செடி மரம்மூலிகை

sembai plant benefits in tamil | செம்பை செடி பயன்கள்

செம்பை செடி பயன்கள் sembai plant benefits in tamil செம்பை என்பது மர வகுப்பைச் சேர்ந்தது. ஆனால் உயரமாக வளர்வது இல்லை. செடியாக வளராமல் இருப்பது இல்லை. இது பல வகை உண்டு. மஞ்சள் பூ பூக்கக் கூடியது ஒரு வகை. கருப்பு இதழின் இடையே சிவப்பு நிறத்துடன் இருக்கும் பூக்களை உடையது ஒரு வகை. அந்த வகையில் கரும்செம்பையே அதிக சக்தி வாய்ந்தது.

  • மேகரோகம் குணமாகும்.
  • சிறுநீரைப் பிரிக்கும்.
  • உடலில் உஷ்ணம் உண்டாக்கும்.
  • நுண்ணிய கிருமிகளை அழித்து விடும்.
  • வீக்கங்களைக் கரைத்துவிடும்.
  • புண்களை ஆற்றும்.

அடிபட்ட காயம்

பெண்களுக்கு ஏற்படும் உதிரப்பெருக்கை சரிபடுத்தும், புண்களை ஆற்றும். அடிபட்ட காயம், வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தால் இரத்தத்தைத் துடைத்துவிட்டு கருஞ்செம்பை இலையை நரம்பிலிருந்து உருவி அம்மியில் வைத்து மைபோல அரைத்து காயத்தின் மேல் வைத்து அழுத்திக் கட்டிவிட வேண்டும்.

தென்னை மரம் பயன்கள்

புண்ணின் மேல் பச்சிலை ஒட்டிக் கொள்ளும். காயம் ஆறும்வரை அந்த இலையை எடுக்கக் கூடாது. புண் ஆறியபின் தானே அந்த பச்சிலை விழுந்துவிடும். அதுவரை ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button