நாட்டு மருந்து

திப்பிலி மருத்துவ குணங்கள்

thippili benefits in tamil திப்பிலி மருத்துவ குணங்கள் திப்பிலி பயன்கள் திப்பிலி தீமைகள் இரண்டும் உள்ளது.   இருமலுக்கு திப்பிலி, சுக்கு, வெங்காயம் வகைக்கு 212 கிராம், இண்டன் செடியின் வேர், தூதுவேளை வேர் இவைகள் வகைக்கு 10 கிராம் எடை எடுத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்குத் தண்ணீராக வற்ற வைத்து, இறக்கி வடிகட்டி, வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை குடித்து வந்தால் இருமல் குணமாகும்.

திப்பிலி மருத்துவ குணங்கள் (thippili benefits in tamil)

வயிற்றுப் போக்கு குணமாக

மலச்சிக்கல் பிரச்சனை

திப்பிலி, கோரைக்கிழங்கு, வில்வவேர், கொத்துமல்லி, சிறு நாகப்பூ, வில்வமரத்துப் பட்டை இவற்றில் வகைக்கு 5 கிராம் எடை எடுத்து தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு, அரை ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி, வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் காலை, மாலை மூன்று நாள் சாப்பிட வயிற்றுப் போக்கு குணமாகும்.

தோஷம் குணமாக திப்பிலி மருத்துவ குணங்கள்

தோஷம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கு உண்டானால், திப்பிலி, அதிமதுரம், கோரோசனை இவைகளில் வகைக்கு 5 கிராம் எடை எடுத்து, முலைப்பால் விட்டு மைபோல அரைத்து சங்களவு முலைப்பாலில் கலந்து காலை, மாலை இதே போல கொடுத்து வந்தால் தோஷம் குணமாகும்.

குழந்தைகளுக்கு கார மாத்திரை

குழந்தைக்கு டானிக்

இந்த மாத்திரையைத் தயார் செய்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தலைக்கு ஊற்றியவுடன் வயதுக்கு ஏற்றபடி ஒன்று அல்லது இரண்டு மாத்திரையை வெந்நீரில் கரைத்துக் கொடுத்துவிட்டால் எல்லாவகையான மாந்தமும் தோஷமும் குணமாகும். ஜலதோஷம் ஏற்படாது திப்பிலி மருத்துவ குணங்கள் thippili benefits in tamil .

திப்பிலி, கடுகுரோகினி, சீரகம், சுக்கு, மிளகு, வேப்பங் கொழுந்து வகைக்கு 5 கிராம் எடை எடுத்து, மைபோல அரைத்து மிளகளவு மாத்திரைகளாகச் செய்து, நிழலில் காயவைத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, உபயோகப்படுத்த வேண்டும்.

திப்பிலி பயன்கள் காசம் குணமாக

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையைக் கொண்டுவந்து, ஆய்ந்து நன்றாகக் காயவைத்து, இடித்துச் சல்லடையில் சலித்து எடுத்து, அதே அளவு திப்பிலித் தூளையும் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு கழற்சிக்காயளவுத் தூளைத் தேனில் கலந்து காலை, மாலை தொடர்ந்து 21-நாள் சாப்பிட்டு வந்தால் காசம் குணமாகும்.

திப்பிலி பயன்கள் மூல நோய் குணமாக

மூல நோய் குணமாக

20கிராம் எடை திப்பிலியை இடித்துத் தூள் செய்து சல்லடையில் சலித்து எடுத்து குப்பைமேனியிலையைச் சருகாகக் காயவைத்து அதை இடித்துப் பொடி செய்து, சலித்து அதில் 20 கிராம் எடை எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு தேன் கலந்து தொடர்ந்து 40-நாள் சாப்பிட மூலநோய் குணமாகும்.

கபம், இருமல் குணமாக திப்பிலி 20 கிராம் எடை, சீரகம் 30 கிராம் எடை, சுத்தமான பட்டுத் துணியைச் சுட்ட சாம்பல் 5 கிராம் எடை, அதே அளவு மயில் இறகைச் சுட்டுக் கரியாக்கிய சாம்பல் இவைகளை எல்லாம் ஒன்றாகக் கலந்து, மறுபடி ஒருமுறைச் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு தூளுடன் தேன் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கபம், இருமல் குணமாகும்.

காய்ச்சலின் போது கொடுத்தால் காய்ச்சலின் வேகம் தணிந்து படிப்படியாகக் குணமாகும். இதைத் தயார் செய்து வீட்டில் வைத்திருந்தால் சமயத்திற்கு நன்கு பயன்படும் திப்பிலி மருத்துவ குணங்கள் thippili benefits in tamil .

சகல வாய்வும் குணமாக

திப்பிலி, பொரித்த வெங்காயம், மிளகு, கறிவேப்பிலை மூன்றுநாள் தயிரில் ஊறவைத்துக் காயவைத்த சுக்கு இவைகளில் வகைக்கு 10 கிராம் எடுத்து உரலில் போட்டு இடித்துச் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் சகல வாய்வும் குணமாகும். கிராணி, உஷ்ணவாய்வு, பசிமந்தம், புளியேப்பம், வயிற்றுவலி குணமாகும்.

காய்ச்சல் குணமாக திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி, கோஷ்டம், அதிமதுரம் வகைக்கு 5 கிராம் எடை, 10 கிராம் எடை திராட்சைப்பழம், கைப்பிடியளவு நெற்பொரி, ஐந்து ஏலக்காய் இவைகளை அம்மியில் வைத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி, காலை, மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சலுக்கு திப்பிலி சூரணம்

திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி, கருஞ்சீரகம், சுக்கு, இந்துப்பு, வகைக்கு 10 கிராம் எடை எடுத்து இடித்துப் பொடி செய்து சலித்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் காய்ச்சல் குணமாகும் திப்பிலி பயன்கள்.

இருமல் குணமாக

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள்

திப்பிலி, கடுக்காய்த் தோல், தான்றிக்காய்த் தோல், சிறுதேக்கு, சடாமஞ்சி, மிளகு, சுக்கு, கோஷ்டம், தூதுவளைவேர், கண்டங்கத்திரி வேர் இவைகளை வகைக்கு 10 கிராம் எடை எடுத்து இடித்துப் பொடி செய்து, சலித்து வைத்துக் கொள்ளலாம்.

5 கிராம் எடை இந்துப்பும் அதனுடன் கலந்து மறுபடியும் அனைத்தையும் ஒன்றாக இடித்து சலித்து ஒரு சீசாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தினசரி காலை, மாலை கழற்சிக்காயளவு தூளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

வசம்பு மருத்துவ குணங்கள்

அஜீரன் ரண வயிற்றுவலி குணமாக

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

திப்பிலி, மிளகு, சுக்கு, வகைக்கு 10 கிராம் எடை பனை வெல்லம் 25 கிராம் எடை இவைகளை நன்றாக அரைத்து கழற்சிக்காயளவு உருண்டை செய்து வைத்துக் கொண்டு காலையில் மட்டும் ஒரு உருண்டை வீதம் தொடர்ந்து ஏழு நாள் சாப்பிட்டு வந்தால் அஜீரண வயிற்று வலி அடியோடு குணமாகும்.

உஷ்ணபேதி நிற்க

மலச்சிக்கல் பிரச்சனை திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி, ஏலரசி, மிளகு, சுக்கு, கிராம்பு, அக்ரகாரம், கோஷ்டம், அதிமதுரம், ஜாதிக்காய், சீரகம், கடுக்காய், வசம்பு வகைக்கு 5 கிராம் எடை வீதம் உரலில் போட்டு இடித்து சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை அரைத் தேக்கரண்டி, அதே அளவு சர்க்கரைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உஷ்ணபேதி குணமாகும் திப்பிலி பயன்கள் திப்பிலி மருத்துவ குணங்கள் thippili benefits in tamil.

திப்பிலி தீமைகள் 

திப்பிலி பயன்கள் இருந்தாலும் திப்பிலி தீமைகள் உள்ளது.  திப்பிலி அதிக நாட்கள் உட்கொண்டால் அஜீரண கோளாறு வயிற்று வலி போன்ற வயிற்று பிரச்சனை உண்டாகும். இதனால் திப்பிலியை குறைவாக உட்கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்மார்கள் திப்பிலியை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button