செடி மரம்மூலிகை

பொடுதலை செடி பயன்கள்

poduthalai uses in tamil பொடுதலை செடி பயன்கள் பொடுதலை என்பது ஒருவகை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இதனைப் பொடுதிலை, பூற்சாதம் என்றும் கூறுவார்கள். இதன் இலை, காய் இரண்டும் மருத்துவப் பயனுள்ளதாகும்.

இது ஆறு, குளக்கரை மற்றும் ஈரப்பாங்கான இடங்களில் செழித்து வளரக்கூடியது. தரையை ஒட்டி வளரும் சிறு செடியாகும்.

இதன் இலை பச்சை நிறமாக நீள்வட்டத்தில் ஓரங்களில் அரும்பு வடிவமாகக் காணப்படும். இதன் பூக்கள் மிகவும் சிறியதாக ஐந்து இதழ்களை உடையதாக இருக்கும் poduthalai uses in tamil பொடுதலை செடி பயன்கள்.

மூலத்திற்கு உகந்த மருந்து

மூல நோய் குணமாக

மூலத்திற்கு உகந்த மருந்தாக பொடுதலை இலை பயன்படுகிறது. பொடுதலை இலையுடன் சிறிது உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்து சூடான சாதத்துடன் சிறிது நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டு வரவும்.

இதனால் உள்மூலம், ரத்த மூலம், பௌத்திரம் ஆகியவைகள் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இரவில் மட்டும் மூலத்தின்மேல்வைத்துக் கட்டி வந்தால் மூலநோய் நீங்கும்.

வாழைப்பழம் பயன்கள்

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த நோய்க்கு

குழந்தைக்கு டானிக்

சிறு குழந்தைகளைப் பாதிக்கும் நோய் மாந்த நோயாகும். இதனைப் போக்க குழந்தை நலமுடன் இருக்க ஒரு மருந்து.

பழைய அரிசியுடன் பொடுதலையின் காயைச் சேர்த்து வேவைத்து முதல்கொதி வந்தவுடன் அரியை எடுத்து உலர்த்தி நொய்யாக்கிக் கொள்ளவும்.

பின்னர் அந்த நொய்யைக் குழந்தைக்குக் கொடுத்துவந்தால் நோய் குணமாகும்.

சளி-இரைப்பு கட்டுப்பட

பொடுதலைக் கீரையுடன் கொத்துமல்லித் தழை, கருவேப்பிலை, புதினா, இஞ்சி இவைகளை அளவோடு சேர்த்து சூடான சாதத்துடன் சிறிது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டு வரவும் poduthalai uses in tamil பொடுதலை செடி பயன்கள்.

இதனால் சளித்தொல்லை நீங்கும், இரைப்பு முதலியவைகட்டுப்படும்.

அக்கிப் புண்- நெறிக்கட்டி பொடுதலை செடி பயன்கள்

அக்கிப்புண் இருந்தாலோ, நெறிக்கட்டி இருந்தாலோ இவைகளை குணமாக்கிக் கொள்ள பொடுதலை இலையை நன்கு அரைத்து பற்றுப் போட்டுவந்தால் அக்கிப்புண் குணமாகும். நெறிக்கட்டி இருந்தாலும் பழுத்து உடைந்து வீக்கம் குறையும்.

வெள்ளைப் படுதல் நோய்க்கு

பெண்களுக்கு வெள்ளைப்படும் நோய் உண்டாகி கஷ்டத்தைக் கொடுக்கும். இதனை நீக்கிக்கொள்ள ஒரு மருத்துவம்.

பொடுதலை இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சிறிது சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து தயிர் அல்லது வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டு வரவும்.

இதனால் பெண்களுக்கு உண்டாகும். வெள்ளை படுதல் நோய் குணமாகும்.

தலையில் உண்டாகும் சொறி, சிரங்கு, புண்

சிறு குழந்தைகளின் தலையில் சொறி, சிரங்கு, புண் ஆகியவைகள் ஏற்பட்டால் பொடுதலை நல்ல பரிகாரம் ஆகும்.

பொடுதலை இலையைக் கொண்டு வந்து இடித்து 250 கிராம் எடுத்துக் கொண்டு அதன் அளவுக்கு நல்லெண்ணெய் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்து. தலைக்கு ஊற்றிவந்தால் குழந்தைக்கு வரும் சொறி, சிரங்கு, புண் ஆகியவைகள் நீங்கி குணமாகும் poduthalai uses in tamil பொடுதலை செடி பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button