கீரை

புளியாரை கீரை பயன்கள்

புளியாரை கீரை பயன்கள் puliyarai keerai benefits creeping woodsorrel புளியாரை கீரை சக்திமிகுந்த கீரையாகும். இது மழைக்காலம், பனிக்காலம் போன்ற நாட்களில் தன்னிச்சையாக வாய்க்கால் வரப்புகளில் வளரக் கூடியதாகும். புளியாரைக் கீரைக்கு புளிப்பு ருசி உள்ளமையால், சமையலின் போது புளியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

புளியாரைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சியை உண்டு பண்ணும். நல்ல பசியைத் தூண்டும். உடலுக்கு உரத்தையளித்து நோய்த்தடுப்புச் சக்தியாவும் விளங்கும்.

இந்தக் கீரையுடன் புளியைக் குறைத்துப் பருப்புடன் நெய் சேர்த்து, உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் மூலவாய்வு, உள் மூலம், இரத்த மூலம் ஆகிய நோய்கள் நீங்கும் புளியாரை கீரை பயன்கள் puliyarai keerai benefits creeping woodsorrel.

புளியாரை கீரை பயன்கள் – Puliyarai keerai benefits

வயிற்றில் இரணம்

வயிற்றில் இரணம் இருந்து கஷ்டப்பட்டால் புளியாரைக் கீரையை அரைத்துப் பசுவின் மோரில் கலந்து காலை வேளை மட்டும் குடிக்கவும். இது போன்று 48 நாட்கள் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள இரணம் ஆறிவிடும்.

குன்ம நோய்களுக்கு

புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், சுக்கு சேர்த்து துவையல் அரைத்துக்கொள்ளவும்.

முதல் சோற்றில் இந்தத் துவையலைச் சேர்த்து நெய்விட்டு நான்கு பிடி பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிடவும். இது போன்று 48 நாட்கள் சாப்பிட்டால் நாட்பட்ட குன்ம நோய்கள் குணமாகும்.

முகப்பரு – கொப்புளங்களுக்கு

முகப்பரு குணமாக

முகப்பரு. கொப்புளங்கள், தீப்பட்டப் புண்கள் ஆகியவைகளுக்கு அருமருந்து. புளியாரைக் கீரையில் பன்னீர்விட்டு நன்கு மைபோல் அரைத்து மேற்கண்ட குறைபாடுகளின் மீது பூசிவந்தால் இக்குறைகள் நீங்கி நலமாகும்.

இரத்தக்கட்டி கரைய

புளியாரைக் கீரையை அரைத்து அதில் சிறிது மஞ்சள் சேர்த்து இரத்தக் கட்டிகளின் மீது கட்டி வந்தால் இரத்தக்கட்டு கரைந்து சரியாகிவிடும்.

ஊமத்தங்காய் விஷம் முறிய

ஒரு சிலர் மனக்கஷ்டத்தினால் ஊமத்தங் காயை அரைத்துத் தின்று விடுவார்கள். அது விஷமாகி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இதுபோன்ற சமயத்தில் உடனடியாக புளியாரைக் கீரையை இடித்துப் பிழிந்து 50 மில்லி சாறு எடுத்துக் குடிக்க வைக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் விஷம் முறிந்துவிடும்.

கண்நோய்க்கு

மஞ்சள் காமாலைக்கு

புளியாரை இலையைக் குடிநீர் செய்து கண்களைக் கழுவி வந்தால் கண்நோய் குணமாகும்.

நீங்காத தலைவலிக்கு

தலைவலி குணமாக

ஒரு சிலர் தீராத தலைவலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். புளியாரைக் கீரையை இடித்துப் பிழிந்து 50 மில்லி சாறு எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளை வெங்காயத்தை இடித்துப் பிழிந்து 50 மில்லி சாறு எடுத்துக் கொள்ளவும்.

இரண்டு சாறையும் ஒன்றாகக் கலந்து மெல்லிய துணியில் நனைத்து தீராத வலியால் துன்பப்படுபவர் நெற்றிப் பொட்டில் போட்டு வந்தால் குணமாகும் புளியாரை கீரை பயன்கள் puliyarai keerai benefits creeping woodsorrel.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button