கீரை

சுக்கான் கீரை | sukkan keerai health benefits

சுக்கான் கீரை sukkan keerai health benefits சிறந்ததொரு மூலிகையாக விளங்குகிறது. இந்தக் கீரையில் நீர்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, தாது உப்புகள் ஆகியன அடங்கியுள்ளன. இதன் தண்டு, இலை, விதை ஆகிய அனைத்தும் மருத்துவத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய கீரை வகையாகும்.

சுக்கான் கீரை நன்மைகள் – sukkan keerai health benefits

வாந்தி, மூலநோய், மலச்சிக்கல், பித்தபேதி, இரத்தக் கழிசல், பாம்பு, தேள்கடி, ஆஸ்துமா, ஈரல் நோய், இருதய நோய், வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், மூச்சுத் திணறல், விஷக்கடி, பூச்சிக்கடி போன்ற பலவகையான வியாதிகளை இது குணமாக்க வல்லது.

ஈரலுக்கு வலுவினைத் தரக் கூடியது. மேலும் பசியைத் தூண்டக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. உஷ்ணத்தினால் உண்டாகக்கூடிய வியாதிகளான பித்தம், வாயு, நெஞ்செரிச்சல், இரத்தக் கழிதல், வெம்மையால் உண்டாகும் கழிசல் முதலியவற்றைக் குணமாக்கும்.

கொடி பசலைக்கீரை பயன்கள்

இது மலச்சிக்கலை அகற்றக் கூடியது. வயிறு சம்பந்தமான அனைத்து வியாதிகளையும், வாயு தொடர்பான அனைத்து வியாதிகளையும் விரைவில் இந்தக் கீரை அகற்றிவிடும்.

இது மூலநோயைக் குணமாக்கக் கூடிய சஞ்சீவி மூலிகையெனலாம். சிறுநீரை அதிக அளவில் வெளியேற்றக்கூடிய சக்தி இந்தக் கீரைக்கு உண்டு. இது உடலுக்குக் குளுமையை உண்டாக்கக் கூடியது. ஜீரண சக்தியை அதிக அளவினில் அளிக்க வல்லது ஆகும்.

இதனுடைய சாறானது பல்வலியை நன்கு குணமாக்குகின்றது. இதன் வேர் பல்துலக்க உதவி புரிகின்றது. இதன் பயனாக ஈறுகள் கெட்டி யாகின்றது. பல் சம்பந்தமான நோய்கள் மறைகின்றன.

தேள்கடித்துவிட்டால் இந்தக் கீரையை வாயில் போட்டு மென்று சாறினை விழுங்கினால் விஷம் இறங்கும். இதன் விதையை நீர்விட்டு அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் தேள் விஷமானது மறைந்து விடும்.

இந்தக் கீரையை நாம் உண்டுவர பசியின்மை, சீதபேதி, வயிற்றுக் கடுப்பு முதலிய வியாதிகள் அறவே நீங்கும். இது இருதயத்திற்கு வலுவூட்டக் கூடிய கீரையாகும். இதனைக் கூட்டு, சட்டினி, துவையல் செய்து சாப்பிடலாம். மது அருந்துபவர்கள் போதையினால் அவதிப்பட்டால் அதனைத் தடுக்கக் கூடிய இயல்பும் இக்கீரைக்கு உண்டு.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button