செடி மரம்மூலிகை

seenthil kodi benefits in tamil | சீந்தல் கொடி பயன்கள்

seenthil kodi benefits in tamil சீந்தில் கொடி பயன்கள் சீந்தில் கொடியின் வேர், தண்டு, இலை எல்லாமே வைத்திய முறைக்குப் பயன்படுகிறது. இது நல்ல கண சக்தியைத் தரும். தாது காய்ச்சலுக்கும் சஞ்சீவி போன்றது. புஷ்டியை உண்டு பண்ணும். இதன் இலை பண்ணை ஆற்றும். சகல மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்து ஆறு அவன்ஸ் தண்ணீரை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் விட்டு, அதில் அரை ரூபா எடை அதிமதுரத் தூளை போட வேண்டும்.

பிறகு சோம்பை லேசாக வறுத்து அரை ரூபா எடை அளவுக்கு அதில் போட வேண்டும். அரை அவன் கறிவேப்பிலை சாறு எடுத்து அத்துடன் கலக்க வேண்டும். பிறகு சீந்தில் இலையில் சாறு பிழிந்து அரை அவுன்ஸ் அளவு எடுத்து இந்த தண்ணீரில் கலக்கி மூடி வைத்துவிட வேண்டும்.

சீந்தில் கொடி பயன்கள் – seenthil kodi benefits in tamil

சீந்தில் கொடி பயன்கள் - seenthil kodi benefits in tamil

மலேரியாக காய்ச்சல்

இதை அதிகாலை செய்து வைத்து விட்டு ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி மூன்று பாகமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் பாகத்தைக் காலையிலும், இரண்டாம் பாகத்தை நண்பகலிலும், மூன்றாம் பாகத்தை மாலையிலும் என மூன்று வேளை என மூன்று நாட்கள் கொடுத்துவந்தால் மலேரியாக காய்ச்சல் குணமாகிவிடும்.

குளிர் காய்ச்சலுக்கு

காய்ச்சல் குணமாக

குளிர்க்காய்ச்சலுக்கு சீந்தில் கொடி சுக்கு, பற்பாடகம், நிலவேம்பு, மிளகு, ஏலக்காய் இவற்றை வகைக்கு ஒன்றரை ரூபாய் அளவுக்கு எடுத்து அம்மியில் ஒன்றிரண்டாக அரைத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு அளவு தண்ணீர் விட்டு அரை ஆழாக்காக சுண்டக் காய்ச்சி அதை வடிகட்டி மூன்று பங்காகப் பிரித்து காலை, நண்பகல், மாலை என மூன்று வேளை மூன்று நாட்கள் கொடுத்தால் குளிர்க்காய்ச்சல் பூரண குமைாகும். தேவையானால் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

கொய்யா பழம் பயன்கள்

புண்ணை ஆற்ற

நீண்ட நாள் புண்ணை ஆற்ற ஒரு சட்டியை அடுப்பில் வைத்துப் புண்ணுக்குத் தகுந்த அளவு சீந்தில் இலையைப் போட்டு சிறிதளவு வேப்பெண்ணெய் அதில் விட்டு, இலையை நன்றாக வதக்கி எடுத்து அந்த இலையைப் புண்ணில் வைத்து கட்டிவிட வேண்டும்.

தினசரி காலையில் கட்டை அவிழ்த்து இலையை எடுத்துவிட்டுப் புண்ணை சுத்தம் செய்து மறுபடி புதிய இலையை முன்போல் வதக்கிக் கட்டவும். வெகுநாட்கள் ஆன புண் மூன்றே நாளில் ஆற ஆரம்பிக்கும். புண்பூரணமாக ஆறும்வரை இதேபோல் கட்டு போடவேண்டும்.

சீந்தில் லேகியம்

சீந்தில் மூலரோக நிவாரண லேகியம் எட்டுவிதமான மூலரோகத்தை குணப்படுத்தும் அறிய சக்தி வாய்ந்தது.

இந்த சீந்தில் மூலரோக நிவாரண லேகியம் தயாரிப்பது சற்று சிரமமான காரியம்தான் என்றாலும் ஆவல் உள்ளவர்க்கு இது ஒரு கஷ்டமாகத் தோன்றாது.

முதலில் குறைந்த அளவில் செய்து பார்த்துக் கொண்டு அதன் பின் கொஞ்சம் அதிக அளவில் தயாரித்துக் கொள்வதுதான் முறையாகும்.

மூலரோக நிவாரணத்திற்கு குறிப்பிட்ட அத்தனை வகையான சரக்கு களையும் தூள் பண்ணி உபயோகப்படுத்த வேண்டி இருப்பதால் அவற்றைக் குறிப்பிட்ட எடையைவிட இருமடங்கு எடுத்து அவைகளை நறுக்கி துண்டுகள் ஆக்கி வெய்யிலில் நன்றாகக் காயவைக்க வேண்டும்.

இவற்றில் சுக்கு, மிளகு, சித்திர மூலம் இவைகளை மட்டும் கடைசியாக காய வைத்துக் கொள்ளலாம். இதில் குறிப்பிடப்பட்டப் பொருட்களை அன்றாடம் காய வைத்து சுத்தமான ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்க வேண்டும்.

சுக்காக காய்ந்த பின்னரே தூள் செய்ய வேண்டும். மருந்து தயாரிக்கக் கூறப்பட்ட அளவு இவ்வாறாக காயவைத்து தூள் செய்யப்பட்டபின்னரே எடுக்க வேண்டும்.

காட்டுக் கருணைக் கிழங்குத்தூள் 3 ரூபா எடை, கருணைக் கிழங்கு தூள் 2 ரூபா எடை, சீந்தில் கொடி இலை, வேர் ஆக தூள் ஒன்றரைரூபா எடை மிளகுத்தூள் முக்கால் ரூபா எடை, சுக்குத்தூள் 2 ரூபா எடை, சித்திர மூலம் இரண்டரைரூபா எடை.

ஒரு பாத்திரத்தில் 12 ரூபா எடை நாட்டுச் சர்க்கரையைக் கரைத்து அதைத் துணியில் வடிகட்டி, அடுப்பில் வைத்து பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பின் கலந்து வைத்துள்ள பொடியை இந்த பாகில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறி தூள் கட்டி முட்டி ஆகிவிடாமல் லேகியமாக வரும் வகையில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இவை ஒன்று சேர்ந்து நல்ல வாசனை வரும்போது 8 பலம் பசு நெய்யை இதில் விட்டு மேலும் கிளறிக் கொண்டே இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்க வேண்டும்.

மருந்து லேகியமாக மாறிவிடும். இதை ஆறவிட்டு வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்றாக மூடி இதன் மேல் மூலரோக லேகியம் என்று எழுதி ஒட்டவும்.

இந்த லேகியத்தை காலை மாலை என இருவேளை அரைக் கொட்டைப்பாக்கு அளவு நாற்பது நாட்கள் சாப்பிட்டுவந்தால் எட்டுவிதமான மூலமும் குணமாகும்.

லேகியத்தைத் தேவைக்கு ஏற்ப தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த லேகியம் மாதக்கணக்கானாலும் கெட்டுப் போகாது. எனவே தேவையான அளவு அதிகமாகவும் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த லேகியத்தைச் சாப்பிடும் போது அதிக மிளகாய்க் காரம், புளி, கடுகு, பூசணிக்காய், பாகற்காய் சாப்பிடக் கூடாது. தாளிதம் செய்ய நெய் பயன்படுத்த வேண்டும். வெங்காயம் சேர்க்கலாம். காரத்திற்கு மிளகு சேர்க்கலாம். புளிப்பிற்கு எலுமிச்சம் பழ சாறு சேர்க்கலாம். தொடர்ந்து 40 காணலாம் seenthil kodi benefits in tamil சீந்தில் கொடி பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button