செடி மரம்மூலிகை

துத்தி இலை பயன்கள்

Thuthi leaf benefits in tamil thuthi keerai benefits in tamil துத்தி இலை பயன்கள் துத்தியிலை இது கீரை வகையைச் சேர்ந்தது. ஆனால் இதனைப் பெரும்பாலும் எவரும் சமையலுக்குப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் இதனை மற்றக் கீரைகளைப் போலவே இதனையும் பொரியல் கடையல் செய்து சாப்பிடலாம். இது உடல் நலத்திற்குப் பாதுகாப்பானதாகும்.

கீரை வகையைச் சேர்ந்த இந்த துத்தியில் கருந்துத்தி, சிறுதுத்தி, நிலத்துத்தி, இலைகள் துத்தி என பலவகை உண்டு.

இருப்பினும் இதில் எது வேண்டுமென்றாலும் சமயத்திற்குத் தக்கபடி பயன்படுத்தலாம், பலன் எல்லாம் ஒன்றே.

துத்தி இலை பயன்கள் – thuthi leaf benefits in tamil

மூலத்திற்குக் கைகண்ட மருந்து

துத்திக் கீரை மூல நோயாளிகளுக்குக் கைகண்ட மருந்தாகப் பயன் பட்டு நிவாரணம் அளிக்கிறது. ஆகையினால் கீழ்க்காணும் முறையினைக் கையாண்டு குணம் பெறலாம்.

துத்தி இலையைக் கொண்டு வந்து மட்பாண்டத்தில் போட்டு விளக் கெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி கை பொறுக்கும் சூட்டில் வாழை இலை அல்லது பெரிய வெற்றிலையில் வைத்துக் கோவணம் கட்டுவது போன்று ஒரு துணியை வைத்தக் கட்டிக் கொள்ள வேண்டும்.

இதுபோன்று தினசரி இரவு படுக்கைக்குப் போகும் முன் செய்து வந்தால் மூல வீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.

மூலத்திற்கு உள்மருந்து

மூல நோய் குணமாக

துத்தி இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து காரமில்லாத சுத்தமான அம்மியில் மை போல அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்கவும்.

இதுபோன்று தினசரி ஒரு மாதம் விடாமல் குடித்து வந்தால் மூலம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

ஆவாரம் பூ பயன்கள்

வாயு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு

மலச்சிக்கல் பிரச்சனை

வாயுவினால் ஏற்படும் சகல வியாதிகளுக்கும், இடுப்பு வலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ, பொரியலாகவோ செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும்.

எலும்பு முறிவுக்கு

எலும்பு முறிவுக்கு இது சிறந்த பலனளிக்கும் மூலிகையாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் முதலில் எலும்பை ஒழுங்குபடுத்திக் கட்டவேண்டும்.

இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூசி அதன்மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகுவிரைவில் முறிந்த கலும்பு ஒன்று கூடி குணமாகும்.

கரப்பான் நோய்க்கு

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கரப்பான் நோய் குணமாக துத்தி இலையைக் கொண்டு வந்து நன்றாக அரைத்து கசக்கி சாறு எடுத்து அந்த வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

சாறுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் வரை நன்றாகக் காய்ச்சி இந்த எண்ணெய்யை கரப்பான் கண்ட குழந்தைக்குத் தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

குடல் புண்ணுக்கு கஷாயம்

வாயு தொல்லை நீங்க

குடற்புண்ணால் வேதனைப்படுகின்றவர்கள் துத்தி கஷாயத்தைச் சாப்பிட்டுக்குணமடையலாம். துத்தி இலையைக் கொண்டு வந்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி கஷாயம் தயார் செய்து கொள்ளவும்.

இதனை குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர் தினசரி மூன்று வேளை சர்க்கரைக் கலந்து கஷாயத்தைக் குடித்து வந்தால் பூரணகுணம் பெறலாம்.

தவிர நீர் சுறுக்கு, தொண்டை கம்மல், சொரி, சிரங்கு உள்ளவர்களும் இந்தக் கஷாயத்தைக் குடித்து குணமடையலாம்.

ஆசனக்கடுப்பு – மேகச்சூடு

இதுபோன்ற நோய்கள் குணமாக துத்தி இலையைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி நீர் விட்டு கொதிக்க விடவும்.

கீரை வெந்ததும் அந்நீரை வடிகட்டி, சிறிது சர்க்கரைப் போட்டு பசும் பாலைச் சேர்த்துச் சாப்பிடவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆசனக் கடுப்பு அகன்றுவிடும். மேகச் கடுகுணமாகும் thuthi leaf benefits in tamil  துத்தி இலை பயன்கள்.

thuthi leaf benefits in tamil துத்தி கீரை அகன்ற இலைகளை உடைய செம்பருத்தி இனத்தைச் இருக்கும். இலைக் காம்புகளின் இடுக்கில் பூப்பூக்கும். பூக்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். சில வகைத் துத்தியின் பூக்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தோடு மையத்தில் கருஞ்சிவப்பாகவும் இருக்கும்.

பூப்பூத்து சிறிது நேரமான பிறகு இப்பூக்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவதும் உண்டு. இதன் விதை தட்டையாக இருக்கும். முந்திரிப் பருப்பைப் போன்று வடிவம் பெற்றிருக்கும். இவ்விதைகள் கரும்பழுப்பு நிறமானவை.

துத்தியின் இளம் கீரைகள் உண்ணும் உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையுடன் பருப்பினைச் சேர்த்துக் கடையலாகவும், பொரியலாகவும் செய்து நண்பகல் உணவுடன் சேர்த்து உண்பது வழக்கம்.

இக்கீரையைப் பாசிப் பயறு அல்லது உடைத்த பாசிப்பருப்பு இவற்றுடன் சேர்த்து பாகப்படி வேகவைத்துக் கடைந்து அன்னத்துடன் கூட்டி உண்ணலாம். இக்கீரையை சமைக்கும் போது புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது.

பொதுவாக இக்கீரையை உணவோடு சேர்க்கும் போது மற்ற கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ளும் வழக்கமில்லை. இக்கீரையை உணவோடு சேர்க்கும் பொழுது பகல் உணவில் ஒரு வேளை மட்டும் சேர்த்துக் கொள்வது நல்லது.

இக்கீரையும் இதன் கொழுந்தும் துவையல் செய்யப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தோசை சுடலாம். பல்வேறு வகையான கறி வகைகள் செய்யவும் இக்கீரை பயன்படுகிறது.

  • இந்த கீரையில் தண்ணீர் 75 விழுக்காடு உள்ளது.
  • 6.7 விழுக்காடு புரதச்சத்தும்,
  • ஒரு விழுக்காடு கொழுப்புச் சத்தும்,
  • 4.4 விழுக்காடு தாது உப்புகளும்,
  • 7.0 விழுக்காடு மாவுப்பொருள்களும் இருக்கின்றன.
  • இக்கீரை 87 கலோரி வெப்ப சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் பெற்றது.

நூறு கிராம் துத்தி இலை பயன்கள்

  • 550 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும்,
  • 117 மில்லி கிராம் மணிச்சத்தும்,
  • 11.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உள்ளன.

இக்கீரையும், இதன் பூவும், வேரும். விதையும் மருந்தாகப் பயன் படுகின்றன. இக்கீரை மூலவியாதியைக் கண்டிப்பதில் இணையற்றது. மூலம். வாய்ப்புண், வயிற்றுப்புசம் இவ்வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்து புளிச்சேர்க்காமல் பகல் உணவில் சேர்த்து ஒரு வேளை மட்டும் சாப்பிடவேண்டும்.

துத்தி இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் சிறிது விட்டு வதக்கி மூல நோய் உள்ளவர்களுக்கு ஆசனத்தில் வைத்துக் கட்ட இரண்டு அல்லது மூன்று வேளையில் கடுப்பு நீங்கும்.

துத்தி இலையை ஆமணக்கு நெய்யில் வதக்கிக் கட்ட கட்டி விரணமுளைகளும், கிருமி விரணமும், மூல நோயும் நிவர்த்தியடையும், வெட்பத்தால் உண்டான கட்டிகளுக்கு இக்கீரையை அரைத்து வைத்துக் கட்ட கட்டி உடைந்து சீழும், முளையும் வெளிப்படும்.

பச்சரிசி அல்லது துவரம் பருப்போடு சேர்த்து சமைக்கப்பட்ட கீரையைச் சோற்றுடன் சேர்த்து உண்ண மூலாதாரத்தில் உள்ள வாயுவைக் கண்டிக்கும். மலத்தை இளக்கும்.

கடுமையான சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்திக் கீரையை மேலிருந்து கீழ்நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒருமணி நேரம் கழித்துப் பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஐந்து நாட்கள் செய்துவர கடுமையான சுளுக்கு நீங்கும்.

முறிந்த எலும்பை ஒன்று சேர்க்க இந்த இலையை அரைத்து மேலே கனமாகப் பூச வேண்டும். பிறகு அதன்மீது துணியைச் சுற்றி அசையாமல் இருக்கும் பொருட்டு மூங்கில் பத்தைவைத்துக் கட்ட எலும்பு முறிவு கூடிவரும்.

துத்தி இலையைக் கொதிக்கிற தண்ணீரில் போட்டு வேக வைத்து அந்த நீரில் துணியைத் தோய்த்துப் பிழிந்து ஒத்தடம் கொடுக்க வலி நீங்கும்.

இக்கீரையைக் காயவைத்துச் சிறிது நீர்விட்டு அரைத்துக் குழந்தைகளுக்கு உண்டாகும் கபாலக் கரப்பானுக்குப் போடக் குணமாகும். இலை கசாயத்தினால் வாய்கொப்பளிக்க, பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் இவை நோய்கள் நீங்கும்..

துத்தி இலை எப்படி சாப்பிடுவது

இலையை எந்த ரூபத்தில் உண்டாலும் வெப்பத்தால் உண்டாகும் எல்லா நோய்களும் நீங்கும்.

இலைச் சாறும் நெய்யும் சேர்த்து உண்ணப் பித்தத்தால் உண்டாகும் பேதி குணமாகும்.

துத்திக் கீரையைக் கசாயமிட்டுப் பாலும் சர்க்கரையும் சேர்த்து உட்கொண்டால் மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச்சூடு முதலியன தணியும்.

இக்கீரையின் சாறுடன் பச்சரிசி மரக்கூட்டிக் களிகிண்டி விப்புருதி சிலந்தி கட்டிகளுக்கு வைத்துக்கட்ட கட்டி பழுத்து உடையும் துத்தி இலை பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button