் அரிப்பு, சொறி நீங்கும்.
 6. மஞ்சள், மரமஞ்சள் இவ்விரண்டையும் விழுதாக்கிப் பூசவும், உட்கொள்ளவும் பயன்படுத்தினால் ஸ்ர்ப்ப விஷம் தணியும்.
 7. புளிய இலை, மஞ்சள் இரண்டையும் மைய அரைத்துக் குளிர்ந்த நீருடன் உட்கொண்டால் வைசூரி (அம்மை நோய்) தணியும்.
 8. வாதத்தைப் போக்கும் தைலத்தை உடலில் பூசி மஞ்சள் தூளைத் தேய்த்து மறுபடியும் தைலம் பூசித் தூளைத் தேய்த்து வந்தால் வாத நோய் தணியும்.
 9. மரமஞ்சள் பட்டையின் விழுதைப் பூசினால் விரணங்கள் ஆறும்.
 10. மரமஞ்சள் விழுதைப் பசுவின் சிறுநீருடன் உட்கொண்டால் சிலேத்தும் நோய்கள் தீரும்.
 11. மரமஞ்சள் கஷாயத்தை நன்றாகக் கெட்டிப்படும் வரை காய்ச்சித் தேன் கலந்து பூசினால் முகநோய்கள், நரம்புச் சிலந்தி என்பன தீரும்.
 12. மரமஞ்சள் சாறில் தேன் கலந்து காலை வேளையில் பருகி வந்தால் காமாலை நோய் தணியும்.
 13. மரமஞ்சள் கஷாயத்தை அரிசி கழுவிய நீருடனோ, தேனுடனோ கலந்து பருகினால் வெள்ளைப் பெரும்பாடு நீங்கும்.
 14. மரமஞ்சளைப் பூசணிச் சாறுடன் பூசநக்ஷத்திரமுள்ள நாளில் அரைத்து கண்களில் மைபோல் இட்டால் கிரகங்களால் தோன்றும் துன்பம் நீங்கும்.

மஞ்சளைக் கொண்டு செய்யப்படும் மருந்துகள்

 • நிசாத்யதைலம் – இதைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்தால் பௌத்ரதம் (உள்மூலம்) தணியும்.
 • ஹரித்ராதிகஷாயம் – இது கபம், ஆமாதிஸாரம், உடலில் சேர்ந்துள்ள கொழுப்பு ஆகியவற்றை நீக்கும். தாய்ப்பாலில் உள்ள தோஷங்களைப் போக்கும்.
 • ஹரித்ராதிதூமவர்த்தி – இதைக் கொண்டு (சுருட்டு பிடிப்பது போல) புகை பிடித்தால் இழுப்பு, விக்கல் என்பன தணியும்.
 • தார்வயாதி அஞ்சனம் – இதைக் கண்கில் மைபோல இட்டால் கண் ளிக்கூ, நீர் சுரத்தல், கண் வீக்கம் ஆகியவை தணியும்.
 • தார்வயாதி தைலம் – இதைக் காதில் இட்டால் காதுவலி, காது இரைச்சல், செவிட்டுத் தன்மை, காதிலிருந்து சீழ் ஒழுகுதல், காதில் அரிப்பு, காது வீக்கம் முதலியன தணியும்.
 • ஹரியதராதி ஹரிதராகண்டம் – இது கிருமி நோய், விரணங்கள், நரம்புச் திலந்தி தடம், பௌத்திரம், சீதபித்தம், அசீரணம், காமாலை, குன்மம் முதலிய நோய்களைத் தணிக்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button