கீரை

thandu keerai health benefits | தண்டு கீரை பயன்கள்

thandu keerai health benefits தண்டு கீரை பயன்கள் முளைக் கீரை சற்று வளர்ந்து முற்றியதும் பயன்படுத்துவதால் கீரைத் தண்டு எனப்படுகிறது. இதில் இரண்டு உள்ளன. ஒன்று வெளிர் பச்சையாக இருக்கும். மற்றொன்று சிகப்பு நிறத்தில் இருக்கும்.

வெளிர் நிறமுடைய கீரைத்தண்டில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் உள்ளது. சிகப்பு நிறமுடைய கீரைத்தண்டில் ருசி அதிகமாகவும் சத்து குறைவாகவும் இருக்கும்.

வெள்ளை நிறமுடைய கீரைத் தண்டைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி குறையும், மூலச் சூடு தணியும், நீர்க்கடுப்பு அகலும், வாதவலி உள்ளவர்கள் கண்டிப்பாக வெள்ளைக் கீரை தண்டைச் சாப்பிடக் கூடாது.

சிவப்பு நிறக் கீரைத் தண்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும், குடல் புண் நீங்கும்.

ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளையும், கருப்பையில் ஏற்படும் சிக்கலையும் நீக்கி நலமடையச் செய்கிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button