செடி மரம்மூலிகைவீட்டு மருத்துவம்

துளசி மருத்துவ பயன்கள்

துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil துளசி செடியை அறியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். சின் வீடுகளில் துளசி மாடம் கட்டி அதற்குத் தினமும் பூஜை செய்வார்கள். தவிர பகவானை அர்ச்சிக்கத்துளசியை உபயோகிப்பார்கள்.

துளசி பலவித வியாதிகளைக் குணப்படுத்தும் பேராற்றல் உள்ளது என்பதை அறிந்துள்ள நம் முன்னோர் அதனைத் தெய்வீக மூலிகையாகக் கருதியுள்ளனர். இதனைத் தினசரி சிறிதளவு உபயோகித்து வந்தால் எண்ணற்ற வியாதிகளை வராமல் தடுக்கும்.

துளசியில் முப்பத்திரண்டு வகைகள் உள்ளன. அவைகளில் முக்கியமாக நிலத் துளசி, சிவ துளசி, காட்டுத் துளசி, கருந்துளசி, செந்துளசி. வெண் துளசி, முள் துளசி, நாய்த் துளசி என்பவைகள் மிகவும் முக்கிய மானவைகள்.

இவைகள் எல்லாமே மருத்துவக் குணமுள்ளவையாகும். துளசி திருநீற்றுப்பச்சை இனத்தைச் சேர்ந்தது.

சுவாசத்தைத் தடை செய்கின்ற இறுகிப்போன கடம் கோழையை இளகச் செய்து நீர்போன்று வெளியேற்றுகின்ற தன்மை துளசிக்கு உண்டு.

துளசி குழந்தைகளுக்கு வரும் பலவித நோய்களைக் குணமாக்கும் நிவாரணியாகும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

Table of Contents

துளசி மருத்துவ பயன்கள் – thulasi benefits in tamil

குழந்தைகளுக்கு மாந்தம் உண்டானால்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில சமயம் மாந்தம் உண்டாகும். இதுபோன்ற சமயத்தில் துளசி இலை, நொச்சி இலை, நுணா இலை பொடுதலை இலை, உத்தாமணி இலை ஆகியவைகளை சமபாகம் எடுத்துக் கையினால் நன்றாகக் கசக்கி ஒரு சங்கு அளவு சாறை எடுத்து காலை, மாலை இரண்டு வேளை என மூன்று நாட்கள் கொடுத்தால் மாந்தம் குணமாகும்.

குழந்தைகளுக்கு வாந்தியும் பேதியும் குணமாக

குழந்தைகளுக்கு வாந்தியும் பேதியும் உண்டானால் உடனடியாக நாட்டு மருந்துக் கடைக்குச் சென்று துளசி விதையை வாங்கி வந்து மெழுகாக அரைத்துப் பசும் பாலில் கலந்து வேளைக்கு 3 பாலாடை விதம் கொடுத்தால் உடனடியாக வாந்தியும் பேதியும் நின்றுவிடும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால்

சில சமயம் தாய்ப்பால் கொடுத்தாலும் குழந்தை சரியாகப் பால் குடிக்காது. அதற்கு துளசி, அதிமதுரம் ஆகிய இரண்டையும் சேர்த்துச் சிறிது வெந்நீர் விட்டுச் சந்தனம் போல் அரைத்து முலைக்காம்பில் தடவிக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தால் சரியாக பால் குடிக்காத குழந்தை தாய்ப்பால் குடிக்கும்.

குழந்தை வாந்தி எடுத்தால்

குழந்தை குடித்தத் தாய்ப்பாலை வாந்தி எடுத்தால் துளசிச் சாறில் சுத்தமான தேனை சிறிது சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு இரண்டு குன்றிமணி அளவு அரை மணிக்கொரு முறை கொடுத்தால் வாந்தி எடுப்பது நின்றுவிடும்.

குழந்தையின் காது வலிக்கு

குழந்தை காது வலியால் கஷ்டப்பட்டால் உடனடியாக துளசியை கசக்கிச் சிறிது சாறு எடுத்துக் கொண்டு அதில் தேன் சிறிதளவு, உப்பு சிறிதளவு போட்டு நன்கு கலந்து மூன்று நான்கு துளிகள் காதில் விடவும். காதுவலி, காது குத்தல் போன்றவை குணமாகும் .

விஷக்கடிகளுக்கு

தேள் விஷம் இறங்க

பூரான்கடி, வண்டு கடி, இரவினில் கடித்த கணாக்கடி இவற்றினால் உண்டாகும் கடுப்பு, வீக்கம் இவைகளைப் போக்கிக் குணமடைய, 100 மில்லி துளசி சாறு எடுத்து அதில் ஒரு சங்கு பசு நெய்விட்டு வெண்ணெய் போன்று உள்ள சுண்ணாம்பு மூன்று குன்றிமணி எடை அளவு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதனை ஒரு வெண்கலப் பாத்திரத்தில் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்டக் காய்ச்சவும். களிம்பு பதம் வந்ததும் கீழே இறக்கி எடுத்துக் கொள்ளவும்.

இந்தக் களிம்பை விஷக் கடி பட்ட இடங்களின் மேல் பூசி வரவும். இதனால் விஷத்தினால் உண்டான கடுப்பு, வீக்கம் போன்றவை நீங்கிவிடும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

சொப்பன ஸ்கலிதம் குணமாக

வாலிப வயதினருக்கு உஷ்ணத்தினாலும் இரவு கெட்ட கனவுகளினாலும் தூக்கத்தில் இந்திரியம் ஸ்கலிதமாகும். இதுபோன்று தொடர்ந்து உண்டானால் உடல் நலம் பாதிக்கும். ஆதலின் உடனடியாக இதனைப்போக்கிக் கொள்ள வேண்டும்.

துளசி செடியின் வேரினை மட்டும் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும் இடித்துத் தூளாக்கி சலித்த ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

தினசரி இந்த சூரணத்தில் ஒரு ஸ்பூன் எடுத்து 100 மில்லி பாலில் கலக்கி காலையும் மாலையும் குடித்து வரவும்.

தொடர்ந்து ஒரு வாரம் குடித்தாலே சொப்பன ஸ்கலிதம் நின்றுவிடும். உடல் நலமாகும்.

வயிற்று இரைச்சல் நீங்க

nellikai benefits in tamil

நல்ல துளசி இலைகளைக் கொண்டு வந்து கழுவி கல்வதிலிட்டு இடித்து 50 மில்லி சாறு எடுத்துக் கொள்ளவும்.

அந்த சாறில் 25 கிராம் சர்க்கரை சேர்த்துக் கலக்கி வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளைகள் சாப்பிட்டாலே வயிற்று இரைச்சல் நின்றுபோகும்.

இதே போன்று சீதபேதி, இரத்தக் கழிசல் போன்ற தொல்லைகளுக்கு பயன்படுத்தி நலம் பெறலாம்.

முகம் பொலிவு பெற

முகம் பொலிவு பெற

முகம் பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக் கின்றவர்கள் கீழ்க்காணும் வழிமுறையைக் கையாளலாம்.

துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்துக் கொள்ளவும். காலையில் எழுந்து குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

இது போன்று தினசரி செய்து வந்தால் நாளடைவில் முகம் மாசு மருவற்று பொலிவுடன் அழகாக இருக்கும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

உள் மூலம் கட்டுப்பட

காட்டுத் துளசியின் விதைகளைக் கொண்டு வந்து காய வைத்து நன்றாக இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். அந்த தூளில் அரை ஸ்பூன் எடுத்து பசும்பாலில் கலந்து குடித்து வரவும். இதனால் உள்மூலம் கட்டுப்படும்.

அரிப்புக்கு

nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்
nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்

உடலில் அரிப்பு உண்டானால் நாய் துளசி இலைகளைப் பறித்து வந்து மெழுகாக அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் அரிப்பு அகன்றுவிடும்.

இதே போன்று சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவினால் இவைகளும் குணமாகும்.

மினரல் வாட்டரைவிட சிறந்தது துளசி குடிநீர்

துளசி இலைகளை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவைத்துக் கீழே இறக்கி வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். இந்நீரைக் குடி நீராகப் பயன்படுத்தினால் குடிநீரில் உண்டாகும் எந்த நோயும் பாதிக்காமல் வாழலாம்.

சிறுநீரக கற்கள் கரைய

சிறுநீரகத்தில் கற்கள் இருந்து கஷ்டப்படுகிறவர்கள் துளசி இலையை நைத்து ஒரு கப் அளவு சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு தேனைச் சோத்துக்குடிக்க வேண்டும்.

இதுபோன்று தொடர்ந்து ஆறுமாதங்கள் குடித்தால் சிறுநீர்த் இடத்தில் உள்ள கற்கள் எல்லாம் கரைக்கப்பட்டு வெளியேறி சுகமளிக்கும்.

இதனைக் குடிக்கும் காலம் வரையில் உணவில் காபி, டீ, கீரை வகைகள், தக்காளி, பட்டாணி, இறைச்சி வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.

நீர்த்துவார எரிச்சலுக்கு

துளசி இலையை மைபோல் அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து அரை ஆழாக்குப் பசுமோரில் கலந்து மூன்று வேளை குடித்தால் போதும் நீர்த்துவார எரிச்சல் குணமாகும்.

கருத்த உடல் சிவப்பாக

சிலரது உடல் கருப்பாக இருப்பது உண்டு. இவர்கள் தங்கள் உடலை சிவக்க வைக்கப் பலவகையான சோப்புகளை உபயோகிப்பார்கள்.

அவர்கள் உடலை சிவக்க வைக்கத் துளசி ஒரு நல்ல சஞ்சீவியாகும். இதை தவறாது 40 நாட்கள் உபயோகித்தால் உடல் நிறம் சிவப்பாகும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

துளசி இலை, அதன் வேர் சமபாகம் எடுத்து துளசி இலையின் அளவு முருங்கை மரத்தின் இளவேரையும் எடுத்து இவைகளை அம்மியில் மைபோல் அரைத்து குளிக்கும் பொழுது சிகைக்காய், சோப்பு எல்லாம் தேய்த்துக் கழுவிய பின் கடைசியாக இந்த அரைத்த மருந்தை உடல் முழுதும் பூசி பத்து நிமிடம் வைத்திருந்து பிறகு மறுபடியும் குளித்துவிட வேண்டும்.

இந்த விதமாக நாற்பது நாட்கள் செய்து வந்தால் தேகம் பொன்போல் மாறும், கருப்பு நிறம் மாறி உடலுக்கு அழகிய புது நிறம் கொடுக்கும்.

வாய்வு விக்கங்களுக்கு துளசி மருத்துவ பயன்கள்

உடலில் எங்காவது வாய்வு சம்பந்தமான வீக்கம் ஏற்பட்டடிருந்தால் துளசி இலையைக் கசக்கிச் சாறு எடுத்து அதில் கால் அவுன்ஸ் எடுத்து 15 மிளகைத் தூள் செய்து போட்டுக் கலக்கி காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட வாய்வு நீங்கி வீக்கம் குறையும்.

விரைவிக்கத்திற்கு

வாய்வு சம்பந்தமாக விரையில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் சங்களவு துளசி சாறை எடுத்து ஒரு கழற்சிக்காயின் பருப்பு சிறதளவு, சுக்கு பெருங்காயம் இவைகளில் சாறின் அளவு விட்டு அம்மியில் வைத்து மைபோல் அரைத்துக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து வீக்கத்தின் மேல் தடவிவிட வேண்டும். தினசரி காலையில் சுத்தம் செய்து புதிதாகப் பற்றுப் போட வேண்டும். மூன்றே நாளில் வீக்கம் குறைந்து குணமாகும்.

வாய்வு தொந்தரவு நீங்க

வாய்வு தொந்தரவு நீங்க

 

வாய்வு தொல்லை நீங்க துளசியிலையை சாறு எடுத்து அதில் கால் அவுன்ஸ் சாறும், அதேபோல் இஞ்சியைத் தட்டி அதில் கால் அவுன்ஸ் சாறும் எடுத்து சேர்த்து காலை, மாலை, இரவு என மூன்று வேளை சாப்பிட்டால் சகல வாயு தொந்தரவுகள் குணமாகும். தேவையானால் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

மாலைக்கண் நோய் குணமாக

மஞ்சள் காமாலைக்கு

நாள்தோறும் பொழுது சாய்ந்தவுடன் கண் பார்வை மங்கிவிடுவதே மாலைக்கண் நோய் எனப்படும். இதற்குக் கருந்துளசியின் இலையைச் சுத்தம் செய்து கைகளை நன்றாகக் கழுவி விட்டு இலையைக் கையில் வைத்து நன்றாகக் கசக்கினால் சாறு வரும்.

அந்த சாறை ஒரு கண்ணுக்கு இரண்டு துளிகள் வீதம் இரண்டு கண்களுக்கும் காலை, மாலை தவறாது ஒன்பது நாட்கள் போட்டுவந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். இரவில் பார்வை தெளிவடையும்.

மூக்கு சம்பந்தமான நோய்கள் தீர

துளசி இலையைத் தேவையான அளவு நிழலில் உலர்த்தி, பிறகு வெய்யிலில் போட்டு நன்றாக உலர்ந்தவுடன் எடுத்துப் பட்டுப்போல் தூள் செய்து அதை மூக்குப் பொடி உபயோகிப்பதுபோல் மூக்கில் போட்டுக் கொண்டால் மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

இருமல் இளைப்பிற்கு துளசி மருத்துவ பயன்கள்

இருமல் குணமாக

துளசி இலையைச் சுத்தம் செய்து எடைபோட்டு அந்த அளவிற்கு வேப்பம் கொழுந்தையும் சுத்தம் செய்து அம்மியில் வைத்து சிறிது இஞ்சி சாறு விட்டு மைபோல் அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி,

ஒரு சுத்தமான தட்டில் போட்டு நிழலில் காய வைத்து ஒரு வாயகன்ற பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். காலை 6 மணிமுதல் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் 4 மணிக்கு ஒருமுறை வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். மூன்றே நாளில் குணமாகும்.

கீழாநெல்லி மருத்துவ பயன்கள்

காக்காய் வலிப்புக்கு

துளசி இலையைத் தட்டிச் சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாறில் அரை தேக்கரண்டி அளவு உப்பைப் போட்டுக் கலக்கி, காலையில் மட்டும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு நோய் குணமாகும். மருந்து சாப்பிடும் போது காக்காய் வலிப்பு வந்தால் வெள்ளை வெங்காயத்தைத் தட்டிச் சாறு எடுத்து காதில் விட்டால் காக்காய் வலிப்பு உடனே குணமாகும்.

வண்டு கடிக்கு

துளசி இலையை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு மைபோல அரைத்து வண்டு கடித்த இடத்தில் பற்றுப் போட்டால் எந்த வண்டு கடித்திருந்தாலும் விஷம் மாறும் குணம் ஏற்படும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

காது சம்பந்தமான நோய்களுக்கு

காதில் சீல்வடிவதை குணப்படுத்த

துளசி இலையைக் கசக்கிச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு தேனும் சேர்த்து, ஒரு காசு எடையளவு உப்பும் போட்டு கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட சகல காது வலிகளும் குணமாகும். காது சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

துளசியின் மருத்துவ பயன்கள்

துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil

 1. வெண் துளசி இலையின் சுரசத்தில் தேன் கலந்து உட்கொண்டால் கபத்தினால் தோன்றிய இருமல் தணியும்.
 2. வெண்துளசி இலையின் சுரசத்தில் தேன் கலந்து கண்களில் மைபோல் இட்டால் கண்பொங்குதல் தணியும்.
 3. வெள்ளைப் பூண்டு, துளசி இலை இவற்றின் சாறைக் காதில் விட்டார் சீழ்வழிதல் தணியும்.
 4. துளசிவேர், சுக்கு இவ்விரண்டையும் மைய அரைத்து விழுதாக்க் நான் தோறும் காலையில் இளஞ் கருள்ள நீருடன் உட்கொண்டால் குட்டம் தணியும்.
 5. துளசி இலையை நீருடன் கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்கு நீர் மிகுந்திருக்கக் காய்ச்சி பட்கொண்டால் சாதாரணக்காய்ச்சல் தணியும்.
 6. துளசி இலை ஒரு பங்கு இஞ்சி இரண்டு பங்கு சேர்த்துக் காயம் காய்ச்சி உட்கொண்டால் காய்ச்சல் தணியும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.
 7. துளசி இலைச் சுரசத்தில் சிறிதாவு மிளகுத்தூள் கலந்து காலையில் 7 உட்கொண்டால் காய்ச்சல் தணியும்.
 8. துளசி இலை பத்து, மிளகு பத்து இவ்விரண்டையும் நன்கு மென்று தின்றால் மலேரியா காய்ச்சல் தணியும்.
 9. துளசி இலை பத்து கிராம், மிளகுத்தூள் பத்து கிராம், பாகல் இலை பத்து கிராம், கடுக ரோகிணி நாற்பது கிராம் இவை அனைத்தையும் தக்க அளவில் நீர்விட்டு அரைத்துக் கடலை அளவு மாத்திரைகள் ஆக்கி உட்கொண்டால் மலேரியா காய்ச்சல் தணியும்.
 10. துளசி இலைத் தூள், சுக்குத் தூள், ஓமத்தூள் சம அளவில் எடுத்துத் தேனில் குழைத்து உட்கொண்டால் சிலேத்துமக் காய்ச்சல் (இன்ப்ளுயன்ன) தணியும். துளசிக் கஷாயத்தில் ஜாதிக்காய்த் தூளைக் கலந்து உட்கொண்டால் அதிசார பேதி தணியும்.
 11. துளசி விதையை நீரில் ஊற வைத்து அரைத்து உட்கொண்டால் ரத்தாதிசாரம் தணியும்.
 12. துளசி, வில்வ இலை, மிளகு இவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு சுரசம் காய்ச்சி உட்கொண்டால் கிரகணி தணியும்.
 13. துளசி 10 கிராம், சிறிதளவு கரிஉப்பு கலந்து வெந்நீருடன் உட்கொண்டால் அஜீரணம் தணியும்.
 14. துளசி இலை, மிளகு, ஓமம், பூண்டு, இந்துப்பு, தூயகற்பூரம் இவற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு சிறிது நீர்விட்டு அரைத்துக் கடலை அளவுள்ள மாத்திரைகளாகச் செய்து உட்கொண்டால் வாந்திபேதி தணியும்.
 15. துளசி இலைச் சுரசத்தில் சர்க்கரை கலந்து உட்கொண்டால் இரத்த பித்த நோய் தணியும்.
 16. துளசி இலைச்சுரசம், ஆடாதொடை இலைச் சுரசம் இவற்றைச் சம அளவு கலந்து உட்கொண்டால் இருமல் தணியும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.
 17. துளசி இலை, சுக்கு, பிரும்மதண்டி, கொள்ளு இவற்றைச் சம அளவு எடுத்துக் கஷாயம் காய்ச்சி பயன்படுத்தினால் இழுப்பு தணியும்.
 18. துளசி இலை, துளசி மலர்க்கொத்து இவ்விரண்டையும் சம அளவில் எடுத்துக் கஷாயம் காய்ச்சிப் பழைய வெல்லம் சேர்த்து உட்கொண்டால் விக்கல் இழுப்பு தணியும்.
 19. துளசி விதைத்தாள், திப்பிலித்தூள் இவ்விரண்டையும் சம அளவில் எதனுக்கேனுடன் உட்கொண்டால் சுவையின்மை நீங்கும்.
 20. துளசி இலைச்சுராத்தில் தென் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.
 21. துளசி இலைச் சுரசத்தில் 10 கிராம், சிறு ஏல அரிசி, சர்க்கரை 10 கிராம் சேர்த்து நன்றாகக் கலக்கி உட்கொண்டால் வாந்தி நிற்கும்.
 22. துளசி இலைச்சாறில் சிறிதளவு இந்துப்பு கலந்து உட்கொண்டு, சிலதுளிகள் மூக்கில் நசியமாக விட்டால் காக்கை வலி நீங்கும்.
 23. துளசி இலை, ஆமணக்கு நேர் இவ்விரண்டையும் சேர்த்துக் கஷாயம் காய்ச்சி குளிர்ந்த பின் சிறிதளவு தேன்விட்டு உட்கொண்டால் வாத நோய் தீரும்.
 24. துளசி இலைச்சுரசம், மிளகுத்தூள், பசுநெய் கலந்து உட்கொண்டால் வாதத்தினால் தோன்றும் வீக்கம் நீங்கும்.
 25. துளசி, வெண்கடுகு, நேர்வாளம் இவற்றின் இலை, வேர், விதைகளைக் கொண்டு கஷாயம் காய்ச்சி இளம் சூடு உள்ள போது கால்களின் மேல் ஊற்றி வந்தால் ஊரு ஸ்தம்பம் (தொடைகள் தூண்களைப் போல ஆதல்) என்னும் வாத நோய் தணியும்.
 26. துளசி, வில்வம், வேம்பு, குடசப்பாலை இவற்றின் இலை, வேர், விதை அல்லது பழம் ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் காய்ச்சி இளஞ்சூடுள்ள போது தொடைகளின் மேல் ஊற்றிக் கொண்டிருந்தால் ஊரு ஸ்தம்பம் நீங்கும்.
 27. துளசி விரைகளின் தூளை உட்கொண்டு வந்தால் நரம்புகளில் வலி நீங்கும்.
 28. துளிசி இலைச் சுரசத்துடன் இஞ்சிக் கஷாயம் கலந்து சூடுள்ள போது உட்கொண்டால் வயிற்றுவலி நீங்கும்.
 29. துளசி இலைக் கஷாயம் உட்கொண்டால் ஆமாசய (பக்குவாசயத்தில்) வலி நீங்கும்.
 30. துளிசி இலைத்தூள் ஒரு பங்கு, மருத மரப்பட்டைத் தூள் இரண்டு மடங்கு சேர்த்துத் தேனுடன் உட்கொண்டால் இருதய நோய் தணியும்.
 31. துளசி இலைச் சுரசம் 10 கிராம், பசும்பால் ஓர் ஆழாக்கு, நீர் ஓர் ஆழாக்கு கொண்டு கலந்து உட்கொண்டால் நீர்ச்சுருக்குத் தணியும்.
 32. துளசி விதைகளைத் தூளாக்கி உட்கொண்டால் சிறுநீர்த்தடை நீங்கும்.
 33. துளசி இலைச் சுரசம், வேப்பிலை சுரசம் சம அளவில் கலந்து உட்கொண்டால் நீர்ச்சுருக்குத் தணியும்.
 34. துளசி விதைத்தூளை 5 கிராம் முதல் 10 கிராம் வரை உடலுக்கு ஏற்ற அளவுநாள்தோறும் உட்கொண்டு வந்தால் நீரிழிவு தணியும்.
 35. துளசி விதைத் தூள் 5 கிராம், பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து உட்கொண்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டோடு பருகினால் நீரிழிவு நோய் தணியும். விந்து வளர்ச்சி உண்டாகும். இதற்கு காலை, மாலை இருவேளைகளிலும் தொடர்ந்து 40 நாட்கள் பயன்படுத்த வேண்டும்.
 36. துளசி வேரை வெற்றிலையுடன் மென்று தின்றால் கனவில் விந்து வளியேறுதல் நீங்கும்.
 37. துளசி இலைச் சுரசத்தைச் சிறிது சூடாக்சி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து நகிவந்தால் உடல் பருமன் குறையும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.
 38. துளசி இலையைக் கசக்கித் தேய்த்தால் வீக்கம் தணியும்.
 39. வாடிய துளசி இலைகளைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டால் கைம் பொலிவு மிகும்.
 40. வாடிய துளசி இலையைப் பற்களின் மேல் தேய்த்துக் கொண்டால் ல்நோய் தீரும். வாயில் தோன்றும் துர்நாற்றம் குறையும்.
 41. துளசி இலையையும் மல்லிகை இலையையும் சேர்த்து மென்றால் ல்நோய், வாய்துர்நாற்றம், நாக்கிலும் உதட்டிலும் தோன்றும் நோய்கள் நீங்கும்.
 42. துளசியின் உலர்ந்த இலை 10 கிராம், சடாமஞ்சி 2 கிராம், அக்கராகாரம் 2 கிராம், உப்பு 8 கிராம், களிப்பாக்கு 5 கிராம், ரூமிமஸ்தசி 10 கிராம், சீமை வாதுமைக் கொட்டையின் கரித்தூள் 10 கிராம், ஏல அரிசி 8 கிராம் இவைகளைத் தூள் செய்து அதைக் கொண்டு காலை, மாலை இரு வேளைகளிலும் உணவு உட்கொண்ட பிறகும் பல் துலக்கி வந்தால் பல்நோய்கள் தீரும்.
 43. துளசி இலை, மணித்தக்காளி இலை இவற்றைக் கசக்கிச் சில துளிகள் காதில் விட்டால் காதுவலி நீங்கும்.
 44. துளசிச் சுரசம், இஞ்சிசுரசம் சம அளவில் கலந்து உட்கொண்டால் சலதோஷம் தணியும்.
 45. துளசி இலை, இலவங்கம், சுக்கு இம்மூன்றையும் சம அளவில் கொண்டு இளஞ்சூடாக்கிப் பற்றாகப் பூசினால் சலதோஷத்தாலான தலைவலி நீங்கும்.
 46. துளசி இலையை நிழலில் உலர்த்தி தூளாக்கி மூக்கில் நசியமாக இடுவதால் தலைவலி நீங்கும்.
 47. துளசி இலையின் சுரசத்தில் சில துளிகள் நசியமாக மூக்கில் விட்டால் தலையில் தோன்றும் கிருமிகள் நீங்கும்.
 48. மாத விடாயில் பெண்கள் குளித்தபின் துளசி விதைகளை நீருடன் அரைத்து மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை தூய்மை பெற்றுக் கரு நிற்கும்.
 49. துளசி சுரசம் 20 கிராம், மணித்தக்காளி இலைச் சுரசம் 20 கிராம், அமுக்கிராகிழங்கின் சுரசம் அல்லது கஷாயம் 10 கிராம் சேர்த்து தேன் 10 கிராம் கலந்து ஏழு நாட்கள் உட்கெண்டால் பிள்ளை பெற்றதும் தோன்றும் தாய்ப்பால் தூய்மை பெறும்.
 50. துளசி இலைச் சுரசம் 20 கிராம், அரிசிக் கஞ்சியுடன் கலந்து உட்கொண்டு பால் சோற்றை உணவாகக் கொண்டால் பெரும்பாடு நீங்கும்.
 51. துளசி இலைச் சுரசத்தில் கற்கண்டுத்தூள் கலந்து உட்கொண்டால் இரத்தப் பெரும்பாடு தணியும்.

காட்டு துளசி

 • காட்டு துளசி இலைத் தூளும் கற்கண்டும் சம அளவில் கொண்டு உட்கொண்டால் கிரகணி தீரும்.
 • காட்டுத் துளசி விதைகளின் தூளை உட்கொண்டால் பௌத்திரம் உள்மூலம்) நீங்கும்.
 • காட்டுத் துளசி இலையின் சுரசம், ஆடாதொடை இலைச் சுரசம் இவ்விரண்டையும் சம அளவில் கொண்டு உட்கொண்டால் இருமல் தணியும்.
 • காட்டுத்துளசி இலைச் சுரசத்தில் தேன் கலந்து உட்கொண்டால் இழுப்பு நீங்கும்.
 • காட்டுத்துளசி இலைச் சுரசத்தில் இந்துப்பைக் கலந்து மூக்கிலிடு மருந்தாகப் பயன்படுத்தினால் கால்கை வலி தீரும்.

துளசி வேர் தூள்

துளசி வேர்த்தூள், காரும் கருணைத்தூள் சம அளவில் கொண்டு வெற்றிலையுடன் இரண்டு அல்லது மூன்று உளுந்து எடை உட்கொண்டால் விந்து விரைவில் வெளியாகாமல் கட்டுப்படும்.

ராமதுளசி மற்றும் துளசி விதைகளின் தூள் 5 கிராம் அளவு கொண்டு வெற்றிலையுடன் உட்கொண்டால் விந்து கட்டுப்படும்.

சிறுவர்களுக்குத் தோன்றும் நோய்களிலும் துளசியைப் பயன் படுத்துவதால் மிக்க நன்மை உண்டாகும்.

நாய்துளசி ( OCIMVM ALBUM) என்பதுதான் விச்வ துளசி எனப்படுகிறது. இதன் இலைச் சாறை வேளைக்கு 120 துளிகள் வரை சிறுவர்களுக்குப் பயன்படுத்தினால் இருமல் தணியும்.

நாய்துளசிச் செடியை வேருடன் எடுத்துக் கஷாயம் காய்ச்சிப் பயன்படுத்தினால் சீதலக் காய்ச்சல், பித்தக் காய்ச்சல் தணியும். நாய்துளசி இலைகளை அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு முதலிய தோல் நோய்கள் தீரும். இதன் இலையை உலர்த்தித் தேநீர் போல் செய்து பருகினால் பல நோய்கள் தணியும் துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button