மூலிகைசெடி மரம்

thavasi keerai benefits in tamil | தவசி கீரை பயன்கள்

thavasi keerai benefits in tamil தவசி கீரை பயன்கள் தவசிக்கீரை சத்து நிறைந்த கீரைகளிலே தவசிக் கீரை முதலிடம் பெறுகிறது. இதனை வைட்டமின் கீரை எனச் சொல்வார்கள். ஏனெனில் இக்கீரையில் அடங்கியுள்ள வைட்டமின்கள் சிறந்த பயனைவிளைக்கவல்லது.

thavasi keerai benefits in tamil | தவசி கீரை பயன்கள்

இக்கீரையில் வைட்டமின் A, B, 22, சிறிதளவு , ஆகிய வைட்டமின்கள் நிறைந்து இருப்பதினால் இதனை மல்டி வைட்டமின் கீரை என்று சொல்கிறார்கள். அத்துடன் இந்தக் கீரையில் தாது உப்புகளும் பாதமும், மாவுப் பொருட்களும் மிகுந்த அளவு இருக்கின்றன. இதனால் இக்கீரை ஒரு சிறந்த கீரையாகக் கருதப்படுகிறது.

தவசிக் கீரை மிகவும் சத்து மிகுந்த கீரையாகும். இக்கீரையைப் பச்சையாக உண்ணலாம். இலைகளும் இளந்தண்டுகளும் சமைத்து உண்பதற்குப் பயன்படுகின்றன. நம் உணவில் இக்கீரையைச் சேர்த்துக் கொள்வது ஒரு சிறந்த ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகோல்வதற்கு ஓர் எளிய சின்ன வழியாகும்.

பிண்ணாக்கு கீரை பயன்கள்

இக்கீரையில் மணிச்சத்து நிறைந்திருக்கின்ற காரணத்தால் எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு இக்கீரை பெரிதும் பயன்படுகிறது. கணக்கு வராத மாணவர்கள் நாள்தோறும் இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் சிறப்பாகக் கணிதப் பாடம் வரும் என்று கூறுவர்.

இதற்குக் காரணம் இக்கீரையில் அடங்கியுள்ள மணிச்சத்தே ஆகும். அன்றியும் இக்கீரையில் இரும்புச் சத்து நிறைய இருப்பதினால் இரத்த விருத்திக்குப் பயன்படுகிறது. எனவே உணவுடன் இக்கீரையைச் சேர்த்துக் கொள்வதினால் இரத்த விருத்தியும் உடற்கட்டும் உடல் செழுமையும் ஏற்படும்.

இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் செய்து உண்ணலாம். தனியாகப் பொரியல் செய்து தேங்காய்த் துருவலிட்டு சமைத்து உண்ணலாம். பாசிப்பயறு மற்றும் துவரம் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம்.

இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடையல் செய்து உண்ணலாம். இதனைத் தயிருடன் சேர்த்துக் தயிர்க்கூட்டு மற்றும் மோர்க்குழம்பும் செய்து உண்ணலாம். சிறப்பாக இக்கீரையை உண்ணும் பொழுது இக்கீரையில் அடங்கியுள்ள உயிர்ச்சத்துகளும், தாது உப்புகளும் எந்த வித அழிவுமின்றி உணவோடு கலந்து இரத்தத்தில் எளிதில் கலந்து சிறந்த பயனை விளைவிக்கக் கூடியது.

தவசிக் கீரையில் சிறப்பான உணவுச் சத்துக்கள் இருக்கின்றன. இக்கீரை நூற்றுக்கு நூறு உணவாகப் பயன்படுகிறது.

  • இதில் 73.6 விழுக்காடு நீர்ச்சத்தும்,
  • 68 விழுக்காடு புரதமும்,
  • 3.2 விழுக்காடு கெழுப்புச் சத்தும்,
  • 3.4 விழுக்காடு தாது உப்புகளும்,
  • 1.4 விழுக்காடு நார்ச்சத்தும்,
  • 11.6 விழுக்காடு மற்றைய மாவுச் சத்துகளும் நிறைந்தள்ளன.

இக்கீரை 103 கலோரி வெப்ப ஆற்றலை கொடுக்க வல்லது. தாது உப்புகளைப் பொறுத்த அளவில் நூடி கிராம் தவசிக் கீரையில் 570 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 200 மில்லி கிராம் மணிச்சத்தும் 28 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உள்ளன.

தவசிக் கீரையை ஒரு மல்டி வைட்டமின் கீரை என்று சொன்னோம். தவசிக் கீரையில் உயிர்ச்சத்தான வைட்டமின் ஏ சத்து 9510 அகில உலக அலகு இருக்கிறது. அன்றியும் நூறு கிராம் கீரையில் 0.48 மில்லிகிராம் தயாமினும், 0.92 மில்லிகிராம் ரைபோஃபிளேமினும், 2.6 மில்லிகிராம் நிக்கோடினில் அமிலமும், 247 மில்லிகிராம் வைட்டமின் சி-யும் இருக்கின்றன thavasi keerai benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button