மூலிகைசெடி மரம்

thumbai plant uses in tamil | தும்பை இலை பயன்கள்

thumbai plant uses in tamil தும்பை இலை பயன்கள் தும்பைச் செடியின் இலைகள் இரண்டு அங்குல நீளமும், அரை அங்குல அகலமும் இருக்கும். இலைகளுக்கு எல்லா வகை விஷப் பூச்சிகளின் கடிகளுக்கும் நிவாரணம் அளிக்கும் சக்தி உண்டு.

தும்பை இலை பயன்கள் – thumbai plant uses in tamil

பாம்பு கடிக்கு

பாம்புக் கடிக்கு இலைகளைப் பறிந்து வந்து சாறு பிழிந்து முக்கால் முதல் ஒரு அவுன்ஸ் வரையில் எடுத்து அதனை பாம்பு கடியுண்டவர்க்கு குடிக்கக் கொடுக்கவும். மேற்படி சாறினைக் குடித்தவருக்கு வயிறைக் கலக்கி உடன் பேதி ஆகும்.

மேலும் வாந்தியும் கபத்துடன் வெளிப்படும். சில நிமிடங்களில் அவரது குளிர்ந்த உடல் உஷ்ணப்படும். அவர் இனி பிழைத்துக் கொள்வார். ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்கள் கவனமாக பாம்பு கடியுண்டவரைப் பாதுகாக்க வேண்டும்.

இருபது மணி நேரம் அவரைத் தூங்க விடக்கூடாது. புதிய பானையில் பச்சரிசியையும், பாசிப்பயறினையும் கலந்து பொங்கிய சோற்றை உண்ணக் கொடுக்க வேண்டும்.

மூன்று நாட்கள் வரை உணவில் புளி, உப்பு, காரம் மூன்றையும் சேர்க்கக் கூடாது. பாம்பு கடித்தால் சிலர் விஷம் தலைக்கேறி மூர்ச்சித்தும், நுரை தள்ளியும் விழுந்துவிடக் கூடும். அஞ்ச வேண்டாம்.

உடனடியாகத் தும்பை இலைச் சாறினை சில துளிகள் மூக்கின் வழியாக செலுத்தி வாயால் ஊதினால் அவரது மயக்கம் தெளி வடையும். உடன் இலைச் சாறில் ஒரு அவுன்ஸ் உள்ளுக்குக் குடிக்கக் கொடுக்கவும். மேலும் கடிவாயிலும் தும்பை இலையை வைத்துக் கட்டி விடவும்.

தேள் கடி விஷம் நீங்க

தேள் விஷம் இறங்க

தேள் கடி விஷம் நீங்க தும்பை இலைச் சாறில் நான்கு துளி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து உட்கொள்ளவும். கடிபட்ட இடத்திலும் இலைச் சாறை தெளித்து தேய்க்கவும். இருமுறையிலேயே எல்லா விஷ ஜந்துக்களின் விஷ உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சொறி சிரங்கு

உடல் அரிப்பு விலக

பிற நோய்களான சொறி சிரங்கு நமைச்சல் போன்ற சரும நோய்களுக்குத் தும்பை இலையை அரைத்துத் தடவி குளிக்கக் குணமாகும்.

சுண்டைக்காய் பயன்கள்

காமாலை

மஞ்சள் காமாலைக்கு

கீழா நெல்லியுடன் சேர்த்து சமமாக அரைத்து உபயோகித்தால் காமாலை, பித்தபாண்டு, சோகை போன்ற நோய்கள் நிவர்த்தியாகும்.

தலைவலி

தலைவலி குணமாக

சீதளத்தால் வரும் தலைவலி, மண்டையிடி, பீனிசம், மூக்கு ஒழுக்கு, கபம் இவை நீங்க தும்பை இலைச் சாறினை உள்ளங்கையில் தேக்கி மூக்கினால் வேகமாக உறிஞ்ச வேண்டும்.

மாதருக்கு மாத விலக்கானது முறைப்படி வராது போனாலோ அல்லது தடைபட்டாலோ தும்பை இலைகளையும், உத்தாமணி இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி, நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுண்டைக்காய் அளவு விழுதினைப் பசுப்பாலில் போட்டுக் கலந்து குடித்துவர தடைப்பட்ட மாதவிலக்கு வெளிப்படும். புளி, காரம் சேர்ந்த உணவைத் தவிர்த்துப் பத்தியம் இருக்க வேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button