செடி மரம்மூலிகை

பிரண்டை மருத்துவ குணங்கள்

pirandai uses in tamil பிரண்டை மருத்துவ குணங்கள் பிரண்டை கொடி இனத்தைச் சேர்ந்தது. இது வெப்பமான இடங்களில் அதிகமாக வளர்கிறது. நம் நாட்டில் பரவலாக இருப்பது சதுரப் பிரண்டை பிரண்டையை வற்றலாகச் செய்து சமையலில் பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது. பிரண்டை பசியைத்தூண்டக் கூடியது.

பிரண்டை மருத்துவ குணங்கள் – pirandai uses in tamil

மூல நோய் – ரத்தப் போக்கு நிற்க

மூல நோய் குணமாக

மூல நோயினால் இரத்தப் போக்கு ஏற்பட்டு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். அதனைப் பிரண்டைத்தண்டு போக்குகிறது.

பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து எடுத்து கொட்டைப் பாக்கு அளவு தினம் இருவேளை என எட்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோயினால் உண்டாகும் ரத்தப் போக்கு நிற்கும்.

காதில் வலி – சீழ்வடிந்தால் பிரண்டை மருத்துவ குணங்கள்

காது வலி

காது வலித்தாலும், காதில் சீழ் வடிந்தாலும் பிரண்டையை தீயில் வதக்கி சாறுபிழிந்து கொள்ளவும்.

இந்த சாறில் இரண்டு துளி காதில் விட்டு வந்தால் மேலே கண்ட குறைபாடுகள் குணமாகும்.

மூக்கில் இரத்தம் வடிந்தால் அதனை நிறுத்த மேற்கண்ட முறையில் இந்தச் சாறை மூன்று துளி மூக்கில் விட்டால் இரத்தம் வடிவருநின்றுவிடும்.

செம்பருத்தி பூ நன்மைகள்

முறிந்த எலும்பு விரைவில் கூடுவதற்கு

முறிந்த எலும்பு விரைவில் கூட வேண்டுமானால் பிரண்டையின் வேரைக் கொண்டு வந்து நன்றாக உலர்த்தி பொடியாக்கி பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

இந்த சூரணத்தில் 2 கிராம் வீதம் உண்டு வரவேண்டும். இதனை வெந்நீரில் குழைத்துப் பற்றுப் போட்டும் வரவும். இதனால் விரைவில் எலும்பு கூடும் pirandai uses in tamil பிரண்டை மருத்துவ குணங்கள்.

கீழே விழுந்து சதை பிரளுதல், வீக்கம் உண்டாதல்

எதிர்பாராமல் கீழே விழுந்து சதை பிரளுதல், வீக்கம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட்டால் உடனடி நிவாரணம்.

பிரண்டையை இடித்து சாறு எடுத்து அந்தச் சாறுடன் புளியையும், உப்பையும் சேர்த்துக் காய்ச்சிக் குழம்பு பதத்தில் இறக்கி அதன்மேல் பற்றுப் போட்டு வந்தால் மேற்கண்டவைகள் குணமாகும்.

ஆண்மைக் குறைவுக்கு பிரண்டை பயன்கள்

ஆண்மை குறைவுக்கு ஆளானவர்கள் ஆண்மை பெற்றுத் திகழ பிரண்டை உதவுகிறது. பிரண்டையிலிருந்து “பிரண்டை உப்பு” என்று செய்வார்கள். இது நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்.

பிரண்டை உப்பு, சாதிக்காய்த் தூள் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நெய்யுடன் காலை, பகல், மாலை என மூன்று வேளைகள் சாப்பிடவும்.

இது போன்று தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மை மிகும். தாது நஷ்டம், பலஹீனம் போன்ற குறைபாடுகள் நீங்கி உடல் வலிமை பெறும்.

அஜீரண கோளாறு நீங்க

பசியின்மை நீங்க pirandai uses in tamil பிரண்டை மருத்துவ குணங்கள்

அஜீரணக் கோளாறுக்கு பிரண்டை இலை, தண்டை உலர்த்தி நன்கு இடித்துத் தூளாக்கிக் கொள்ளவும். இத்துடன் சுக்குத் தூள், மிளகுத் தூள் சம அளவாகச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் அடியோடு மறைந்துவிடும் pirandai uses in tamil பிரண்டை மருத்துவ குணங்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button