வீட்டு மருத்துவம்

பூசணிக்காய் பயன்கள்

பூசணிக்காய் பயன்கள் Poosanikai benefits in tamil பூசணிக்காய் வெள்ளைப் பூசணிக்காயை சாம்பார், கூட்டு, பொரியல் மற்றும் அல்வா செய்யப் பயன்படுத்துவார்கள். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். வைட்டமின் “C” சத்துகளும், மினரல் சத்துகளும் அடங்கியுள்ன.

பூசணிக்காய் பயன்கள் – Poosanikai benefits in tamil

பூசணிக்காய் நீர்க் கடுப்பைப் போக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பித்தத்தைக் கட்டுப்படுத்தும், உடலுக்கு வலுவூட்டும்.

பூசணிக்காயை சமையலுக்கு சற்று முற்றிய பின்னர்தான் பயன்படுத்த வேண்டும். பிஞ்சாக இருக்கும் போது பயன்படுத்தினால் சளி பிடிக்கும்.

இதனை நறுக்கிய அன்றே பயன்படுத்த வேண்டும். நாள் பயன் படுத்தினால் நன்றாக இருக்காது. அதனால் பயனும் கிடைக்காது.

இந்த வெள்ளைப் பூசணியிலிருந்து மருத்துவர்கள் லேகியம் தயாரிக்கிறார்கள். வெள்ளை பூசணி லேகியம் என்றும், கூஷ்மாண்ட லேகியம் என்றும் இதற்குப் பெயர்.

இந்த லேகியம் இருமல், காச ரோகம், துப்பினால் இரத்தம் வருதல், உடல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு நிவாரணமளிக்கிறது.

புடலங்காய் பயன்கள்

பூசணிக்காய் தீமைகள்

மஞ்சள் பூசணிக்காயில் மாவு சத்து மிகுதியாக உள்ளது. மற்ற சத்துகள் மிகக் குறைவு, தவிர மருத்துப் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல, ஆகையினால் இது பற்றிக்குறிப்பிடப்படவில்லை.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button