மூலிகைசெடி மரம்

செம்பருத்தி பூ நன்மைகள்

sembaruthi flower uses in tamil செம்பருத்தி பூ நன்மைகள் அழகிய மலர்களில் செம்பருத்திப் பூவும் ஒன்று. செம்பருத்திப்பூ வைத்திய உலகிற்கு இன்றியமையாத ஒன்றாகும். செம்பருத்தியின் இலை, மொட்டு, பூ, வேர் எல்லாமே மருத்துவப் பயன்மிக்கவையாகும். செம்பருத்தி, பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும். இதன் பூக்கள் கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

செம்பருத்திப் பூக்கள் இரண்டு வகையாக இருப்பதுண்டு. ஒரு வகை அடுக்குச் செம்பருத்தி; மற்றது தனி இதழ்களை உடைய அகலச் செம்பருத்தி, செம்பருத்திச் செடி எட்டு அடி உயரம் வரையில் செழித்து வளரக் கூடியது. இந்த மரத்தில் பூக்கள் வருடம் முழுவதும் பூத்துக் கொண்டே இருக்கும். இதன் பூக்கள் மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

செம்பருத்தி பூ நன்மைகள் – sembaruthi flower uses in tamil

sembaruthi flower uses in tamil செம்பருத்தி பூ நன்மைகள்

செம்பருத்திப் பூவை பச்சையாகவே சாப்பிடலாம். கொழகொழப் பாகவும், சிறிது இனிப்பாகவும் இருக்கும். இதன் தளிர்களினால் செய்த கஷாயம் இரத்த புஷ்டியை அளிக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கர்ப்ப வியாதிகளையும், சிறுநீர் சம்பந்தமான சகல நோய்களையும் இந்தப் பூவின் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் தேங்காய் எண்ணெய்யில் இந்தப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தைலமாகத் தயாரித்து தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்; கண்களும்குளிர்ச்சி பெறும் sembaruthi flower uses in tamil செம்பருத்தி பூ நன்மைகள்.

ஆண்மை பெருக்கத்திற்கு

ஆண்மை பெருக்கத்திற்கும் உடல் வலிமைக்கும் நல்ல பலனை அளிப்பது செம்பருத்திப் பூவாகும். ஆகையினால் இந்தப் பூவைச் சூரணமாக்கி பயன்படுத்திப் பலன் பெறலாம்.

தேவையான அளவு செம்பருத்திப் பூக்களைக் கொண்டு வந்து பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளை மட்டும் ஆய்ந்து தனியாக எடுத்துக் கொண்டு வெய்யிலில் உலர்த்திக் கொள்ளவும்.

மகரந்தக் காம்புகள் நன்றாக உலர வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

உலர்ந்த மகரந்தக் காம்புகளை நன்றாக இடித்துச் சூரண பதத்திற்குத் தூளாக்கிக் கொண்டு அந்தத் தூளை கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்தத் தூளில் வேளைக்கு ஒரு ஸ்பூன் என்ற கணக்கில் காலை, மாலை என தினசரி இரண்டு வேளைகள் பசுவின் பாலில் கலந்து குடிக்கவும்.

இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். உடல் நல்ல புஷ்டியாகவும் இருக்கும்.

பஷ்பவதி ஆகாத பெண்னுக்கு

பஷ்பவதி ஆகாமல் காலம் கடத்தும் பெண்களுக்கு மூன்று செம்பருத்தி பூக்களை நெய்யில் வறுத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் விரைவில் பஷ்பவதியாவாள்.

மேலும் சில பெண்களுக்கு இரத்தப் போக்கு இருந்தால், இதே முறையைக் கையாண்டால் இரத்தப்போக்கு உடனே நின்றுவிடும்.

உடல் உஷ்ணம் குறைய

உடல் உஷ்ணம் அதிகமாகி விட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்பு உண்டாகிவிடும்.

எனவே ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாக சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம். அதனால் உடல் உஷ்ணம் குறைந்து விடும். சாதாரண சுரங்களும் இந்நீரைக் குடித்தால் குணமாகும்.

வெட்டை நோய்

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயைச் ததிப்பு குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒருடம்ளர் பசுவின்பால் சாப்பிட வேண்டும்.

இதுபோன்று 40 நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

இருதயம் பலம் பெற

இருதயம் பலம் பெற

இருதயம் பலஹீனமா ர்களுக்குப் பலம் பெற செம்பருத்திப்பூ பானிக் பலனளிக்கிறது.

செம்பருத்திப்பூ 250 கிராம் கொண்டு வந்து துண்டுதுண்டாக நறுக்கி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறு சேர்த்துக் கலக்கி காலையில் வெய்யிலில் வைக்கவும்.

பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும், அப்போது சிவப்பான சாறு வரும். அந்த சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும் இருதயமும் பலம் பெறும் sembaruthi flower uses in tamil செம்பருத்தி பூ நன்மைகள் .

ஆவாரம் பூ பயன்கள்

க்ஷயரோகத்திற்குச் செம்பருத்தி சர்பத்

க்ஷய ரோகத்தினால் கஷ்டப்படுபவர்கள் செம்பருத்திச் தொடர்ந்து கழுத்து வந்தால் நலம் உண்டாகும்.

செம்பருத்திப்பூ 100 கிராம் கொண்டு வந்து ஒரு பாண்டத்தில் போட்டு அதில் இரண்டரை லிட்டர் தண்ணி விட்டு அடுப்பில் ஏற்றி ஒரு லிட்டர் அளவாக சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

அதில் 1200 கிராம் கற்கண்டு சேர்த்துச் சர்பத்தாக செய்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

க்ஷயரோகத்தினால் அவதிப்படுபவர் இந்த செம்பருத்திச் சர்பத்தைக் குடித்து வரவும். அத்துடன் அதிகாலையில் வெறும் வயிற்றில் ஆறு பூக்கள் வீதம் சாப்பிட்டு வரவும்.

நீர்க்கடுப்பு, கல்லீரல் தொடர்பான பிணிகளுக்கு

கல்லீரல்

நீர்க்கடுப்பு, கல்லீரல் தொடர்பான வியாதிகளுக்குச் செம்பருத்திப் பூவைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்திப் பலன் பெறலாம்.

செம்பருத்திப் பூக்களை 250 கிராம் சேகரித்து இதழ்களை ஆய்ந்து கொள்ள வேண்டும். ஆய்ந்த இதழ்களை 150 கிராம் எடுத்து நன்கு நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.

வாய் அகன்ற கண்ணாடிப் பாத்திரத்தில் 500 கிராம் அளவுக்கு தேனைவிட்டு அதில் உலர்ந்த செம்பருத்திப் பூ இதழ்களைப் போட்டு நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் 50 கிராம் ஏல அரிசியை எடுத்து நன்றாக இடித்துச் சன்னமாக தூளாக்கி அதனையும் சேர்த்து நன்றாக கிளறி பாத்திரத்தை நன்கு மூடிவைத்துவிடவும்.

இந்த பாத்திரத்தை 15 நாட்கள் அப்படியே வெய்யிலில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

15 நாட்கள் கழிந்ததும் இதிலிருந்து ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடவும். மருந்து சாப்பிட்டதும் உடனே ஒரு கிளாஸ் பசுவின் பால் சாப்பிட வேண்டும்.

இது போன்று 40 நாட்கள் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, கல்லீரல் நோய்கள் குணமாகும். க்ஷயரோகம், சுவாச காசம் போன்ற வியாதிகளுக்கும் இதை 40 நாட்கள் சாப்பிட்டால் குணமாகும் sembaruthi flower uses in tamil செம்பருத்தி பூ நன்மைகள்.

பேன் தொல்லை ஒழிய செம்பருத்தி பூ நன்மைகள்

பேன் தொல்லை ஒழிய

சில பெண்களுக்குப் பேன் பெருந்தொல்லை தரும். இவர்கள் செம்பருத்திப்பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டி கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று, நான்கு நாட்கள் செய்தால் தலையில் உள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு

குழந்தைக்கு டானிக்

சில குழந்தைகள் பிறக்கும் போதே பலஹீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையை செம்பருத்திப்பூ போக்கும்.

ஐந்து செம்பருத்திப் பூவை ஒரு மட்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் நீர் விட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பனைவெல்லம் சேர்த்து கொடுத்துவர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால் சில நாட்களிலேயே குழந்தையின் வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும் sembaruthi flower uses in tamil செம்பருத்தி பூ நன்மைகள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button