செடி மரம்மூலிகை

பூவரசு மரம் பயன்கள்

பூவரசு மரம் பயன்கள் poovarasu tree in tamil பூவரசு பூவரசு என்னும் இம்மூலிகையின் பெயரே எல்லாவற்றிற்கும் மன்னன் என்று உணர்த்துகின்றது. இது உண்மையில் தாவரங்களின் மன்னன்தான். இதற்கு புவிராசன் என்னும் பெயரும் உண்டு. நம் தமிழ் நாட்டில் இது பரவலாக வளர்கிறது. பூவரசின் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் எல்லாமே மருத்துவத்திற்குப் பயன்பாடுகிறது.

பூவரசில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று கொட்டைப் பூவரசு மற்றொன்று சாதாரணபூவரசு என்பதாகும். மருத்துவத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்துவது கொட்டைப் பூவரசு ஆகும். பூவரசு குடலிலுள்ள புழுக்களைக் கொன்று குடலை நலமாக வைப்பதில் முதன்மை பெற்றதாகும்.

பூவரசு மரம் பயன்கள் – Poovarasu tree in tamil

பூவரசு மரம் பயன்கள் poovarasu tree in tamil

வெள்ளைப்படுதலை அகற்ற

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தேவையான அளவு தினசரி உள்ளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் உடனடியாக வெள்ளைப்படுதல் குணமாகும்.

சரும நோய்களுக்கு

முகம் பொலிவு பெற

பூவரசன் வேரைக் கொண்டுவந்து நன்றாகக் கழுவி அம்மியில் வைத்து அரைத்து எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித சரும நோயாக இருந்தாலும் காலை இரவு இருவேளை தினசரி தேய்த்துவந்தால் விரைவில் சரும நோய் அகன்றுவிடும்.

வீக்கங்களுக்கு

உடலில் எங்காவது வீக்கமாக இருந்தால் பூவரசு இலையைக் கொண்டு வந்து அம்மியில் வைத்து மெழுகாக அரைத்து சூடு செய்து வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வந்தால் வீக்கம் குறைந்துவிடும்.

எந்தப் பூச்சிக் கழத்தாலும்

நமது உடலில் எந்தப் பூச்சிக் கடித்தது என்று தெரியாமல் தொந்தரவுக் கொடுத்தால் அதனைச் சரிப்படுத்திக் கொள்ளக் கீழ்க்காணும் முறையைக் கையாளலாம்.

பூவரசு மரப்பட்டை 250 கிராம் சேகரித்துக் கொண்டு கல்வத்திலிட்டு நன்றாக இடித்து ஒரு சட்டியில் போட்டு 1500 மில்லி நீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

மூன்றில் ஒரு பங்காகச் சுண்டியதும் வடிகட்டி பாட்டிலில் பத்திரப் படுத்திக்கொள்ளவும்.

இதனை தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் எந்த விஷ ஜந்துகடித்திருந்தாலும் சரியாகிவிடும்.

உதட்டில் வெள்ளைப் புள்ளிகளுக்கு

வெண்குஷ்ட நோயால் உதட்டில் வெண்புள்ளி ஏற்பட்டிருந்தால் அதனைப் போக்கிக் கொள்ள ஒரு வழிமுறை உள்ளது.

பூவரசின் முதிர்ந்த பட்டையைக் கொண்டுவந்து நன்றாக இடித்துச் சாறுபிழிந்து கொள்ளவும். பிழிந்த சாறை வாயிலிட்டு நன்றாக கொப்பளிக்கவும், இதுபோன்று தினசரி தொடர்ந்து செய்து வந்தால் உதட்டிலுள்ள வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.

சாறை வாயிலிட்டுக் கொப்பளிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதன் சாறை விழுங்கிவிட்டால் வயிற்றுப் போக்கு உண்டாகும்.

சித்தரத்தை மருத்துவ பயன்கள்

தொழுநோய்க்கு

நாட்பட்ட தொழு நோயாக இருந்தாலும் கீழ்க்காணும் முறையைக் கையாண்டால் மட்டும் நலனைக் கொடுக்கும் பூவரசு மரம் பயன்கள் poovarasu tree in tamil.

பூவரசு பட்டையைக் கொண்டுவந்து பாலில் அவித்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் சம அளவுக்கு பறங்கிப் பட்டையைச் சேர்த்து நன்கு இடித்து சலித்து கரணமாக பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்த சூரணத்தில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துத் தேவையான அளவு பசு வெண்ணெய்யில் குழைத்து காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிடவம்.

இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரம்பக் கட்டத் தொழு நோயாக இருந்தாலும் சரி, நாட்பட்ட தொழுநோயாக இருந்தாலும் சரி மட்டும் பட்டு நன்மை அளிக்கும்.

இது போன்று தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் உண்ணும் உணவில் கண்டிப்பாக உப்பை நீக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

படர்தாமரை-செதில் படைக்கு

சரும நோய்களான படர்தாமர, செதில் படை இருந்தால் உடனடி நிவாரணம் அளிக்கிறது பூவரசம் காய்.

பூவரசம் காய் உடைத்தால் மஞ்சள் நிறமான திரவம் கசியும். இதனை எடுத்துப்படர்தாமரை, செதில்படை ஆகியவற்றின் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

இத்திரவத்தை அடிபட்டக் காயங்கள், விஷக்கடிகள் இருந்தாலும் தடவிகுணம் பெறலாம் பூவரசு மரம் பயன்கள் poovarasu tree in tamil.

குழந்தைகளுக்குக் கரப்பான் இருந்தால்

குழந்தைக்கு டானிக்

குழந்தைகளுக்குக் கரப்பான் இருந்தாலோ, சொரிசிரங்க இருந்தாலோ அரிப்பு ஏற்பட்டு சிரமத்தை உண்டாக்கும். அதனை அகற்றி பூவரசு இலையைப் பயன்படுத்தலாம். பூவரசு இலைகளைக் கொண்டுவந்து தீயில்ளித்துச் சாம்பலாக்கிக் கொள்ளவும்.

இந்த சாம்பலைச் சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் குழப்பி கரப்பான் உள்ள இடத்தில் தடவினால் அரிப்பு நின்று குணமாகும். இதுபோன்று சொரிசிரங்கு, மேகப் புண்களுக்கும் தடவி வந்தால் குணமாகும்.

காமாலை நோய்க்கு

காமாலை நோய் வந்தால் சிலர் மிகவும் பயந்துவிடுவார்கள், காரணம், சில சமயம் உயிரிழப்புக் கூட நடந்துவிடும். ஆதலின் உடனடியாகக் காமாலை நோய்க்கு வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

பூவரசு இலைக் கொழுந்தைக் கொண்டு வந்து அதனுடன் சந்து பிளகு சேர்த்து மெழுகாக அரைத்தெடுத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்துப் பாம்மோரில் கலந்து நாள் ஒன்றுக்கு காலை, பகல், மாலை என மூன்று வேளைகள் சாப்பிடவும்.

இதுபோன்று ஏழு நாட்கள் அல்லது பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். மருந்து சாப்பிடும் நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு இளநீர் குடிப்பது மிகவும் நல்லது. உணவில் அறவே உப்பு சேர்க்கக் கூடாது பூவரசு மரம் பயன்கள் poovarasu tree in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button