கீரை

தூதுவளை பயன்கள்

தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil

தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil தூதுவளை கீரை மருத்துவப் பயன் உள்ளதாகும். இதன் மகத்துவம் தெரியாது பலர் இதனைப் பயன்படுத்துவதில்லை. கொடியாகப் படர்ந்து இலைகள் முட்கள் போன்று இருக்கும். பூ கத்திரிப்பூ நிறத்தில் இருக்கும். காய் சுண்டைக்காய் போல் இருப்பது பழுத்தால் சிவப்பாக மாறிவிடும்.

கீரையின் இலை, காய், பூ அனைத்துமே உடல் நலத்தைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் காயைப் பதார்த்தங்களுடன் சேர்த்து உண்ணலாம். அல்லது காயை தயிரில் ஊற வைத்து வெயிலில் காயவைத்து வறுத்தும் சாப்பிடலாம்.

தூதுவேளைக் கீரை இதுவும் கீரைவகையைச் சேர்ந்ததுதான் என்றாலும் இதைக் கலவைக் கீரையுடன் சேர்ப்பார்களே தவிர இதைத் தனியே சமைத்துச் சாப்பிடுவதில்லை. இது கொடிய உஷ்ணத்தைத் தரக்கூடியதாக இருப்பதால் இதை அதிக அளவில் சாப்பிடுவதில்லை.

தூதுவளை பயன்கள் (thoothuvalai keerai benefits in tamil)

தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil

குத்தல் குடைச்சல்

கீரைக்குண்டான எல்லா சத்தும் அதில் உண்டு. இதை நெய்யில் வதக்கி உப்பு, மிளகு, மிளகாய், பூண்டு சேர்த்து சட்டினியாக அரைத்து எண்ணெயில் தாளித்து உணவுடன் சேர்த்து உண்டால் உடலிலுள்ள எல்லாவித குத்தல் குடைச்சல்களும் நீங்கிவிடும்.

ஆஸ்துமா

இலையைப் பறித்து வந்து நன்றாக இடித்துச் சாறு எடுத்து அதில் கொஞ்சம் தேன் சேர்த்து (சாறு 4 டீஸ்பூன் என்றால் தேன் 4 டீஸ்பூன்) காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் க்ஷயரோகம், ஆஸ்துமா, ஈனினோ பிளியா போன்ற நோய்கள் நீங்கிவிடும்.

காய்ச்சல்

புளூ காய்ச்சல், மலேரியா காய்ச்சல், மூட்டுவலி, உடல் வலி, மலச்சிக்கல் ஆகியவைகள் உண்டானால் கீரையுடன் முசுமுசுக்கை, கண்டங்கத்தரி, துளசி ஆகியவற்றைக் கலந்து கஷாயம் செய்து உண்ணும் போது சீக்கிரம் அகன்றுவிடும்.

டைபாயிட், நிமோனியா போன்ற கடுமையான காய்கால் காரணமாக கபம் உண்டாகி நெஞ்சில் அடைக்கும் போதும், காய்ச்சல் உச்ச அளவை எட்டிய நிலையிலும் கண்கண்ட மருந்தாக தூது வேளைக் கீரை உதவும்.

தூதுவேளைக் கீரை, கண்டங்கத்திரி, விஷ்ணு கிரந்தி, பற்பாடகம் என்ற நான்கு மூலிகைகளையும் கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு கஷாயம் தயாரித்துக் கொள்ளவும் தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil.

ஒரு மணிக்கு ஒரு முறை ஒரு மேஜைக் கரண்டி அளவு (நோயின் தன்மைக்கு ஏற்ப அளவில் கூட்டியோ குறைந்தோ) உட்கொள்ள காய்ச்சல் தணியும். கப அடைப்பு விலகி, மூச்சுத் திணறல் சமணப்படும்.

மேற்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தூதுவேளைக் கீரையை மட்டும் தினசரி உணவோடு சேர்த்து தவறாது சில நாட்கள் உட்கொண்டு வர, காய்ச்சல் காரணமாக பின்னால் வரும் காது செவிடு, காதில் இரைச்சல், காதில் சீழ் வருதல், உடம்பில் நமைச்சல், எரிச்சல், குடைச்சல், அஜீரணம், உடல் பலவீனம் போன்றவை ஏற்படாது தற்காக்கும்.

அரைக்கீரை பயன்கள்

ஆண்மை வீரியம்

தூதுவளை பூ பறித்து வந்து, இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை குறைவு நீங்கி வீரியம் பெறுவார்கள் தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil.

தூதுவளை கீரை இளைப்பு நோய் குணமாக

தூதுவளை கீரை இளைப்பு நோய் குணமாக

தூதுவளை கீரை இளைப்பு நோயைக் குணப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. சிலருக்கு பனி காலத்திலும், மழை காலத்திலும், குளிர்ச்சியைத் தரக்கூடிய பதார்த்ததைச் சாப்பிட்ட காரணத்தினால் இளைப்பு வந்து விடும்.

இந்த சமயம் விலாவின் இருபுறமும் வலிக்கும். மூச்சை இழுத்து விடக் கஷ்டப்படும். இதைக் குணப்படுத்த தூதுவேளைக் கீரை நன்கு பயன்படுகிறது.

தூதுவேளைக் கீரையின் மேல் கூர்மையான முட்கள் அங்கங்கே நீண்டிருக்கும். இந்த முட்களை ஜாக்கிரதையாக அகற்றி விட்டு, ஒரு கைப்பிடியளவு கீரையை பொடியாக நறுக்கி, ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து.

தேக்கரண்டியளவு நல்லெண்ணெய் விட்டு சாம்பார் வெங்காயத்தில் ஐந்து எடுத்துப் பொடியாக நறுக்கிப் போட்டு, சிவந்து வரும் சமயம் கீரையையும் போட்டு, தேவையான அளவு உப்பைக் கொஞ்சம் தண்ணீரில் கரைத்து அதில் விட்டு நன்றாக வெந்தபின் சூட்டுடன் தின்னக் கொடுக்க வேண்டும். காலை, மாலை கொடுத்து வந்தால் இளைப்பு நோய் குணமாகும்.

புத்தித் தெளிவுக்கு

தூதுவேளைக் கீரையை ஆய்ந்து நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது மசியலாகவோ அல்லது குழம்பாகவோ பக்குவம் செய்து உட்கொள்ள கபக்கட்டு அகன்றோடும். மேலும், உடலுக்கு வலிவும் கூடும். புத்தித் தெளிவுக்கும் காரணமாகும்.

இக்கீரையைப் பசுவின் வெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி நெய்யாக உருக்கிக் கொள்ள வேண்டும். இதனை அருந்திவரின் காசம், சளி நோய்கள் நிவர்த்தியாகும்.

கீரையைக் கஷாயமாகச் செய்து கொண்டு கஸ்தூரி, கோரோழனை மாத்திரைகளுக்கு அனுபானமாகக் கொண்டால் சிறு குழந்தைகளுக்கு வரும் கப ஜுரங்கள் தாவடைந்து வராது போகும்.

கபம், கட்டி, எலும்பு

தீராத இருமலுடன் காய்ச்சல் உண்டாகி, கபம், கட்டி, எலும்பு உருக்குவது போல உடம்பு நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழ்க்காணும் முறையில் கஷாயம் செய்து அருந்தினால் நலம் பெறலாம்.

சிறிய சட்டியில் இரண்டு கையளவு கீரையைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிச் சுண்டக் காய்ச்சி ஒரு டம்ளர் கஷாயத்தில் சர்க்கரைப் பால் கலந்து தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் குடித்துவந்தால் நோய் அகன்றுவிடும் தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil.

 

காதுவளை வேலியில் படர்ந்து வளரும் கொடி வகையாகும். இதன் இலைகளிலும், கொடியிலும் கொக்கிப் போன்ற முட்கள் நிறைந்திருக்கும்.

இதன் பூக்கள் கத்திரிப்பூவைப் போன்றும், இதன் பழங்கள் கொத்துக் கொத்தாக சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

தூதுவளை ஓர் அற்புதமான மருத்துவ மூலிகையாகும். சளி, இருமல், ஆஸ்துமா, பலஹீனம், காது, மூக்கு, தலை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும் மூளைத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

மூட்டுவலி – கை, கால் வலி – உடம்பு வலிக்கு தூதுவளை துவையல்

மேற்கண்ட வியாதிகளினால் கஷ்டப்படுகின்றவர்கள் நூது வளையைத் துவையல் செய்து சாப்பிட்டால் நிவாரணம் பெறலாம்.

தூதுவளை இலையைப் பறித்து வந்து முள்நீக்கி தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்து நீரில்லாமல் உலர்த்திக் கொள்ளவும்.

பின்னர் இதனை மட்சட்டியில் போட்டு நெய்விட்டு வதக்கி எடுத்து தேங்காய், உப்பு, மிளகாய், மிளகு, புளி, பூண்டு சேர்த்து அம்மியில் வைத்துத் அவையலாக அரைத்து எடுத்துக் கடுகு தாளிக்கவும்.

இதனை சூடு சோறில் கலந்து சாப்பிடவும். இதுபோன்று செய்து வந்தால் மூட்டுவலி, கை, கால்வலி, உடம்பு வலி போன்ற குறைபாடுகள் நீங்கி குணமாகும்.

சளி தொல்லைக்கு

குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ பல நாட்களாக தீராது சளி, தொல்லை கொடுத்துவந்தால் கீழ்க்காணும் முறையில் நிவாரணம் பெறலாம்.

4 தூதுவளை பழங்களை வெள்ளைத் துணியில் வைத்து சாறு பிழிந்து சிறிது தேன் அல்லது பால் கலந்து இரண்டு வேளை என இரண்டு நாட்கள் கொடுத்தால் சளித் தொல்லை தீரும். ஒரு வயது குழந்தையாக இருந்தால் ஒரு பழம் போதும்.

தூதுவளைப் பூவின் மருத்துவப் பயன்கள்

தூதுவளையைப் பற்றி தேரையர் மிகத் தெளிவாகக் கீழ்க்காணும் பாடலில் உணர்த்துகின்றார்.

தூதுவளைப் பூ சுக்கிலத் தாதுவை விருத்தி செய்கிறது. விந்து தானாக வெளியேறுதல், விந்துவில் உயிர் அணுக்கள் குறைவுபட்டு மலட்டுத் தன்மை அடைவது போன்ற குறைபாடுகள் நீக்கி நல்ல பலனைக் கொடுக்கும்.

ஆஸ்துமாகூடிய ரோகம் நீங்க

மேற்கண்ட வியாதிகளினால் கஷ்டப்படுபவர்களுக்குத் தூதுவளை சாறு ஒரு நிவாரணியாகும்.

இதன் இலையைக் கொண்டு வந்து முள் நீக்கி சுத்தமாகக் கழுவி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

சாறு 4 ஸ்பூன், தேன் 2 ஸ்பூன் எனக் கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது போன்று இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிடவும்.

இதனால் ஆஸ்துமா, க்ஷயரோகம் ஆகியவைகள் நீங்கும். அத்துடன் மற்றும் சில வியாதிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.

தொடர் தும்மல் நிற்க

சில சமயம் தும்மல் உண்டானால் நிற்காமல் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை உண்டாகிவிடும். இதனை நிறுத்த ஒரு முறை.

தூதுவளை இலையுடன் 5 மிளகைச் சேர்த்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து 750 மில்லி நீர் விட்டு கொதிக்க வைத்துப் பின்னர் பால் சர்க்கரை சேர்த்துக்குடித்தால் தொடர் தும்மல் காணாமல் போய்விடும் தூதுவளை பயன்கள் thoothuvalai keerai benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button