கீரை

sakkaravarthi keerai benefits in tamil சக்கரவர்த்தி கீரை

sakkaravarthi keerai benefits in tamil சக்கரவர்த்தி கீரை அதிக சக்தியை அளிக்க வல்லதாகும். இதில் நீர், புரதச் சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புகள், நார் சத்து, மாவுசத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச் சத்து முதலியனவும் உள்ளன.

இந்தக் கீரையினால் உடலுக்குக் குளிர்ச்சி உண்டாகும். அத்தோடு இரத்தம், தாது ஆகியனவும் பெருகி உடலுக்குத் தேவையான சக்தியும், அழகும் வலிமையும் உண்டாகும்.

இதில் வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கின்றன. அத்தோடு பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் இது அதிக அளவில் வளர்க்கப்படுகின்றது. கருஞ் சிவப்பு நிறமாக இதனுடைய நடுப்பாகம் இருக்கும். இலையின் பின்புறம் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். இந்தக் கீரையில் தங்கச் சத்தும், இரும்புச் சத்தும் ஒருங்கே இணைந்துள்ளது. இந்தக் கீரை நம் மருத்துவத்தில் கைகண்ட மூலிகையாகப் பயன்படுகிறது.

சக்கரவர்த்தி கீரை – sakkaravarthi keerai benefits in tamil

sakkaravarthi keerai benefits in tamil சக்கரவர்த்தி கீரை

பொருமல், வயிற்றுப் போக்கு, சிறுநீர் தொந்தரவு முதலியன நீங்கவும், தாது விருத்தியை உண்டாக்கவும், பசியைத் தூண்டவும் இது மிகவும் பேருதவி புரிகிறது.

இந்தக் கீரையை நெய்விட்டு வதக்கி, பருப்போடு கலந்து சாப்பிடலாம். பருப்போடு இதனைச் சேர்த்து தேங்காயினை நன்றாகத் துருவி கலந்து பொரியல் செய்தும், குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு நன்மைகள்

இதன் விதைகளில் இருந்து எடுக்கக் கூடிய எண்ணெய் குடலில் தோன்றக் கூடிய கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி இவைகளை அழித்துவிடும். சிறுநீர் கழிக்க இயலாமல் வயிறு உப்பி சிரமப் படுகின்றவர்கள் இந்தக் கீரையை வாரந்தோறும் சாப்பிட்டுவந்தால் இந்நோய்கள் நீங்கும்.

இந்தக் கீரையை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் உடலுறவில் ஆர்வமும், விருப்பமும் பெருகும், உடலுக்கு வலிமை உண்டாகும்.

இந்தக் கீரை வகைகளில் உயிர்ச்சத்து, மிகவும் அடங்கியுள்ளது. இது மலத்தினை இளக்க வல்லது. இது ஜீரணத்திற்கு மிகவும் உதவக்கூடியது.

இந்தக் கீரையைப் பயன்படுத்தும் போது பச்சை மிளகாய், புளி, உப்பு முதலியவற்றை அதிக அளவில் சேர்க்கக் கூடாது. புளியையும், பச்சை மிளகாயையும் அறவே சேர்க்கக் கூடாது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button