கீரை

pannai keerai health benefits | பண்ணை கீரை நன்மைகள்

pannai keerai health benefits பண்ணை கீரை நன்மைகள் பண்ணைக் கீரை பண்ணைக் கீரையில் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து ஆகிய அனைத்தும் உள்ளது. இது பண்ணையில் வளரக் கூடிய கீரையென் பதினால் இதற்குப் பண்ணைக் கீரை என்கிற பெயர் உண்டானது.

இந்தக் கீரையானது இரண்டு வகையானது ஆகும். ஒற்றினுடைய இலை அகலமானதாகவும், மற்றொன்றின் இலை பெரியதாகவும் சிவப்பு நிறம் கொண்டதாகவும் இருக்கும். பெரிய இலைகளைக் கொண்ட கீரையே உணவிற்கு ஏற்றதாகும்.

இந்தக் கீரை குணத்திலும், செய்கையிலும் இரண்டு வகையும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் சுவையைப் பொறுத்தவரையில் அகலமான இலையைக் கொண்ட பண்ணைக் கீரை சிறந்தது ஆகும். இதனுடைய இளம் தண்டும். கீரையும் உணவோடு சேர்த்துக் கொள்ள தக்கதாகும். பண்ணைக் கீரையினுடைய இலையைக் கொழுந்தாகப் பறித்து சமையல் செய்து சாப்பிடலாம்.

பண்ணை கீரை நன்மைகள் – pannai keerai health benefits

மலமிளகு, இரத்தபேதி, உள் அழலை, குடல் நோய், சீதபேதி, மூத்திரத் தாரைநோய், பெரும்பாடு, கரப்பான், இரணம், கேவூறல், கப இருமல், தோல் நோய், சொறிசிரங்கு போன்ற பல விதமான நோய்களினை இந்தக் கீரை குணமாக்குகிறது.

இக்கீரையை நன்கு சுத்தம் செய்து இதனோடு பருப்பு சேர்த்து வேக வைத்து நன்கு கடைந்து சாதத்துடன் சிறிதளவு நெய்யினைச் சேர்த்து சாப்பிட்டுவர உடலுக்கு நல்லது.

இந்தக் கீரையை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றினோடு கரைத்த புளியும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் நமது உடல் உள்ளுறுப்புகளைச் சுத்தம் செய்த குளிர்ச்சியினை உடலுக்குத் தருகிறது.

புளியாரை கீரை பயன்கள்

இந்தக் கீரையை நன்கு சுத்தம் செய்து பருப்பு சேர்த்து, இஞ்சி, கொத்துமல்லி, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுக் கடைந்து, நெய்விட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மலக்குடல் மற்றும் ஜீரண உறுப்புகள் வலிமை அடைவதோடு, உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்; சர்ம நோய்கள் நீங்கி உடலுக்கு நலமும் உண்டாகும்.

இந்தக் கீரையின் பூக்களை மட்டும் கிள்ளி நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி காலையும் மாலையும் ஒரு டம்ளர் சாப்பிட்டுவர உதிரப் போக்கினை நிறுத்தி மூன்று நாட்களில் உடல் நலம் பெறும்.

குடல் வலிமை இல்லாதவர்களும், குடல் இரணம் உள்ளவர்களும் இந்தக் கீரையைச் சாப்பிட்டு வருதல் உண்மையிலேயே வரப்பிரசாதமாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button