வீட்டு மருத்துவம்

சுண்டைக்காய் பயன்கள்

Sundakkai benefits in tamil சுண்டைக்காய் பயன்கள் சிறு மர இனத்தைச் சேர்ந்தது. இதனை வீடுகளில் தோட்டங்களில் வளர்ப்பதுண்டு. இது மலைப்பாங்கான இடங்களில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதில் மலைச் சுண்டை, பால் சண்டை ஆனைச் சுண்டை என மூன்று வகைகள் உள்ளன.

சுண்டைக்காய் பயன்கள் – Sundakkai benefits in tamil

சுண்டைக்காய் வற்றல் பயன்கள்

சுண்டைக்காய் வற்றலை நெய்விட்டு வறுத்துப் பொடி செய்து சாதத்தில் சேர்த்துச் சாப்பிட்டால் சில பிணிகளைப் போகுகிறது.

வயிற்றிலுள்ள புழுக்களைக் கொல்கிறது. வாயுவை நீக்குகிறது. அஜீரணக் கோளாறு குணமாக்குகிறது. கழிசலை நிறுத்தி உடலுக்கு ஊட்டத்தை அளிக்கிறது.

ஒற்றைத்தலைவலி, மூச்சுவிட சிரமம்

தலைவலி குணமாக

மேற்கண்ட குறைபாடுகளினால் சிரமமப் படுகின்றவர்களுக்கு சுண்டை வேர் பயன்தருகிறது. சுண்டை வேரைக் கொண்டு வந்து சுத்தமாகக் கழுவி நன்கு உணர்த்தி இடித்துச் சூரணம் செய்து தேங்காய் சிரட்டையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒற்றைத் தலைவலி, ஜலதோஷத்தினால் மூச்சுவிட சிரமம் ஆகியவை உண்டானால் இந்தப் பொடியில் 1 சிட்டிகை அளவு எடுத்து நசியமிட்டு வந்தால் குணமாகும்.

பேரிச்சம் பழம் நன்மைகள்

வாதம், பித்தம், கபம்

வாந்தி நிற்க

மேலே கண்டவற்றால் உண்டாகும் நோய்களுக்கு சுண்டை வேர், தும்பை வேர். இலுப்பைப் புண்ணாக்கு இம்மூன்றையும் சம எடை எடுத்து நன்கு பொடி செய்து நயமிட்டு வந்தால் வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

சீதக்கழிசல், செரிக்காமல் கழிசல் நீங்க

மேற்கண்டவற்றால் கஷ்டப்படுகிறவர்கள் சுண்டைவற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, நெல்லி வற்றல், ஓமம், கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு ஆகியவைகளை சம அளவு எடுத்துக் கொள்ளவும்.

இவைகளைத் தனித்தனியாக இள வறுவலாக வறுத்துப் பொடி செய்து ஒன்றாக்கிப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

வேளைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து மோருடன் கலந்து குடிக்கவும். இதுபோன்று மூன்று வேளைக்குடித்துவந்தால் கழிசல் நோய் குணமாகும் sundakkai benefits in tamil சுண்டைக்காய் பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button