கீரை

சிறுகீரை பயன்கள்

siru keerai benefits in tamil  சிறுகீரை பயன்கள்

சிறு கீரை சிறுகீரையை சயைலுக்கு அடிக்கடி பயன்படுத்துவார்கள். இதில் பாசிப் பருப்பைச் சேர்த்து சமைத்து உணவுடன் உண்பார்கள். நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிடுபவர்கள் சிறு கீரையை உண்ணக் கூடாது. ஏனெனில் எவ்வளவு வீரிய மிக்க மருந்தாக இருந்தாலும் அதன் தன்மையை இக்கீரை முறித்துவிடும்.

Table of Contents

சிறுகீரை பயன்கள் – siru keerai benefits in tamil

சிறு நீரகத்தில் உண்டாகும் நோய்களை குணமாக்குவதில் சிறு கீரை மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறது.

சிறு கீரையை அடிக்கடி பயன்படுத்தி வரும்போது குளிர்ச்சியைத் தருகிறது. கண்களில் உண்டாகும் நோய்களைக் குணமாக்குகிறது. காச நோயை நீக்குகிறது, பித்தம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.

சிறுகீரையைச் சமையல் செய்யும் போது இஞ்சி, பூண்டு, பெருங்காயம் சேர்ப்பதைத் தவிர்க்கவும். அப்போதுதான் அதன் பலனை முழுமையாகப் பெற முடியும்.

சிறுகீரையை புளி சேர்த்துக் கடைந்தும், துகட்டல் செய்தும் சாப்பிடலாம். சிறுகீரையில் வைட்டமின் சத்துக்கள் உண்டு.

காசவியாதி உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் வியாதியின் வேகம் தணியும், பித்தத்தைத் தணிக்கும்.

பித்த சம்பந்தமான வியாதிகளைக் குணப்படுத்தும் கண் சம்பந்தமான எந்தக் கோளாறாவது இருந்தால் சிறு கீரையைத் தினசரி சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையலாம்.

சிறுகீரையை தொடர்ந்து நாற்பத்து எட்டு நாட்கள் உட்கொண்டு வர புத்திக் கூர்மையடையும், ஞாபகச்சக்தி அதிகரிக்கும். தேகம் அழகு பெற்றதாக காந்தியுடையதாக மாறும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button