செடி மரம்வீட்டு மருத்துவம்

பொன்னாவரை மருத்துவ பயன்கள்

ponnavarai benefits in tamil பொன்னாவரை பயன்கள் ஆவாரை இனத்தைச் சார்ந்ததாகும். இந்த இரண்டு விர செடிகளுக்கும் பூக்கள் பார்ப்பதற்கு ஒரே விதமாகத்தான் தெரியும். இதனைக் கிராமத்திலுள்ளவர்கள் நன்கு அறிவார்கள். இலையில் வித்தியாசம் உண்டு. தவிர பொன்னாவரைக் காய் கொத்தவரங்காய் போல இருக்கும் குத்துச் செடியாக வளரும்.

இதற்கு நாட்டுத் தகரை, பேயாவரை, பொன்னவிரம் என்ற பெயர்களும் உண்டு. இதன் இலைகள், விதை, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் உள்ளவை.

மஞ்சள் காமாலை குணமாக

மஞ்சள் காமாலைக்கு

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்க்காணும் முறையினால் பயன் பெறலாம்.

பொன்னாவரை இலையுடன், கீழா நெல்லியும், மிளகு 6ம், சேர்த்து மெழுகாக அரைத்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை இருவேளையும் பாலில் கலந்து குடித்து வரவும்.

இதனால் மஞ்சள்காமாலை நோய் குணமாகும். உணவு பத்தியம் இருக்க வேண்டும். புளி, உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ந

நரம்பு பலஹீனமானவர்களுக்கு

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

நரம்பு பலஹீனமாகிவிட்டால் ஹிஸ்டீரியா எனும் நோய்க்கு ஆளாக வேண்டியதிருக்கும். ஆகையினால் நரம்பு பலஹீனத்தைப் போக்க ஒரு மருத்துவ வழி.

பொன்னாவரை இலை, வேர், பூ ஆகிய மூன்றையும் வகைக்கு 35 கிராம் சேகரித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு ஒரு லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி அரை லிட்டராகக் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி மூன்று வேளை குடித்து வந்தால் நரம்பு பலஹீனம் அகன்று ஹிஸ்டீரியா நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் ponnavarai benefits in tamil பொன்னாவரை பயன்கள்.

குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டால்

குழந்தைக்கு டானிக்

குழந்தைகளுக்கு 103 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தால் சில சமயம் வலிப்பு கூட ஏற்படுவதுண்டு. அதுபோன்று குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்காணும் முறையைக் கையாளுங்கள்.

பொன்னாவரை விதையைக் கொண்டு வந்து 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து பாலில் கலந்து குழந்தைக்குக் கொடுக்கவும். ஒரு மணிக்கு ஒருமுறை இரண்டு தடவை கொடுத்தால் குழந்தைக்கு வலிப்பு நோய் அகன்றுவிடும்.

குழந்தைக்கு வலிப்பு நின்றதும் மீண்டும் குழந்தைக்கு வலிப்பு வராமல் இருக்க முன்னெச்சரிக்கையாக குழந்தையின் தாய் பொன்னாவரை விதையை அரைத்து அருந்திவிட்டு சில மணி நேரம் கழித்துக் குழந்தைக்குத் தாய்ப்பால் தரலாம்.

இதுபோன்று இரண்டு நாட்கள் மட்டும் செய்தால் போதும் குழந்தைக்கு வலிப்பு நோய் வராது ponnavarai benefits in tamil பொன்னாவரை பயன்கள்.

உடல் பெருத்திருந்தால்

சிலருக்கு உப்பு நீர் உடம்பில் சேர்ந்து பெருத்துக் காணப்படுவார்கள். இது போன்றோர் தங்களுடைய பெருத்த சரீரம் குறைய வாரம் இருமுறை இதன் இலைகளைப் பறித்துவந்து சாப்பிட்டு வந்தால் மலம், சிறுநீர் நிறையக் கழிந்து விரைவில் உடல் வற்றிப்போகும்.

மலச்சிக்கல் இருந்தால்

மலச்சிக்கல் பிரச்சனை

மலம் சரியாக கழியாமல் மலச்சிக்கல் இருந்தால் பொன்னாவரை இலையையும், விதையையும் சேர்த்து அரைத்தெடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கவும்.

அதன் பின்னர் 5 முறை மலம் கழிந்து உடலை புத்துணர்வு பெற வைக்கும்.

பித்தமிகுதியால் நமைச்சல்

பித்தம் அதிகமாகிவிட்டால் நமைச்சல் உண்டாகி சொறி, சிரங்கு உண்டாகும்.

இந்தத் தொல்லையைப் போக்கிக் கொள்ள, பொன்னாவரை இலையைக் கொண்டுவந்து அதில் சிறிது மஞ்சள் சேர்த்து மெழுகாக அரைத்து உடம்பு முழுவதும் பூசிக் கொள்ளவும். பின்னர் கால்மணி நேரம் கழித்து பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஒழிந்துவிடும்.

கல்லீரல் – மண்ணீரல் கோளாறுகளுக்கு

கல்லீரல் – மண்ணீரல் கோளாறுகளினால் பித்த பாண்டு, சோகை, வீக்கம் உண்டாகும். இதனைப் போக்கிக் கொள்ள கீழ்க்காணும் முறையைக் கையாளவும்.

பொன்னாவரை வேர் 50 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவை மூன்றும் வகைக்கு 10 கிராம் சேர்த்து நன்றாக அரைத்து மட்பாண்டத்தில் போட்டு 2 லிட்டர் நீர் ஊற்றிக் காய்ச்சவும்.

நீர் ஒரு லிட்டராகச் சுண்டியதும் இறக்கி ஆறவிட்டு வடித்துச் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

தினசரி வேளைக்கு 100 மில்லி அளவு நான்கு வேளைகள் குடித்து வரவும். இதனால் கல்லீரல் – மண்ணீரல் தெடார்பான நோய்கள் குணமாகும் ponnavarai benefits in tamil பொன்னாவரை பயன்கள்.

சுரம், இருமல் இருந்தால்

எந்த சுரமாக இருந்தாலும், இருமல் இருந்தாலும் பொன்னாவரை குணமாக்கும்.

பொன்னாவரை இலை 100 கிராம் சேகரித்துக் கொண்டு வந்து சாறு பிழிந்து, சாறின் அளவு பாலும் சிறிது தேனும் கலந்து குடித்துவந்தால் சுரம், இருமல் குணமாகும்.

கக்குவான் இருமல்

கக்குவான் இருமல் குழந்தைகளுக்கு வந்துவிட்டால் மிகவும் சிரமப்படும். இதனால் மாதக் கணக்கில் துன்பத்தைக் கொடுக்கும். ஆகையினால் இதற்கு உடனடி நிவாரணம் பெற வேண்டும்.

பொன்னாவரை விதையை பால்விட்டு அரைத்துக் கொடுத்து வந்தால் சில நாட்களிலேயே கக்குவான் இருமல் அகன்று குழந்தை குணம் பெறும்.

உடல் அசதிக்கு

உடல் அசதியினால் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோம்பலாக இருந்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

பொன்னாவரையின் விதையைக் கொண்டுவந்து சுத்தமான அம்மியில் வைத்து விழுது பதத்திற்கு அரைத்து அதனை எடுத்து சாப்பிட்டு சிறிது குளிர்ந்த நீரைப் பருகினால் சிறிது நேரத்திலேயே அசதி அகன்று புத்துணர்ச்சிப் பெறுவார்கள் ponnavarai benefits in tamil பொன்னாவரை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button