வீட்டு மருத்துவம்

Sundakkai health benefits in tamil | சுண்டைக்காய் பயன்கள்

சுண்டைக்காய் பயன்கள் sundakkai health benefits in tamil சுண்டைக்காய் சுண்டைக்காயைப் பெரும்பாலும் மோரில் உப்புப் போட்டு ஊற வைத்து, பின் காயவைத்து வற்றலாக தயார்செய்து உபயோகிப்பார்கள். இதனைப் பச்சையாகப் பயன்படுத்தினால் மேலும் நல்ல பலனைப் பெறலாம்.

Sundakkai health benefits in tamil – சுண்டைக்காய் பயன்கள்

சுண்டைக்காயை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொண்டால் எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி, கண் பாதுகாப்பு, பற்களில் எனாமல் பாதுபாப்பு, நரம்புகள் வலிமை போன்றவற்றிற்கு உறுதுணையாகிறது.

இதில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் ஏ-சத்து மற்றும் பி, சி, வைட்டமின் உயிர்ச்சத்துகளும் அடங்கியுள்ளன.

இதனைப் பருப்புடன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். சுண்டைக்காய் பொதுவாக மருத்துவக் குணங்கள் நிறைந்தது. சுண்டைக்காய் கசப்புத் தன்மை உள்ளதால்தான் அதனை வற்றல் செய்து உண்கின்றனர். அதனால் கசப்புத் தன்மை சற்றுக் குறைந்து விடுகிறது. வற்றலாகச் சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையளிக்கும்.

வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பதினால் குடலில் வளரும் கீரிப் பூச்சிகள், அதனை உண்டாக்கும் முட்டைகள் ஆகியவற்றை உடனே வெளியேற்றும். அதனால் அப்பூசிகளால் உண்டாகும் சோகை, காமாலை, மூலம், பவுத்திரம் போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

சுண்டைக்காயை எண்ணெயில் வறுத்து அதனைப் பொடி செய்து, அத்துடன் சுக்கு, மிளகு, பெருங்காயம், கொத்துமல்லி, உப்பு இவைகளையும் பொடி செய்து சுண்டைக்காய் வற்றல் பொடியுடன் கலந்து சூடான சோறில் கலந்து நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட வேண்டும். இதனால் பித்தம், மயக்கம், கிறுகிறுப்பு, பித்தவாந்தி, தலைவலி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.

தேங்காய் எண்ணெய் பயன்கள்

தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சொரசொரப்பான தோல் பளபளப்பாக மாறும்.

பல் சொத்தை, பல்வலி, ஈறுவலி, பல்லில் நீர் சுரந்து வருதல் போன்ற நோய்களுக்கு, சுண்டைக்காயை காயவைத்து இடித்து சலித்துப் பொடியாக்கி அதில் கொஞ்சம் உப்பு கலந்து பல்பொடியாக தினமும் உபயோகிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்நோய்கள் விரைவில் குணமாகும்.

இரத்தத்தில் கலக்கும் தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உண்டு.

சுண்டைக்காய் உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பு அளிப்பதினால் எல்லாரும் இதனைப் பயன்படுத்திப் பலனைப் பெறவேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button