மூலிகைசெடி மரம்

பாகல் இலை மருத்துவ பயன்கள்

pagal leaf benefits in tamil பாகல் இலை மருத்துவ பயன்கள் பாகல் இலை பாகற்காயினை அனைவரும் அறிவர். ஆனால் பாகல் இலையும் பாகல் காயும் மருத்துவ சக்தி பெற்றது என்ற உண்மை அனேகருக்குத் தெரிந்திருக்காது. பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்பட வல்லது பாகல் இலை மற்றும் காய் இரண்டும் பித்தம், கபம், நீரிழிவு, பாண்டு, இரத்த தோஷம், குன்மம், வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், காமாலை போன்ற நோய் களைக் குணப்படுத்தும் ஆற்றலுடையன.

பாகல் ஒரு கொடி வகையாகும். இது ஈரப்பதமான இடங்களிலும் வேலியோரங்களிலும் வளரக் கூடியதாகும். சாதாரணமாக எங்கும் வளரக் கூடிய பாகல் கொடியின் காய்கள் பச்சையாக இருக்கும். பழுத்ததும் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.

இதன் இலைகள் ஐந்து பிரிவாகவும் இருக்கும். இதன் காய் கசப்புச் சுவையுடன் இருக்கும். பாகற்காயில் இரண்டு வகை உண்டு. ஒன்று நீளமாகவும் மற்றொன்று உருண்டையாகவும் இருக்கும். இரண்டுமே கொடியில் காய்ப்பவை தான்.

இதன் இலை, காய், பழம், விதை எல்லாமே மருத்துவத்திற்குப் பயன்படுபவைகள்தான்.

பாகற்காயை வாரத்திற்கு ஒரு தடவையாவது கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் கண்டவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அளிக்கும்.

கசப்புச் சுவை இதனிடம் உள்ளமையால் இதனை உணவில் பயன் படுத்திவதினால் நோய்கள் அணுகாது. உடலுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கும்.

உடல் நலம் இல்லாமல் மருந்துண்ணும் காலங்களில் கண்டிப்பாக பாகற்காயைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதிலுள்ள கசப்புச் சுவை மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.

ஆனால் பாகல் வகையில் பலவிதங்கள் உள்ளன. கொம்பு பாகல், கொல்ல பாகல், பழு பாகல், வேலப் பாகல், நரிப்பாகல், மிதி பாகல் என்று இருப்பினும் எல்லாமே கசப்புச்சுவை உடையவைதாம்.

நரம்பின் பலத்திற்குக் கசப்புச் சுவை இன்றியமையாததாகும். உடல் இயக்கத்திற்கு நரம்பு முக்கிய பங்கை வகிப்பதினால் பாகலை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கசப்புத்தன்மை உடல் நலத்திற்கு நல்லது என்று எண்ணி அளவுக்கு அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதனால் தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.

நொச்சி இலை பயன்கள்

நீரிழிவு சிறந்த மருந்து பாகல்

பாகற்காய் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மிகச் சிறந்த மருந்தாக இருக்கிறது pagal leaf benefits in tamil பாகல் இலை மருத்துவ பயன்கள்.

பாகற்காயை இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதே அளவு பாகல் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதே போன்று நாவல் மரப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்,

மூன்றும் ஒரே அளவாக சாறு எடுத்து ஒன்றாகக் கலந்து காலையில் 25மில்லி அல்லது 30 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இதுபோன்று தொடர்ந்து 48 நாட்கள் குடித்துவந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பாகலினால் குணமாகும் பலவித பிணிகள்

பொதுவாக பாகல் ஒரு கிருமிநாசினியாகும். ஆதலினால் இதன் இலை, காய், பழம் ஆகிய அனைத்தும் பல நலன்களை அளிக்கிறது.

பாகல் இலையை இடித்துத் தினசரி 25 மில்லி சாப்பிட்டால் போதும் வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறிவிடும்.

பாகல் இலைச் சாறை அதிக அளவில் அருந்தினால் மலத்தை வெளியாக்குவதுடன் வாத, பித்த, கபம் ஆகியவைகளையும் கட்டுப் படுத்துகிறது.

பாகற்காயை முறைப்படி சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாதம் தொடர்பான நோய்கள் விலகும்.

உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலைச் சாறைப் பூசி வந்தால் எரிச்சல் தணியும்.

இருமலுக்கு இதமான மருந்து

இருமல் குணமாக

காசம், கபம் இருமலினால் அவதிப்படுபவர்களுக்கு பாகல் ஒரு இதமான மருந்தாக உள்ளது.

நாட்டுப் பாகல் பழத்தையும், தூதுவளை இலையையும் சம அளவாக எடுத்து நன்றாக இடித்து 15 மில்லி அளவு சாறு எடுத்துக் கொண்டு அதில் 50 மில்லி வெள்ளாட்டின் பால் கலந்து தினசரி காலையில் குடித்து வரவும். இதனால் காசத்தாலும், கபத்தினாலும் தொல்லைக் கொடுக்கும் இருமல் குணமாகும்.

மூலநோய் அகல

மூல நோய் குணமாக

மூலநோய் உள்ளவர்கள் நாய் பாகல் ரசத்தைத் தினசரி 15 மில்லி வீதம் தொடர்ந்து குடித்து வந்தால் மூலம் அகலும்.

இதன் இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி வெளி மூலத்தின் மேல் வைத்துக் கட்டினால் குணமாகும் pagal leaf benefits in tamil பாகல் இலை மருத்துவ பயன்கள்.

விஷ ஜுரம் நிற்க

விஷஜுரம் நிற்க பாகல் இலையைப் போதிய அளவு எடுத்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் பாகல் சாற்றில் ஒரு டீ ஸ்பூன் அளவு வறுத்துப் பொடித்த சீரகப் பொடியைப் போட்டுக் கலந்து காலை மாலை இரு வேளையும் நான்கு நாட்களுக்கு உட்கொண்டுவர காய்ச்சல் குணமாகும்.

காலரா குணமாக

காலரா குணமாக பாகல் சாறில் ஒரு அவுன்ஸ் எடுத்து இதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெய் சேர்த்து குடித்துவர கழிசல் குணமாகும்.

நீரிழிவு நோய் குணமாக

நீரிழிவு நோய் குணமாக ஒரு அவுன்ஸ் பாகல் இலைச் சாறு எடுத்து அதில் உளுந்தளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு அருந்தி வரவும். பூரணகுணம் தெரியும் வரை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

நாக்குப்பூச்சி ஒழிக்க

நாக்குப்பூச்சி ஒழிய பாகல் இலைச் சாறு ஒரு ஆழாக்கில் ஆறில் ஒரு பங்கு எடுத்து சிறிது வெல்லத்தைக் கரைத்துக் குடித்துவந்தால் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும். பாகல் இலைச் சாறுடன் சீரகப் பொடி கலந்து உட்கொண்டாலும் பூச்சிகள் வெளியேறிவிடும்.

வயிற்று இரைச்சல், வாயு

வயிற்று இரைச்சல், வாயு, வலி, அஜீரணம், ஏப்பம் போன்ற நோய்கள் குணமாக பாகல் இலைச் சாறு உதவும். ஒரு அவுன்ஸ் பாகல் இலைச் சாறில் ஒரு டீ ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி கலந்து உட்கொண்டால் வயிற்று நோய்கள் குணமாகும். உணவுப் பையானது பருத்துப் போகுமானால் பாகல் இலைச் சாறுடின் சிறிதளவு குங்குமப்பூவை அரைத்து சேர்த்துக்குடித்துவர பருமன் குறையும் pagal leaf benefits in tamil பாகல் இலை மருத்துவ பயன்கள்..

கண் மங்கல் மாற

கண் மங்கல் மாற ஒரு அவுன்ஸ் பாகல் இலைச் சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய் சேர்த்து தூய்மையான செப்புப் பாத்திரத்தில் தடவி மை வைத்துக் கண்ணுக்கு இட்டுக் கொண்டுவர சில நாட்களில் மாலைக் கண் முதலான கண் நோய்கள் குணப்படும்.

காசம் குறைய

காசம் குறைய ஒரு அவுன்ஸ் பாகல் இலைச் சாறுடன் சம அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளையில் குடித்துவர குணமாகும்.

சிரங்கு மறைய

சிரங்கு மறைய பாகல் இலைச் சாறில் காசுக் கட்டியை உறைத்து வழுதாக்கி அதனைச் சிரங்கின் மீது பருமனாகப் பற்று போட, இரத்தம் சுத்தியாகி சிரங்கு உதிர்ந்துவிடும்.

பல் நோய் நீங்க

பல் நோய் நீங்க பாகல் இலையை வெய்யில் படாது நிழலில் உலர்த்திப் பக்குவமாக அந்த இலையைப் பீடி போலச் சுருட்டிப் புகைத்துப் புகையினை உறிஞ்சவும்.

வெறிநாய் கடிக்கு

வெறிநாய்க்கடிக்கு பாகல் இலையை அரைத்து விழுதாக்கி, நாய்க்கடியில் பாதிக்கப்பட்டவரின் உடல் முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துப் பிறகு நீராடச் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை செய்து வந்தால் உடலில் நாய்க்கடி விஷம் ஏறாது.

விரியன் பாம்பின் விஷம் முறிய

விரியன் பாம்பின் விஷம் குறைய பாம்புக் கடிபட்டவருக்குப் பாகல் இலைச் சாற்றைக் குடிக்கக் கொடுக்க வேண்டும். வாந்தி எடுக்கும் வரை விடாது குடித்திட வேண்டும். வாந்தியுடன் விஷமும் வெளியேறும்.

பித்தம் குறைய

பித்தம் மிகுந்தால் பாகல் இலைச் சாறின் ஆழாக்கில் ஆறில் ஒரு பங்கு எடுத்து தினசரி காலையில் அருந்தி வரவேண்டும். மூன்று நாட்களில் பித்தம் குறையும்.

கருப்பை நோய்கள் நீங்க

கருப்பை நோய்கள் நீங்க பாகல் வேரைச் சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெய்யில் குழைத்து பிறப்பு உறுப்பின் உள்ளும் புறமும் தடவி வர நோய் நீங்கும். பிரசவத்துக்குப் பின் சில பெண்களுக்கு வரும் மண்குத்தி நோய்க்கும் கைகண்ட மருந்தாகப் பயன்படும்

மிதி பாகல் இலை

மிதிபாகல் இலை வயிற்றில் இடுமருந்து இருக்கிறதா என்பதை அறிய மிதிபாகல் இலையை இடித்துச் சாறு எடுத்து அந்த சாற்றை உள்ளங்கையில் கனமாக விட்டு வைத்தால் கால் மணி நேரத்தில் அந்தச் சாறு கல்லீரல் போல் கெட்டியாக இறுகிவிடும். வயிற்றில் இடுமருந்து இல்லை எனில் பாகல் இலைச் சாறு இறுகிக் கெட்டியாகாது.

அழுகல் குஷ்டம் சுகமாக நன்றாக செழுமையாக வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கொண்டிருக்கும் மிதிபாகல் கொடியை வேருடன் கொண்டு வந்து, வேர்ப்பகுதியை தண்ணீர் விட்டுக் கழுவி, மற்றப் பகுதிகளை பூச்சி, பழுப்பு இல்லாமல் சுத்தம் செய்து, துண்டுதுண்டாக நறுக்கி தினசரி வெய்யிலில் காயவைத்து, சருகுபோல ஆனதும் உரலில் போட்டு இடித்துத் துணியில் சலித்து ஒருபாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இத்தூளை ஒரு தேக் கரண்டி அளவு எடுத்து ஆழாக்குப் பசும்பாலில் போட்டுக் கலக்கி காலை வேளைகளில் மட்டும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டுவந்தால் அழுகல் குஷ்டநோய் படிப்படியாகக் குறையும் pagal leaf benefits in tamil பாகல் இலை மருத்துவ பயன்கள்..

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button