நாட்டு மருந்து

ஓமம் மருத்துவ பயன்கள்

ஓமம் நன்மைகள் – omam benefits in tamil

அஜீரண வயிற்றுவலி

ஓமம் மருத்துவ பயன்கள் omam benefits in tamil அரை ஆழாக்களவு ஓமத்தை ஒரு சட்டியில் போட்டு இளவறுப்பாக வறுத்து எடுத்து அதை தேய்த்துப் புடைத்து விட்டு, சட்டியில் போட்டு இரண்டு ஆழாக்குத் தண்ணீர்விட்டு ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சி, அதில் காலை, மாலை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.

வயிற்று உப்பிசம், வாய்வு குணமாக

வாயு தொல்லை நீங்க

ஆழாக்கு ஓமத்தை ஒரு சட்டியில் போட்டு வறுத்து அதை முறத்தில் கொட்டி நன்றாக தேய்த்தால் அதன் உமி கழன்றுவிடும். அதை நன்றாய்ப் புடைத்து எடுத்து, அம்மியில் வைத்து அத்துடன் அதேயளவு பனை வெல்லத்தையும் வைத்து மைபோல அரைத்து ஒரு வாயகன்ற கண்ணாடி சீசாவில் வைத்துக் கொண்டு காலை, மாலை இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்று உப்பிசம் குணமாகும். வாய்வு குணமாகும்.

அஜீரணம் குணமாக

அஜீரணம் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் இசிவுக்கு சிலசமயம் குழந்தைகளுக்கு இசிவு ஏற்படுவதுண்டு. இது அஜீரணம் காரணமாகவும் ஏற்படும். இந்த சமயம் வயிறு சற்று உப்பிசமாக இருக்கும்.

இந்த சமயம் வசம்பு, ஓமம் 4 கிராம் எடை வீதம் எடுத்து. அம்மியில் வைத்து வேலிப்பருத்தியிலைச் சாறு விட்டு மைபோல அரைத்து சங்கில்போட்டு நீர் விட்டுக் கலக்கிக் கொடுத்து விட்டால் இசிவு நிற்கும்.

குழந்தை வயிற்றுப் போக்கு நிற்க

குழந்தைக்கு டானிக்

ஐந்து கிராம் ஓமம் அதே அளவு கறிவேப்பிலை இரண்டையும் மைபோல அரைத்து சங்கில்போட்டு வெந்நீரில் கரைத்து காலை, மாலை மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப் போக்குக் குணமாகும்.

அதிசாரம் குணமாக ஓமம் மருத்துவ பயன்கள்

ஐந்து கிராம் ஓமத்தையும், அதேயெடை பிரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அம்மியில் வைத்துத் தட்டிச் சாறு எடுத்து அந்தச் சாற்றில், சங்களவு குழந்தைகளுக்கும், ஒரு அவுன்ஸ் வீதம் பெரியவர்களும் சாப்பிட்டு வந்தால் அதிசாரம் குணமாகும்.

பசிதீபனம் உண்டாக ஓமம் பயன்கள்

ஓமம், சுக்கு, சித்திர மூலவேர்ப்பட்டை இம்மூன்றும் சம அளவு எடுத்து, தூள் உள்ள அளவு கடுக்காய்த் தூளும் சேர்த்து, அரைத் தேக்கரண்டியளவை அரையாழாக்கு மோரில் கலந்துக் குடிக்க குணமாகும்.

மாந்தம் குணமாக

ஓமம், பூண்டு, திப்பிலி, மிளகு இவைகளை வகைக்கு 2%2 கிராம் எடுத்து அம்மியில் வைத்துப் பசும்பால் விட்டு, மைபோல அரைத்து, பட்டாணியளவு உருண்டைச் செய்து, நிழலில் காயவைத்து, வேளைக்கு இரண்டு உருண்டைகள் வீதம் சங்கில் போட்டுக் கலக்கி, காலை, மாலையாக இருவேளை கொடுக்க எல்லாவித மாந்தமும் குணமாகும்.

புளியேப்பம் நிற்க

வாந்தி நிற்க

அஜீரணம் காரணமாக புளியேப்பம் ஏற்பட்டால், ஓமத்தை இளவறுப்பாக வறுத்து, முறத்தில் கொட்டித் தேய்த்து உமியை அகற்றி அம்மியில் வைத்து, தேன்விட்டு அரைத்து கழற்சிக்காயளவு சாப்பிட்டால் புளியேப்பம் குணமாகும்.

ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி

ஓமம் மருத்துவ பயன்கள் omam benefits in tamil ஓமம் வாட்டர் தயாரிப்பது எப்படி omam water benefits in tamil

ஓமம் மருத்துவ பயன்கள் omam benefits in tamil ஓமநீர் இதைத் தயார் செய்து வைத்துக் கொண்டால் சமயத்திற்கு உதவும்.

100 கிராம் ஓமத்தை ஒரு சுத்தமான மெல்லிய துணியில் மூட்டை போல தளர்த்தியாக கட்டி அது கொள்ளும் அளவிற்கு மேல் சற்று இடைவெளி இருக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை விட்டு,

பாத்திரத்தின் மேல்பக்கமாக ஒரு குச்சியை வைத்து அதில் இந்த மூட்டையை நூல் கொண்டு கட்டி தண்ணீரில் மூழ்கி நிற்கும் படிக் கட்டிவிட வேண்டும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக தண்ணீரைக் கொதிக்க வைத்து தீயை அடக்கி விட்டால், கொதி அடங்கும். தண்ணீரின் மேல் தைலம் துளித்துளியாக மிதக்கும்.

இந்தத் தைலத்தை கோழியிறகு கொண்டு சேகரித்து ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொள்ள வேண்டும். வயிற்று உப்பிசம், புளியேப்பம் வயிற்றுப் போக்கு, அஜீரணம் ஏற்பட்ட சமயம் தேக்கரண்டியளவு எடுத்து, தண்ணீர் கலந்து உட்கொள்ள சுகம் கொடுக்கும் ஓமம் மருத்துவ பயன்கள் omam benefits in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button