வீட்டு மருத்துவம்

பெருங்காயம் மருத்துவ பயன்கள்

பெருங்காயம் மருத்துவ பயன்கள் perungayam benefits in tamil பெருங்காயம் கக்குவானுக்கு பெருங்காயத்தை வறுத்துத் செய்து பட்டாணியளவும், படிகாரத்தூள் உளுந்தளவும் எடுத்து, தேன் விட்டுக் குழப்பிக் காலை, பகல், மாலையாக ஒரு நாளைக்கு மூன்றுவேளை தொடர்ந்து கொடுத்து வந்தால் கக்குவான் குணமாகும்.

பெருங்காயம் மருத்துவ பயன்கள் (perungayam benefits in tamil)

பெருங்காயம் மருத்துவ பயன்கள் perungayam benefits in tamil

நரம்பு சிலந்திக்கு

பெருங்காயத்தை சுண்டைக்காயளவு இருந்து பொரித்து தூள் செய்து வாழைப்பழத்தில் வைத்துத் தின்று வந்தால் நரம்பும் சிலந்தி சீக்கிரமாக வெளியேறும்.

அண்டவாய்வு குணமாக

சிறிதளவு பெருங்காயதாத எழுத்துப் பொரித்து அதைக் தூள் செய்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நான் கொடுத்து வந்தால் அண்டவாய்வு குணமாகும்.

மருந்து சாப்பிடும் பொழுது வாய் பதார்த்தம் – சாப்பிடக்கூடாது.

வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற

இருபது கிராம் பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து அத்துடன் 5 கிராம் இந்துப்புத் தூளும் சேர்த்து அரை அவுன்ஸ் காடியுடன் கலந்து குடிக்கக் கொடுத்து விட்டால் சிறிது நேரத்தில் இறந்த குழந்தை வெளிவந்துவிடும்.

ஓமம் மருத்துவ பயன்கள்

வாய்வு எடுபட

இரண்டு சுண்டைக்காயளவு பெருங்காயத்தை நெய்யில் வறுத்து தூள் செய்து சாப்பிடுவதற்குமுன் இரண்டு அகப்வை சுடுசாதத்தில் இந்த தூளைப் போட்டு பிசைந்து சாப்பிட்டு பிறகு வழக்கம் போல் சாப்பிட்டு வந்தால் வாய்வு முழுவதும் வெளியேறி விடும்.

பாரிச வாய்விற்கு பெருங்காயம் மருத்துவ பயன்கள்

இரண்டு சுண்டைக்காயளவு பெருங்காயத்தை சிற்றாமணக்கெண்ணெயில் பொரித்து எடுத்து விட்டு அதே எண்ணெயில் தோல் உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள் 20 கிராம் போட்டு, நன்றாகச் சிவந்து வரும் சமயம் பெருங்காயத்தையும் போட்டு, கீரைக் கடையும் மத்தைக் கொண்டு கடைய வேண்டும் பெருங்காயம் மருத்துவ பயன்கள் perungayam benefits in tamil .

இது கூழ்போல மெழுகு பதம் வந்தவுடன் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 30 கிராம் பனை வெல்லத்தை அதில் போட்டு பாகுபதம் வரும் சமயம் அதில் இதைப் போட்டு மறுபடி கடைந்து லேகியம் போலச் செய்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு.

மாலையில் இரண்டு சுண்டைக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து 21-நாட்கள் சாப்பிட்டால் பாரிச வாய்வு குணமாகும்.

பெருங்காயம் லேகியம்

பெருங்காயம் லேகியம்

பெருங்காயம் 30 கிராம். சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு, உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள், சீரகம்,

ஓமம் இவைகளில் வகைக்கு 10 கிராம் எடை இவைகளில் பெருங்காயத்தை மட்டும் வறுத்துப் பொரித்து மற்ற சரக்குகளுடன் சேர்த்து உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து மாச் சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரை ஆழாக்கு நெய்யை விட்டு,

நெய் காய்ந்த சமயம் அதில் 50 கிராம் பனைவெல்லத்தை போட்டு அது பாகுபதம் வரும் சமயம் இந்த மருந்துத் தூளை அதில் போட்டு நன்றாகக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும்.

சிவந்து லேகியப் பதம் வந்து வாசனை வரும் சமயம் இறக்கி வைத்து ஆறியபின் வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானால் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த லேகியத்தில் கழற்சிக்காயளவு எடுத்து, காலை, மாலை தொடர்ந்து 21-நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாய்வு சம்பந்தமான எல்லா கோளாறுகளும் பூரணமாகக் குணமாகிவிடும் பெருங்காயம் மருத்துவ பயன்கள் perungayam benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button