வீட்டு மருத்துவம்

nellikai juice benefits in tamil நெல்லியின் பயன்கள்

nellikai juice benefits in tamil “மூப்புளகா  யந்தணிந்து  மோகம் பிறக்குமிள மாப்பிளைபோ லேயழகுவாய்க்குமே –  செப்புவருங் கோமயே  முறுங்கறியே கொள்ளவி ரெண்டுபங்கா யாமலக முண்ணமுறை யால் “( தேரன் வெண்பா )

இந்த பாடலில் நெல்லியின் பயனை அழகா சொல்லிருக்காரு தேரையர் சித்தர். அதாவது மனிதனாக பிறந்தால் கண்டிப்பாக முதுமை வர தான் செய்யும் அது தான் இயற்கை

 ஆனால் இந்த இயற்கையை கூட ,மாற்றி அமைக்கும் சக்தி இந்த நெல்லிக்கனிக்கு இருக்குனு அக்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சொல்லிருக்காங்க. முதுமையை தடுத்து இளமைக்கு மாற்றும் தன்மை இருக்கிறது என்பது சித்தர் வாக்கு. நாம் இன்னைக்கான தகவலாக நெல்லியின் பயனை பற்றி பார்க்கலாம் ..

nellikai juice benefits in tami நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் நெல்லிக்காய் பயன்கள்  பநெல்லிக்காய் மருத்துவ பயன்கள்யன்கள்நெல்லிக்காய் தீமைகள்

nellikai juice benefits in tamil நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

  • காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்  ஜூஸ் குடிப்பதால் நமக்கு ஏராளமான சத்து கிடைக்குது.ஏனென்றால் அதில் நிறைய வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.
  • நம்மளோட தலை முடி வளருவதில் இது முக்கிய பங்கு அளிக்கிறது.
  • இப்ப வரக்கூடிய தலைமுறையினருக்கு முக்கிய பிரச்சனை தலைமுடி உதிர்வு , இளநரை தான். அதையெல்லாம் சரிபண்ணும் வல்லமை படைத்தது இந்த நெல்லி ஜூஸ் .
  • மேலும் உடலின் வெப்பநிலையை சமநிலையாக்கி உடலை குளிச்சியாக வைக்க செய்கிறது .

நெல்லிக்காய் மருத்துவ பயன்கள் 

  • உடம்பு ஆரோக்கியம் பெற தினமும் ஆப்பிள் சாப்பிட சொல்வாங்க.ஆனால் இந்த ஒரு நெல்லிக்கனி 3 ஆப்பிளுக்கு சமமானது.
  • ஏனென்றால் இதில் அதிக அளவு புரதம் , வைட்டமின் சி, கால்சியம் சதுக்கள் காணப்படுகிறது.
  • வயிறு பிரச்சினைக்கு தீர்வு தரும் “ திரிபலா” சூரணம் தயாரிப்பில் நெல்லிக்கனி முக்கிய பங்கு வகிக்கிறது .
  • மற்ற கனிகளை காட்டிலும் நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி காணப்படுகிறது.
  • தினமும் 1 அல்லது 2 நெல்லிக்காய் சாப்பிடுவதால் இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்கிறது . 
  • இரத்த சோகைக்கு இது ரொம்ப நல்ல தீர்வாக இருக்கிறது.
  • தலைமுடி வளருவதில் நெல்லிக்காய் எண்ணெய் முக்கிய பங்கு தருகிறது .
  • சர்க்கரை நோய் இருக்குறவங்க தினமுமே ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவர பூரண குணமடையும்.
  • மேலும் இது பசி பிரச்சினைக்கு நல்ல தீர்வை தருகிறது .
  • உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது இயற்கை தந்த பரிசு தான் சொல்லணும்.ஏனென்றால் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் போது அது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை பேணி பாதுகாக்கிறது.
  • எலும்புக்கு கால்சியம் ரொம்ப அவசியமான ஒன்று அது நெல்லிக்காயில் அதிகமாவே இருப்பதனால் எலும்பு வலுவாக உதவுகிறது.
  • இன்றைய காலத்தில் உள்ள அனைத்து பிரச்சினைக்கும் சித்த வைத்தியத்தில் உற்ற தோழனாக இருப்பது நெல்லிக்காய் தான்.
  • சித்த மருத்துவத்தில் எல்லாம் மருந்துகளில் நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த உலகத்தில் பார்வை என்பது ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது.அந்த பார்வை குறைபாடு வராமல் தடுக்கும் சக்தி இந்த நெல்லிக்கனிக்கு உள்ளது.
  • மூளைக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து உடம்பை சுறுசுறுப்பாக வைப்பதில் வல்லமை பெற்றது நெல்லிக்கனி.
  • அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது.
  • சரும நலம் பேணி பாதுகாக்கிறது .

nellikai juice benefits in tami நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் நெல்லிக்காய் பயன்கள்  பநெல்லிக்காய் மருத்துவ பயன்கள்யன்கள்நெல்லிக்காய் தீமைகள்

உலர்ந்த நெல்லிக்காய் பயன்கள் 

  • கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வரக்கூடிய குமட்டலுக்கு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெண்ணுக்கொள்வதாள் குமட்டல் நீங்கும்.
  • செரிமான பிரச்சினைக்கு மாத்திரைகள் எடுத்து கொள்வதை தவிர்த்து உலர்ந்த நெல்லிக்காயை பயன்படுத்துவது நல்லது.
  • அசிடிட்டி போன்ற பிரச்சினைக்கு இது நல்ல தீர்வாகும்.
  • உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிடும்போது அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .

நெல்லிக்காய் லேகியம் பயன்கள்

  • நெல்லிக்காய் லேகியம் உடலில் பொதுவாக பல பிரச்சினைக்கு தீர்வாக இருக்கிறது.நெல்லிக்காய் லேகியம் உடலுக்கு பக்கவிளைவு இல்லாத மருந்தாக காணப்படுகிறது.
  • வாத நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கும், மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்களுக்கும்  இது அருமருந்தாக அமைகிறது.
  • நெல்லிக்காய் லேகியம் பித்தம் தொடர்பான நோய்களையும் சரி செய்து உடலின் பித்தத்தையும் சமன் செய்கிறது.
  • இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் நல்ல பயனை கொடுக்கும்.
  • குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியத்தை கொடுப்பதன் மூலம் பசியின்மையை சரிசெய்கிறது .nellikai juice benefits in tami நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள் நெல்லிக்காய் பயன்கள்  பநெல்லிக்காய் மருத்துவ பயன்கள்யன்கள்நெல்லிக்காய் தீமைகள்

நெல்லிக்காய் தீமைகள்

  • நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் கூட சில பக்க விளைவுகளையும் அது ஏற்படுத்துகிறது .
  • நெல்லிக்காயில் நிறைய அளவு  வைட்டமின் சி காணப்படுகிறது. இதை அதிகமாக எடுக்கும்போது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
  • சிறுநீரக பிரச்சினை இருக்குறவங்க நெல்லிக்காயை எடுப்பதை தவிர்க்கவும் .
  • நெல்லிக்காய் ஜூஸ் அதிகமாக எடுக்கும்போது தோல் வறட்சியை ஏற்படுத்தும்.
  • இதய பிரச்சினை இருக்குறவங்க இதை தவிர்ப்பது நல்லது .

இந்த தகவல் உங்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.இது போன்ற தகவலை அறிய எங்களது website -ஐ பாக்கவும் நன்றி. 

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள் தீமைகள்

  

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button