வீட்டு மருத்துவம்

ஓமம் பயன்கள் omam benefits in tamil

omam benefits in tamil  ஒரு மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கு மிகவும் முக்கியம் அவனது உடல் நலமும் மனம் நலமும் தாங்க..அதிலும் உடல் நலம் ரொம்ப முக்கியமானது,அந்த உடல் நலம் தொடர்பான ஒன்று தான் இந்த ஓமம் வாங்க அதோட பயன்களை பற்றி நாம்  இங்கு பார்க்கலாம்.

ஓமத்தின் நன்மைகள் | omam benefits in tami ஓமம் தீமைகள் ஓமம் தண்ணீர் தயாரிப்பு ஓமம் சீரகம் பயன்கள் ஓமம் சுக்கு பயன்கள் ஓமம் ஆங்கிலத்தில் 

ஓமத்தின் நன்மைகள் – omam benefits in tamil 

  • மனிதனுக்கு பசியை தூண்டவும் , சாப்பிட்ட பிறகு உணவு செரிமானமாக இந்த ஓமம் உதவுகிறது.
  • ஜலதோஷம் , ஆஸ்துமா போன்ற நோய்க்கு கூட இது தீர்வாய் அமைகிறது.
  • சிலர் பார்க்க பலசாலியாக இருந்தாலும்கூட மாடிப்படி ஏறி இறங்கினால் உடனே மூச்சு வாங்கும், அவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனோடு பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும் .
  • இன்று அஜீரண கோளாறு என்பது சிறு குழந்தை முதல் பெரியோர் வரையிலான பெரும் பிரச்சினை ஆகும் . அதை சரி செய்ய 100கிராம் ஓமத்தை 1லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியாக வந்த பிறகு குடிப்பது இதற்கு தீர்வாகும்.
  •  ஆதி காலத்தில் இருந்து சிறுகுழந்தையின் எல்லாம் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஓமத்திராவகம் இருந்துள்ளது.
  • சித்த மருத்துவத்தில் ஓமம் மிக முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
  • உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிறதுக்கு ஓமம் பயன்படுகிறது.
  • உயர்  இரத்த அழுத்தத்தை குறைத்து உடம்பில் இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த நாளங்களை தளர்த்தி அதை விரிவடைய செய்கிறது.
  • ஓமத்தில் அதிக அளவு ஆன்டி – ஆக்சிடன்கள் உள்ளன. அது உங்கள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதுவரை ஓமத்தின் நன்மைகளை பார்த்தோம் இனி அதனால் வரும் விளைவுகளை பற்றி பார்க்கலாம். 

ஓமத்தின் பக்க விளைவுகள் 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள் அது போல அதிக அளவு ஓமத்தை எடுத்துக்கொள்ளும்போது அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தேவைல்லாத நெஞ்சு எரிச்சல், வயிற்று புண் ஏற்படலாம்..

அது அதிக அளவு எடுப்பதன் மூலம் உடல் வெப்பநிலை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.கர்ப்பகால பெண்கள் அதை அதிக அளவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

ஓம நீர் தயாரிப்பது எப்படி ?

பொதுவாகவே எல்லாம் மூலிகைகளும் ருசிக்காக உட்கொள்ளப்படுவதில்லை உடல் ஆரோக்கியத்திற்கு  இயற்கை தந்த பரிசு மூலிகைகள். அவற்றை உடலால் உட்கொள்ள ஒரு ஊடகம் நமக்கு தேவைப்படுகிறது அதுவே நெய் , தேன் , பால்  மற்றும் நீர் .

ஓமத்தில் உள்ள சத்துக்களை நீரினால் எளிதாக பெறமுடியும். முதலில் 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக  வறுத்து, அதை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அதை நன்றாக நசுக்கி பின்பு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது .

ஓமம் பயன்படுத்தும் முறை    

சளி , இருமலால் அவதிப்படுபவர்கள் ஓம விதைகளை , நாள்  ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை சிறிது வெல்லம் சேர்த்து வாயில் போட்டு மென்றுகொள்வது நல்ல பயனை கொடுக்கும்

ஜலதோசம் பிடித்தவர்களுக்கு நல்ல நிவாரணியாக ஓமம் பயன்படுகிறது அவர்கள் 1 டீஸ்புன் அளவு ஓமம் எடுத்து அதை பொடித்து ஒரு காட்டன் துணியில் கட்டிக்கொண்டு சுவாசிப்பது நல்ல தீர்வு கிடைக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இயற்கை தந்த வடபிரசாதம் பசுமை பானம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button