நாட்டு மருந்து

சுக்கு பயன்கள்

sukku benefits in tamil சுக்கு பயன்கள் dried ginger in tamil சுக்கு முற்றின இஞ்சியைக் கொண்டு சுக்குத் தயார் செய்கின்றனர். சிலவகைப் பலகாரங்களுக்கு வாசனை கொடுப் பதற்காகவும், சீக்கிரம் ஜீரணமாவதற்காகவும் சமையலுடன் சுக்கைச் சேர்ப்பார்கள்.

பொதுவாகச் சுக்கை ஒரு மருந்துச் சரக்காகவே கருதுகின்றனர். சுக்கு காரமான பொருள். இதற்குத் தனிப்பட்ட ஒரு வாசனையுண்டு. சுக்கு பல வியாதிகளை குறிப்பாக வாய்வு சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. சிலவகைக் கஷாயம், லேகியம், சூரணம் இவைகளுடன் சுக்கையும் சேர்க்க கூடியதாக வேண்டியிருக்கும். சுக்கு கூட்டு மருந்தாகவும், தனிப்பட்ட முறையிலும் வியாதிகளைக் குணப்படுத்தக் இருக்கிறது.

sukku benefits in tamil சுக்கு பயன்கள்

sukku benefits in tamil சுக்கு பயன்கள்

வாய்வு நீங்க

வாய்வு நீங்க சுக்கைக் கொண்டு பலவிதமான மருந்துகள் தயார் செய்யலாம். சாதாரணமாக சிறிதளவு வெல்லத்துடன் 2 கிராம் சுக்கைத் தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்குத் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி பால் சேர்த்து அல்லது சேர்க்காமல் இரவு படுக்குமுன் குடித்துவிட வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து 21 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் வாய்வு தொந்தரவு அறவே நீங்கும். sukku benefits in tamil சுக்கு பயன்கள் dried ginger in tamil.

நீர்க்கட்டு உடைய

சுக்கு, அதிமதுரம், ஏலரசி, சீரகம், அக்கரகாரம், நெற்பொரி இவைகளில் ஒவ்வொன்றும் 10 கிராம் எடை வீதம் எடுத்து, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு 5 கிராம் மயில் இறகைச் சுட்டுச் சாம்பலாக்கி அதைத் தூள் செய்து இதில் போட்டு ஒரு குண்டு மணியெடை கஸ்தூரியையும் இவற்றுடன் கூட்டி மறுபடி சல்லடையில் சலித்து நன்றாகக் கலந்து ஒரு வாயகன்ற சீசாவில் கொட்டி மூடி வைத்துவிட வேண்டும்.

நீர்க்கட்டு ஏற்பட்ட சமயம் கழற்சிக்காயளவு தூளை எடுத்து தேக்கரண்டியளவு தேனில் போட்டுக் குழப்பிக் கொடுக்க வேண்டும். அரைமணி நேரத்திற்கு ஒருமுறையாக நான்கு முறை கொடுத்தால் போதும் நீர்க்கட்டு உடைந்து நீர் வெளியேறும் sukku benefits in tamil சுக்கு பயன்கள்.

பித்த சோகை குணமாக

சுக்கு, நெல்லிமுள்ளி, ஏலரிசி, சீரகம் இவைகள் வகைக்கு 20 கிராம் எடை வீதம் எடுத்து உரலில் போட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி காலை, மாலையாக வேளைக்கு கழற்சிக்காயளவு (5 கிராம்) தூளை எடுத்து அரைத் தேக்கரண்டி யளவு தேனில் போட்டுக் கலக்கிச் சாப்பிட்டு விடவேண்டும் இந்த விதமாக தொடர்ந்து 21-நாள் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குணமாகும்.

வாய்வு பிடிப்பு குணமாக

சுக்கை நன்றாக காயவைத்து இடித்துப் பொடிசெய்து சல்லடையில் சலித்து வைத்துக்கொண்டு இரண்டு கழற்சிக்காயளவு தூளுடன் அதேயளவு பனம் வெல்லம் கூட்டி வாயில் போட்டு நன்றாகக் குதப்பி விழுங்கி விடவேண்டும்.

இவ்விதமாக மூன்று நாள் சாப்பிட வேண்டும். அதே நேரம் சுக்கையும், பெருங்காயத்தையும் அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போடவேண்டும்.

பித்த காய்ச்சல் குணமாக

காய்ச்சல் குணமாக

சுக்கு, கருஞ்சீரகம், திப்பிலி, சீரகம், இந்துப்பு வகைக்கு 5 கிராம் எடை வீதம் எடுத்து இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு சிறிதளவு தூளை எடுத்துக் காலை, மாலை இருவேளையாக மூன்றே நாள் சாப்பிட்டால் போதும். பித்தக் காய்ச்சல் குணமாகும்.

நிலவாரை சூரணம்

நிலவாரை இலையைக் கொண்டு வந்து அதைச் சுத்தம் பார்த்து ஒரு சட்டியில் ஆழாக்குப் பால்விட்டு மேலே துணிவேடு கட்டி அதன் மேல் இலையை வைத்து அடுப்பில் வைத்து பிட்டு போல அவித்து எடுத்துக் காயவைத்து சருகு போல ஆனதும் இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு இதல் 20 கிராம் சுக்கு, ஓமம், வாய்விளங்கம், மிளகு சேர்த்து, இடித்துச் சலித்து வைத்துச் சேர்த்து கலக்கி சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சுண்டைக்காயளவு எடுத்து, அதுபோல இரண்டு பங்கு பழுப்புச் சர்க்கரையைச் சேர்த்து காலை, மாலையாக சாப்பிட்டு வந்தால் வாய்வு நீங்கும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வயிற்றுப் பொருமல், உடல் எரிச்சல், புளியேப்பம், பசிமந்தம் இவைகள் குணமாகும் sukku benefits in tamil சுக்கு பயன்கள்.

பசிமந்தம் நீங்க

சிலருக்கு நல்ல பசி ஏற்படாது. எப்போது பார்த்தாலும் மந்தமாகவே இருக்கும். இவர்களுக்குக் கீழ்க்கண்ட மருந்து நல்ல பலன் தரும்.

சுக்கு, திப்பிலி, சீரகம், இந்துப்பு, மிளகு, கறிவேப்பிலை வகைக்கு 5 கிராம் எடை, வறுத்த பெருங்காயம் 21 கிராம் எடை இவைகளை எல்லாம் இடித்துச் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்கு முன் அரைத் தேக்கரண்டியளவு தூளை எடுத்து சுடும் சாதத்துடன் சேர்த்துப் பிசைந்துச் சாப்பிட்டு விட்டுப் பிறகு குழம்போ, சாம்பாரோ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பசிமந்தம் போகும்.

நல்ல பசி தீபனம் உண்டாகும். சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கிறது என்று கூறுகிறவர்களுக்கு இதே போல செய்து வந்தால் வயிற்றுவலி குணமாகும். நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.

சீதபேதி குணமாக

கறிவேப்பிலையைச் சருகுபோலக் காயவைத்து அதில் 10 கிராம் எடை, அதேயெடை ஓமம், உப்பு, மிளகு, சுக்கு, திப்பிலி, பெருங்காயம் சுண்டைக்காய் வற்றல் இவைகளை எல்லாம் ஒரு சட்டியில் போட்டு லேசாக வறுத்து எடுத்து உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சல்லடையில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சாதம் சாப்பிடுமுன் ஒரு பிடி சாதத்துடன் இரண்டு சுண்டைக்காய் அளவு தூளைப் போட்டுத் தேக்கரண்டியளவு பசுவின் நெய் விட்டுப் பிசைந்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் நீங்க

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

ஆழாக்களவு புளித்த தயிரை ஒரு களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு 20 கிராம் எடைச் சுக்கைத் தோல் சீவிவிட்டு அதைத் துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு ஒருநாள் மூடிவைத்து நன்றாக வாறவிட வேண்டும்.

மறுநாள் எடுத்து ஒரு தட்டில் போட்டுக் காயவைக்க வேண்டும். மீதமுள்ள தயிரை பாத்திரத்தில் விட்டு துணிகட்டி வெய்யிலில் வைக்க வேண்டும்.

மாலையில் சுக்கு காய்ந்த பின் மறுபடியும் அதைத் தயிரில் போட்டு இரவு மூடி வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் சுக்கை மட்டும் தட்டில் போட்டுக் காயவிட வேண்டும். காய்ந்தபின் மறுபடி தயிர் இருந்தால் அதில் போடவேண்டும்.

இல்லாவிட்டால் சுக்கை மட்டும் சருகு போல் காயவிட வேண்டும். நன்றாகக் காய்ந்தபின் உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கழற்சிக்காயளவு (5 கிராம்) தூளை ஆழாக்குப் பசும் மோரில் போட்டுக் கலக்கி காலையில் மட்டும் சாப்பிட் விடவேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் சகல கோளாறுகளும் குணமாகும்.

வயிறு இரைந்து வயிற்றால் போவது நிற்கும். வயிற்று உப்பிசம் , அஜீரணம், தீராத வயிற்றுவலி, பசிமந்தம், சாப்பிட்டவுடன் ஏற்படும் வயிற்றுவலி, வாய்வுக் குத்தல் இவைகள் குணமாகும் sukku benefits in tamil சுக்கு பயன்கள்.

ஞாபக சக்தி உண்டாக

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

சுக்கு, ஓமம், மஞ்சள், திப்பிலி, சீரகம், கோஷ்டம், அதிமதுரம், இந்துப்பு, வசம்பு இவற்றில் ஒவ்வொன்றும் 10 கிராம் எடையளவு எடுத்து வெய்யிலில் நன்றாக காயவைத்து எடுத்து, உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தினசரி காலை, மாலை கழற்சிக்காயளவு (5 கிராம்) தூள் எடுத்து தேக்கரண்டியளவு பசுவின் நெய்யில் போட்டுக் கலந்து தொடர்ந்து 21-நாள் சாப்பிட்டு வந்தால், நல்ல ஞாபகச்சக்தி ஏற்படும். அறிவு கூர்மையடையும்.

புளியேப்பம் நிற்க சுக்கு பயன்கள்

விக்கல் நிற்க

அஜீரணம் காரணமாகவே புளியேப்பம் உண்டாகும். இதை நிறுத்த 5 கிராம் சுக்கை எடுத்து அம்மியில் வைத்துத் தட்டி, ஒரு சட்டியில் போட்டு ஆழாக்களவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி, இறக்கி வடிகட்டி கொஞ்சம் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி ஒருவேளை மட்டும் சாப்பிட்டாலே போதும். புளியேப்பம் நிற்கும்.

ஓடு வாய்வுக்கு

சுக்கு, நாய்க்கடுகு, இந்துப்பு இவைகளில் வகைக்கு 10 கிராம் எடுத்து, இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கழற்சிக்காயளவு எடுத்து தேனில் குழைத்துத் தொடர்ந்து 40-நாள் சாப்பிட்டால் ஓடு வாய்வு குணமாகும்.

குன்ம நோய் குணமாக

சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 10 கிராம் எடுத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு, காலை, மாலை கழற்சிக்காயளவு எடுத்துத் தேனில் கலந்துக் கொடுத்து வந்தால், குன்மநோய் குணமாகும்.

பித்த எரிச்சலுக்கு

சுக்கு, மிளகு வகைக்கு 21 கிராம் எடுத்து மைபோல அரைத்துத் தேக்கரண்டியளவு எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து காலை, வேளையில் மட்டும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 21- நாள் சாப்பிட்டால் பித்த எரிச்சல் அடியோடு நின்றுவிடும்.

சுக்கு சூரணம்

அறுபது கிராம் எடை நல்ல முற்றின சுக்காக எடுத்து, அதை மூன்று சமபங்குகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு ஒரு பங்கு சுக்கின் மேல் சுத்தமான சுண்ணாம்பை எடுத்து தண்ணீரில் கலக்கிப் பசைபோலச் செய்து அந்த சுண்ணாம்பைச் சுக்கின் மேல் சுமார் அரைக்கால் அங்குலம் அல்லது அதற்கு மேலும் கனமாகப் பற்றுப் போட்டு விடவேண்டும்.

கொஞ்சம் உப்பை எடுத்து அதை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைபோல அரைத்து இரண்டாவது பங்கு சுக்கின் மேல் கனமாகப் பற்றுப் போட்டு விடவேண்டும்.

பிறகு மஞ்சளை அரைத்து மூன்றாவது பங்குச் சுக்கின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். இவைகளை முதலில் ஒரு தட்டில், வைத்து வெய்யிலில் நன்றாகக் காயவிட வேண்டும். காய்ந்தமின் எடுத்து அவைகளை அடுப்பைச் சுற்றி அடுக்கி வைத்துக் காயவிட வேண்டும்.

பிறகு அதன்மேல் உள்ள உப்பு, சுண்ணாம்பு, மஞ்சள் பற்றுகளைக் கத்திக் கொண்டு சீவி எடுத்துவிட்டு உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சல்லடையில் சலித்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

புளியேப்பம், வயிற்று உப்பிசம் ஏற்பட்டால் இந்தத் தாளில் இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து பழுப்புச் சர்க்கரை அதே அளவு சேர்த்துச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்.

வாயு பதார்த்தம் சாப்பிட்ட அன்றும், குழந்தைகளுக்குக் கடின பதார்த்தம் கொடுத்த அன்றும், மாலையில் இதேபோல சாப்பிட்டு விட்டால் வாய்வு அகலும். நல்ல ஜீரணசக்தி உண்டாகும்.

விக்கலுக்கு சுக்கு பயன்கள்

விக்கல் நிற்க

ரண்டரை கிராம் எடை சுக்கையும், 24 கிராம் எடை இலவங்கப்பட்டையும் தூள் செய்து அதில் சுண்டைக்காயளவு எடுத்து, தேன்விட்டுக் குழப்பி, இரண்டு மணிக்கு ஒரு தடவை சாப்பிடால் விக்கல் நிற்கும்.

சுக்கு நீர்

சுக்கு நீர்

ஐந்து கிராம் சுக்கையும், அதேயெடை கொத்துமல்லி, இரண்டரை கிராம் சோம்பு இவைகளைத் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆழாக்களவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்க வைத்து இறக்கி வைத்து, சர்க்கரை, பால் சேர்த்துக் காபி போல் இரவில் படுக்குமுன் தினசரி சாப்பிட்டு வந்தால் உடலில் சேரும் வாய்வு கலைந்துவிடும் வாய்வு தேகம் உள்ளவர்கள் இதைத் தினசரி சாப்பிட்டு வருவது நல்லது.

வாய்வினால் ஏற்படும் வயிற்று போக்கு குணமாக

மலச்சிக்கல் பிரச்சனை

சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 5 கிராம் எடை எடுத்து இடித்துத் துணியில் சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை கழற்சிக்காயளவு தூளுடன் இரண்டு கழற்சிக்காயளவு பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வாய்வினால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு குணமாகும்.

சுக்கு லேகியம்

நூறு கிராம் எடைச் சுக்கை அடுப்பில் போட்டு, சற்று சிவக்கும்வரை பதமாகச் சுட்டு எடுத்து உரலில் போட்டு இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

20 கிராம் எடை ஓமத்தையும், நன்றாகக் காயவைத்த கறிவேப்பிலை இதே எடையும் எடுத்து இடித்து இதையும் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5 கிராம் எடை பெருங்காயத்தை எண்ணெயில் வறுத்து எடுத்து இவைகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொண்டு, அடுப்பில் வாணலியை வைத்து, அதில் அரை ஆழாக்கு நெய்யை விட்டு,

நெய் காய்ந்தவுடன் அதில் 50 கிராம் எடை பனைவெல்லத்தைப் போட்டு பாகுபதம் வரும் சமயம் தயார் செய்து வைத்திருக்கும் சுக்கு மற்றத் தூள்களை அதில் கொட்டிக் கிளறிக் கொண்டேயிருந்து இறக்கி வைத்து ஆறியவுடன் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை இரண்டு கழற்சிக்காயளவு லேகியத்தைச் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்றுபோக்கு, சீதபேதி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், கிராணி, மூலவியாதிகள், பசிமந்தம், புளியேப்பம், வயிற்று உப்பிசம் இவைகள் குணமாகும் sukku benefits in tamil.

சுக்கு உருண்டை

ஏலரிசி, சாதிப்பத்திரி, வால்மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை இவைகள் வகைக்கு 5 கிராம் எடையும், 30 கிராம் எடை சர்க்கரையும், சுத்தமான வெண்ணிறமான கருவ கோந்து 5 கிராம் எடையும் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, மெழுகு பதத்தில் எடுத்து மிளகளவு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்து வெய்யிலில் உலர்த்தி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, தினசரி சாப்பிட்டவுடன் வாயில் இரண்டு உருண்டைகளைப் போட்டு சப்பிக் கொண்டிருக்கலாம்.

வெற்றிலைப் பாக்குப் போடுகிறவர்கள் வெற்றிலைப் பாக்குடன் உபயோகிக்கலாம். இது உடலிலுள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும். நல்ல பசி தீபனத்தை உண்டுபண்ணும், நோய்வராமல் தடுக்கும். நல்ல ஜீரண சக்தியை உண்டுபண்ணும்.

நீரிழிவு குணமாக

சுக்கு, அதிமதுரம், திப்பிலி, கோஷ்டம், வசம்பு, சீரகம், மஞ்சள், இந்துப்பு, மிளகு, கடுக்காய்த் தோல், தன்றிக்காய் தோல், கடுகு, சாலுமிச்சம் பழத்தின் மேல் தோல், நாவல் பழத்தின் கொட்டை, சிறு குறிஞ்சாயிலை இவற்றில் வகைக்கு 10 கிராம் எடை வீதம் எடுத்து,

அம்மியில் வைத்து பசுவின் பால் விட்டு மைபோல அரைத்து வைத்துக் கொண்டு, ஒரு வாணலியை அடுப்பில் சாவத்து ஆழாக்குப் பசுவின் நெய்யை விட்டு, நெய் நாறாக காய்ந்தவுடன் அதில் ஒரு தேங்காயின் பாதி மூடியைத் திருகிய தேங்காய்ப் பூவைப்போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.

தேங்காய்ப் பூ வறுபட்டு சிவந்து வரும் சமயம் 100 கிராம் எடை சுத்தமாசா தேனைவிட்டுக் கலக்கி அரைத்து வைத்திருக்கும் மருந்தை அதில் போட்டுக் கிளற வேண்டும்.

மருந்தும், நெய்யும், தேனும் நன்றாகக் கலந்து, லேகியப் பதமாக நல்ல வாசனை வரும்பொழுது இறக்கி வைத்து ஆறியவுடன் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை, மாலை இரண்டு கழற்சிக்காயளவு லேகியம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் ஆரம்ப நீரிழிவு பூரணமாகக் குவமாகும் sukku benefits in tamil.

சன்னி பாதசரம் குணமாக

சுக்கு. ஆலமரத்துப்பட்டை எருக்கன்வேர், சித்தரத்தை இவற்றில் வகைக்கு 5 கிராம் எடை எடுத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தில் காலையில் இரண்டு அவளை வீதம் வடிகட்டி சர்க்கரைச் சேர்த்து கொடுத்து வந்தால் ஜனனி பாது சுரம் குணமாகும். காய்ச்சல் நிற்கும் வரை மருந்து கொடுத்து வரவேண்டும்.

உள் மூலம் குணமாக

மூல நோய் குணமாக சுக்கு பயன்கள்

சுக்கு, நீர்முள்ளிவேர், வெள்ளைப்பூண்டு, பிரண்டை மிளகு, சதுரக்கள்ளி வேர், கடுக்காய் வகைக்குக் 21 கிராம் எடுத்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து அதை இரண்டு பங்காகச் செய்து ஒரு பங்கைக் காலையிலும், மறுபங்கை மாலையிலுமாக அரை ஆழாக்கு மோரில் கலந்து குடித்து வந்தால் உள் மூலம் குணமாகும்.

சுக பேதிக்கு

சுகபேதிக்கு சாப்பிட விருப்பமுள்ளவர்கள் மருந்துகளையும் சாப்பிடத் தேவையில்லை. கீழ்க்கண்ட கஷாயம் போட்டுச் சாப்பிட்டால் நன்றாக, சுலபமாக பேதியாகும் sukku benefits in tamil.

சுக்கு, நிலவாரை, மிளகு, கடுகுரோகிணி, கடுக்காய் இவைகளை வகைக்கு 10 கிராம் எடை வீதம் எடுத்துத் தட்டி ஒரு சட்டியில் போட்டு ஆழாக்களவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, அரை ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி விடியற் காலையில் குடித்துவிட்டால் நன்றாகப் பேதியாகும். பயப்படத் தேவையில்லை.

புளிரசம் குடித்தால் மேலும் பேதியாகும். அதிகமாக பேதியானால் மோர் குடித்தால் நின்றுவிடும். அதிலும் நிற்கவில்லையானால் அரை எலுமிச்சம் பழச்சாற்றைக் குடித்தால் பேதி உடனே நின்றுவிடும் sukku benefits in tamil சுக்கு பயன்கள் dried ginger in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button