மற்றவை

சுண்ணாம்பு கல் பயன்கள்

சுண்ணாம்பு கல் பயன்கள் – Sunnambu benefits in tamil

கட்டிகள் உடைய

Sunnambu benefits in tamil சுண்ணாம்பு கல் பயன்கள் மாவிலங்கப் பட்டை, சுண்ணாம்பு இரண்டையும் சம அளவு எடுத்து மைபோல அரைத்து, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுக் குழப்பி, கட்டியின் மேல் கனமாகப் போட்டால் கட்டி பழுத்து உடையும்.

தீராத வெட்டை நோய் குணமாக

அரைக்கிலோ சுண்ணாம்புக் கல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கைப்பிடியளவு தண்ணீரை விட்டால் அது கொதித்து நீர்க்கும். நீர்த்தவுடன் அதை நன்றாகக் கலக்கிவிட்டு அப்படியே தெளிய வைத்துவிட வேண்டும்.

மறுநாள் பார்த்தால் அதில் சுண்ணாம்பு அடியில் தேங்கி நிற்கும், மேலே தெளிவான நீர் இருக்கும். இந்த நீரை மட்டும் சுண்ணாம்புக் கலக்காதபடி எடுத்து, ஆழாக்குச் சுண்ணாம்புத் தண்ணீருடன் அரை ஆழாக்கு நல்லெண்ணெய்க் கூட்டிக் கலக்கி காலையில் மட்டும் குடித்து விடவேண்டும்.

இந்த விதமாக மூன்று நாள் சாப்பிட்டால் போதும். தீராத வெட்டை நோய் குணமாகும்.

மஞ்சள் காமாலைக்கு

மஞ்சள் காமாலைக்கு

ஆழாக்குத் தயிருடன் இரண்டு கழற்சிக்காயளவு (10 கிராம்) சுத்தமான சுண்ணாம்பைப் போட்டுக் கரைத்துக் காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 3 நாள் சாப்பிட்டால் போதும். மஞ்சள் காமாலை குணமாகும்.

அடிபட்ட காயம்

காயத்தைச் சுத்தம் செய்துவிட்டு, வெள்ளைப் பூண்டு பற்களையும் அதே அளவு சுண்ணாம்பையும் சேர்த்து மைபோல அரைத்து, காயத்தில் வைத்துக் கட்டி விட்டால் காயம் ஆறும்.

அரையாப்புக் கட்டிக்கு

கொட்டைப் பாக்களவு சுண்ணாம்புக் கல்லை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து கோழிமுட்டையை உடைத்து அதன் வெண்கருவை மட்டும் அதில் விட்டு மறுபடிமைபோல அரைத்து இதை வழித்து அரையாப்புக் கட்டியின் மேல் கனமான பற்றாகப் போட்டு, வசதி இருந்தால் துணி கொண்டு கட்டிவிடலாம். மறுநாள் அந்தயிடத்தில் வலியிருக்காது.

கட்டியும் மறைந்து விடும். அப்படிக் கட்டி கரையாவிட்டால் கழுவிவிட்டு மறுபடி போட, மூன்று நாளில் கட்டிப் பழுத்து உடையும். இரத்தம் சீழ் வந்தபின் உள்ளே உள்ள முளையும் வரும்படி எடுத்துவிட்டுச் சுத்தம் செய்து கருப்புப் பிளாஸ்திரி போட்டால் புண் ஆறும் sunnambu benefits in tamil.

நீர் இறங்க சுண்ணாம்பு பயன்கள்

சுண்ணாம்பையும், வெள்ளரி விதையையும் மைபோல அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பற்றுப் போட்டால் கால்மணி நேரத்தில் நீர்ப்பிரியும். வெள்ளரிவிதை கிடைக்காவிட்டால் சுத்தமான உமிழ்நீரை விட்டுக் குழப்பிப் பற்றுப் போடலாம்.

தேள் கொட்டுக்கு

தேள் விஷம் இறங்க

சுண்ணாம்பை எடுத்து அதே அளவு நவச்சாரத்தையும் கூட்டிப் பிசைந்து கொட்டின இடத்தில் வைத்து நன்றாகத் தேய்த்தால் தேள் விஷம் இறங்கிவிடும்.

வெந்நீர், தீச்சுட்ட புண் ஆற

வெந்நீர் அல்லது தீச்சுட்டயிடத்தில் கொப்புளம் தோன்றி, அந்தயிடம் புண்ணாகிவிடும். புதிய காரமுள்ள சுண்ணாம்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதைப் போல இருமடங்குத் தண்ணீரை அதில் விட்டு நன்றாகக் கலக்கிவிட்டு அப்படியே வைத்துவிட்டால் சுண்ணாம்பின் மேல் பக்கம் தெளிந்த நீர் நிற்கும்.

இந்த நீரை மட்டும் அரை அவுன்ஸ் அளவு எடுத்து ஒரு சீசாவில் விட்டு, அதே அளவு தேங்காயெண்ணையை அதில் விட்டுக் குலுக்கினால், இரண்டும் கலந்து நெய் போல கெட்டியாகிவிடும் sunnambu benefits in tamil.

இதை எடுத்து, தீச்சுட்ட புண்ணின் மேல் தடவி பஞ்சியை ஒட்ட வைத்து விடவேண்டும். இந்த விதமாகக் காலை, மாலை தடவி வந்தால் புண் ஆறும்.

வசம்பு மருத்துவ குணங்கள்

நாய், பூனை, எலி, மூஞ்சுறு கடித்துவிட்டால் விஷம் நீங்க

சுண்ணாம்பு. மஞ்சள், உப்பு இந்த மூன்று பொருளையும் சமஅளவு எடுத்து மை போல அரைத்து கடிவாயைச் சுத்தம் செய்துவிட்டு மருந்தைச் சிறிது நேரம் தேய்த்துவிட்டுப் பிறகு கனமாக வைத்துக் கட்டி விட்டால் விஷம் நீங்கும்.

நாய் கடிக்கு சுண்ணாம்பு பயன்கள்

நாய் கடித்தவுடன் சுண்ணாம்பு, புகையூரல் அதாவது சமையல் அறையில் அடுப்பிற்கு மேலுள்ள சுவற்றில் படிந்து இருக்கும் புகைப்படலம் இவைகளைச் சமமாக எடுத்து மைபோல அரைத்து, நாயுருவி இலையைக் கொண்டு வந்து அரைத்து அதில் ஒரு பகுதியை இந்த மருந்துடன் வைத்து மறுபடி அரைத்து இதைக் கடிவாயில் வைத்து, இதற்குமேல் அரைத்த நாயுருவி இலையை அடை போலத் தட்டி வைத்துக் கட்டிவிட வேண்டும். இந்த விதமாக மூன்று நாள் செய்ய விஷம் நீங்கும். புண் ஆறும்.

சேற்று புண் ஆற

சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றைச் சம அளவு எடுத்து மைபோல அரைத்து, சேற்றுப் புண்ணின் மேல் தடவி விடவேண்டும். தினசரி இரவு படுக்குமுன் விரல் சந்துகளை நன்றாகக் கழுவியபின் மருந்து போட்டால் இரண்டே நாளில் புண் ஆறிவிடும் சுண்ணாம்பு பயன்கள் sunnambu benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button