மூலிகைசெடி மரம்

நொச்சி இலை பயன்கள்

nochi leaf uses in tamil நொச்சி இலை பயன்கள் நொச்சி நீர் வளம் மிக்க இடங்களில் வளரக் கூடிய சிறு மர வகையாகும். இதன் இலை, பூ, வேர், பட்டை ஆகியவைகள் எல்லாம் மருத்துவக் குணம் கொண்டவை.

குளிர் சுரம், கை-கால் பிடிப்புக்கு

மேற்கண்ட குறைபாடுகள் அகல நொச்சி இலையுடன் பாதியளவு மிளகு சேர்த்து மெழுகு போல அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதிலிருந்து வேளைக்கு சுண்டையாக் அளவு எடுத்து காலை, பகல், மாலை என மூன்று வேளைகள் சாப்பிட்டுவர குளிர் சுரம், கை-கால் பிடிப்பு, உடம்புவலி, செரியாமை போன்ற குறைபாடுகள் குணமாகும்.

வாத நோய்கள் தணிய

நொச்சி, வேம்பு, தழுதாழை, தும்பை, நாயுருவி, ஆடாதொடை, வேலிப்பருத்தி, குப்பைமேனி ஆகிய இலைகளை வகைக்கு ஒரு பிடி அளவு தயார் செய்து செய்து கொள்ளவும்.

ஒரு மட்பாண்டத்தில் முக்கால் அளவு நீர் விட்டு இவைகளைப் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

அப்போது வெளியாகும் நீர் ஆவியை வேதுபிடித்தால் வாத நோய்கள் தணியும். இதுபோன்று வாரம் இருமுறை மட்டும் பயன்படுத்தவது நலம்.

மூட்டுவலி, இடுப்பு வலிக்கு

மூட்டுவலி, இடுப்பு வலிக்கு

மேற்கண்ட நோயினால் கஷ்டப்படுகிறவர்கள் கீழ்க்காணும் முறையைக் கையாண்டு நலம் பெறலாம் nochi leaf uses in tamil நொச்சி இலை பயன்கள்.

நொச்சி இலைச் சாறு 1 தேக்கரண்டி எடுத்து அதில் 1 கிராம் மிளகுத் தூளும், சிறிது நெய்யும் சேர்த்து காலை, மாலை இருவேளை சாப்பிட்டுவர மூட்டுவலி, இடுப்பு வலி குணமாகும்.

சொட்டு மூத்திரம், மலப்புழு அகல

நொச்சி வேரைக் கொண்டு வந்து சுத்தமாக்கி 40 கிராம் எடுத்து வைத்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் நீர்விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

நீர் 200 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி எடுத்து காலை, மாலை 100 மில்லியாக சாப்பிட்டு வந்தால் சொட்டு மூத்திரம், மலப்புழுக்கள் நோய்கள் குணமாகும். நீர்க்கடுப்பு நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமாவினால் மூச்சிரைப்பு உண்டானால்

தூதுவளை கீரை இளைப்பு நோய் குணமாக

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத் திணறல் உண்டாகும். இது போன்றவர்கள் கீழ்க்காணும் முறையைக் கையாளவும்.

நொச்சி இலை இரண்டு, மிளகு நான்கு, கிராம்பு ஒன்று, பூண்டுப் பல் ஒன்று ஆகியவைகளை வாயில் போட்டு நன்கு மென்று அதன் சாறைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க வேண்டும்.

இது போல் தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமாவினால் உண்டாகும் மூச்சுத்திணறல் பூரணமாக நீங்கிவிடும்.

இரத்த வாந்தி, இரத்த பேதிக்கு

வாந்தி நிற்க

நொச்சிப் பூவைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தித் தூளாக்கிக் கொள்ளவும்.

இந்தத் தூளில் அரைத் தேக்கரண்டி எடுத்துக் கற்கண்டு தூள் சிறிதளவும், தேன் சிறிதளவும் சேர்த்துக் கூட்டிக் கொடுத்து வந்தால் இரத்த வாந்தி, இரத்த பேதி ஆகியவைகள் நீங்கும்.

செம்பருத்தி பூ நன்மைகள்

நரம்பு வலிக்கு

அகத்திக்கீரை நன்மைகள் தீமைகள் agathi keerai benefits in tamil

நரம்பு வலி, வாதப் பிடிப்பு இருந்தால் நொச்சியின் வேர்ப் பட்டையைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

இந்தத் தூளிலிருந்து அரை கிராம் வீதம் எடுத்து காலை, மாலை இரு வேளையும் தேனில் குழைத்து உட்கொண்டால் மேற்கண்ட நோய்கள் குணமாகும் nochi leaf uses in tamil நொச்சி இலை பயன்கள்.

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாக

கல்லீரல் nochi leaf uses in tamil நொச்சி இலை பயன்கள்

மேற்கண்ட நோய்க்கு கீழ்க்கண்ட வைத்திய முறையைக் கையாளவும்.

நொச்சி இலையைக் கொண்டு வந்து இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி 20 மில்லி அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 20 மில்லி அளவு பசுங்கோமியம் கலந்து சாப்பிட்டுவந்தால் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாகும்.

கழுத்து விக்கம், பிடரி வலி, ஜன்னி நீங்க

இதுபோன்ற துன்பங்களுக்கு நொச்சி இலையைத் தலையணை யாகப் பயன்படுத்திவந்தால் குணமாகும்.

தவிர மண்டையிடி, இழுப்பு, மூக்கடைப்பு போன்ற குறைபாடுகளையும் இது குணமாக்கும் nochi leaf uses in tamil நொச்சி இலை பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button