கீரை

புளிச்ச கீரை பயன்கள்

pulicha keerai benefits in tamil புளிச்ச கீரை பயன்கள்

pulicha keerai benefits in tamil புளிச்ச கீரை பயன்கள் இதைக் காசினிக் கீரை என்றும் அழைப்பது உண்டு. புளிச்சக்கீரையை ஆய்ந்து எடுத்து மிளகாய் தேவையான அளவு போட்டு வேகவைத்து எடுத்து உப்பு சேர்த்து கடைந்து துவையல் போல செய்து விடுவார்கள், கடுகு, உளுத்தம் பருப்பை எண்ணெயில் போட்டு சிவக்க விட்டு இந்தக் கடைந்த கீரையைத் தாளித்து விடுவதும் உண்டு.

புளிச்ச கீரை இந்தக் கீரை உடல் வலிமையைப் பெருக்குவதில் முதன்மையானது. உடல் நலம் இல்லாது தேறியவர்கள், பலவீனமாக இருப்பார்கள்.

அவர்கள் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலமாகும். இந்தக் கீரையில் உயிர்ச் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் தாதுச் சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ளது pulicha keerai benefits in tamil.

புளிச்ச கீரை பயன்கள் (pulicha keerai benefits in tamil )

தோல் நோய் குணமாக

தவிர இந்தக் கீரையைச் சொரி, சிரங்கு போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் சட்னி செய்து உணவுடன் இதனைச் சேர்த்து சாப்பிட்டால் கோங்குரா சட்னி என்று சிறப்புப் பெயருடன் அனைத்து மக்களும் விரும்பி விரைவில் குணமாகும்.

உடலில் ஏதாவது இரணம் இருந்தாலும் சொறி, சிரங்கு இருந்தாலும் அதற்கு மருந்து போட்டுவரும் சமயம் தினசரி புளிச்சக் கீரையைச் சமைத்துச் சாதத்துடன் சேர்த்துக் கொடுத்து வந்தால் இரணம், சிரங்கு இவைகள் சீக்கிரமே ஆறிவிடும்.

காசநோய் குணமாக

இதனை ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடுவதினால் இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளது. சாப்பிடுவார்கள். காச நோயினைக் குணமாக்கும். இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

உடல் உஷ்ணத்தை குறைக்க

புளி, காரம் சேர்க்காமல் வதக்கி சட்னி செய்து சாப்பிட்டால் தாதுவிருத்தி செய்யும், உடல் உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்க உதவும்.

மலச்சிக்கல் குணமாக

மலச்சிக்கலினால் கஷ்டப்படுகிறவர்கள் இந்தப் புளிச்சக் கீரையை இரண்டு, மூன்று தினங்களுக்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலே ஏற்படாது. மலம் தினசரி சரளமாகக் கழியும்.

வேறு எந்தப் பதார்த்தமும் இல்லாமல் வெறும் கடைந்த கீரையானது குளிர்ச்சியை உண்டு பண்ணக் கூடியது. தாதுப் பொருட்களான இரும்புச்சத்தும், சுண்ணாம்புச் சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

இக்கீரையை உட்கொண்டு வர இரத்தம் தூய்மைப் பெறும். மலச்சிக்கல் துன்பம் ஏற்படாது. மந்தம் நீங்கும். விந்து வானது கெட்டிப்படும்.

வாதநோய் குணமாக

வாத நோயுள்ளவர்களுக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு ஒருமுறை புளிச்சக் கீரையைச் சமைத்துக் கொடுத்து வந்தால் வாதநோய் தணிந்து விடும்.

உடல் உஷ்ணம்

சிலரது தேகம் அடிக்கடி சில்லிட்டு விடுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ணம் இயற்கையான அளவில் இருந்துவரும்.

வடநாட்டில், குறிப்பாக ஆந்திரப்பிரதேசத்தில் இந்தப் புளிச்சக் கீரையை ஏராளமாக பயிர் செய்கின்றனர்.

கோங்கூரா

புளிச்ச கீரை பயன்கள்

ஆந்திராவில் புளிச்சக்கீரைக்கு நல்ல மதிப்பு இருந்து வருகிறது. அவர்கள் இந்த புளிச்ச கீரையிலுள்ள சத்து எப்படிப்பட்டது என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

ஆந்திராவில் உடலை உழைத்துக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் அநேகமாக நல்ல பலசாலிகளாகவே இருக்கின்றனர். இங்கு மூன்று பேர் சேர்த்து தூக்கும் ஒரு பளுவான பொருளை அங்கு ஒருவரே தூக்கி விடுகிறார்.

இதை அங்கு சென்றவர்கள் நேரில் பார்த்திருக்கலாம். காரணம் அவர்கள் சாப்பிடும் சாதம், கஞ்சி வடிக்காத பச்சரிசிச் சாதம். இதில் நிறைய சத்துக்கள் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தப் புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள் நிறைய இருக்கின்றது. இந்த இரண்டு விதமான சத்துக்களும் தான் அவர்களைப் பலசாலியாக்குகின்றன.

புளிச்ச கீரை ஆந்திரக்காரர்கள் ‘கோங்கூரா‘ என்று கூறுகின்றனர்.

ஆனால், இவ்வளவு சக்தி வாய்ந்த புளிச்சக் கீரையை நாம் கேவலமாக மதித்து அதைச் சாப்பிடப் பிரியப் படுவதில்லை. இதை வாசிக்கும் வாசகர்கள் இனியாவது புளிச்சக் கீரையைச் சாப்பிட்டு உடல் பலம் பெற விரும்புவார்கள் என நம்புகிறேன்.

புளிச்ச கீரை தீமைகள்

புளிச்ச கீரை தீமைகள்

இந்தக் கீரையைப் பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இது பித்தத்தை உண்டு பண்ணும் ஆற்றல் உடையது. pulicha keerai benefits in tamil புளிச்ச கீரை பயன்கள்

முளைக்கீரை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button