செடி மரம்மூலிகை

வேம்பு மருத்துவ பயன்கள்

neem tree uses in tamil வேம்பு மருத்துவ பயன்கள் வேம்பு என்று கூறப்படுவது வேப்ப மரம் ஆகும். இதற்கு நிம்பம், அரிட்டம் என்ற பெயர்களும் உண்டு. வேம்பின் இலை, பூ, காய், பழம் கொட்டை, மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, பிசின் ஆகிய அனைத்தும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.

மலேரியா காய்ச்சலுக்கு

மலேரியாக் காய்ச்சலுக்கு உட்பட்டவர்கள் இதன் பட்டையை கஷாயம் செய்து குடிக்க வேண்டும்.

இதன் பட்டையைக் கொண்டு வந்து ஒரு மட்பாண்டத்தில் அரைத்துப் போட்டு சிறிது கொத்துமல்லி, இஞ்சி, கிராம்பு, லங்கப்பட்டை முதலியவற்றைச் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அந்தக் கஷாயத்தைக் குடிக்கக் கொடுத்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

சாதாரண காய்ச்சலாக இருந்தால் இதன் பட்டையுடன் மிளகு, நிலவேம்பு ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் காய்ச்சல் காணாமல் போகும்.

சொறி, சிரங்கு, கரப்பான்

சொறி, சிரங்கு, கரப்பான் போன்றவற்றிற்கு நிவாரணம் பெற வேண்டுமாயின் வேப்பிலை உதவுகிறது. வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அம்மியில் வைத்து சிறிது வெந்நீர் விட்டு மெழுகாக அரைத்துக் கொள்ளவும். அரைத்தெடுத்த விழுதை சுத்தமான துணியில் தடவி சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் குணமாகும்.

அம்மை புண்கள்

அம்மை நோயினால் உண்டாகும் புண்கள் ஆறுவதற்கு வேப்பிலை யையும், மஞ்சளையும் அரைத்துப் புண்களின் மீது பூசி, வேப்பிலை ஊறப் போட்ட நீரினால் குளித்து வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.

நீரிழிவுக்கு கஷாயம்

நீரிழிவு நோயாளிகளுக்கு வேம்பு கஷாயம் நல்ல பலனை அளிக்கும்.

முற்றிய வேப்பிலை 25 கிராம், மாவிலை 25 கிராம், முள்ளங்கி 2 ஆகியவற்றையெல்லாம் அரைத்துப் போட்டுக் கஷாயமாக்கிப் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவு இந்த கஷாயத்தைச் சாப்பிடவும்.  இதுபோன்று தினசரி சாப்பிடவும். ஒவ்வொரு நாளும் சிறிதளவு சூடாக்கி 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

மருந்துண்ணும் நாட்களில் அவரவர் உடம்பு ஏற்றுக் கொள்ளும் உணவு வகைகளைச் சாப்பிடலாம். இரவில் பாதியளவு உணவுதான் உண்ண வேண்டும். இனிப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

வயிற்றில் புழு, ஏப்பம், வாந்தி

விக்கல் நிற்க

வயிற்றில் புழு, ஏப்பம், வாந்தி போன்ற தொல்லைகளை அகற்றிக் கொள்ள ஒரு எளிய மருத்துவ முறை.

வேப்பம் பூவை நெய்விட்டு வதக்கி, சிறிது உப்பு, மிளகாய், கறிவேப்பிலை, சிறிது புளி இவற்றைச் சேர்த்துத் துவையலாக அரைத்துக் கொள்ளவும். இத்துவையலைச் சோறுடன் சேர்த்து உண்டால் வயிற்றில் புழு அகன்றுவிடும்.

இதுவே ஏப்பம், வாந்தி போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்பட்டுக் குணம் தரும்.

மூக்கில் நீர்வடிதல், தலைவலி நீங்க

தலைவலி குணமாக

வேப்பம் பிண்ணாக்கைப் பொடி செய்து ஒற்றடம் கொடுத்தால் தலைவலி நீங்கும். வேப்பம் பிண்ணாக்கைப் பொடி செய்து மூக்கில் நசியமிட மூக்கில் நீர் வடிதல் குணமாகும் neem tree uses in tamil வேம்பு மருத்துவ பயன்கள்.

மேநோய் கண்டவர்களுக்கு

மேநோய் கண்டவர்கள் வேப்பம் பிசினை உலர்த்தி நன்கு பொடி செய்து வேளைக்கு 2 முதல் 4 கிராம் வீதம் சாப்பிட்டால் மேநோய் விலகும்; உடலும் வலிமையாகும்.

பழுக்காத கட்டிகளுக்கு

கட்டி பழுக்காமல் வேதனைக் கொடுத்தால் வேப்பிலையை அரைத்து பழுக்காத கட்டியின் மீது கட்டினால் சீக்கிரம் பழுத்து கட்டி உடையும்.

முறை சுரம் வேம்பு மருத்துவ பயன்கள்

முறை சுரம் வரும் முன்பே வராமல் தடுக்க ஒரு கஷாயம், வேம்பு பட்டையின் உள் சதை 75 கிராம் கொண்டு வந்து 750 மில்லி நீர் சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும்.

இதை 30 மில்லி வீதம் தினசரி அருந்தினால் முறை சுரம் வராமல் தடுக்கலாம்.

தலையில் பொடுகு வேம்பு மருத்துவ பயன்கள்

தலையில் பொடுகு

தலையில் பொடுகு உண்டாகுதல். தலையில் அரிப்பு ஏற்படுதல், தலைமுடி உதிர்தல் போன்றவைகளுக்கு வேம்புரங்கபலனைத்தரும்.

வேப்பிலை 100 கிராம், அத்தி இலை 25 கிராம், வில்வ இலை 26 கிராம், கறிவேப்பிலை 25 கிராம். மாரகை 25 கிராம், தும்பை மகிராம் ஆகியவற்றைத்தயார் செய்துகொள்ளவும் neem tree uses in tamil வேம்பு மருத்துவ பயன்கள்.

இவற்றைச் சுத்தமாகக் கழுவி காரமில்னத அம்மியில் வைத்து மெழுகாக அரைத்துக் கொண்டு அதனை மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

தினசரி காலை, பகல், இரவு மூன்று வேளையும் உணவு உண்ட பின்னர் வேளை ஒன்றுக்கு மூன்று மாத்திரைகள் விதம் வாயில் போட்டு தண்ணீர் விட்டு விழங்கவும். இதே போல் 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தலையில் உண்டாகும்.

பொடுகு அரிப்பு, தலை முடி உதிர்தல் போன்றவைகள் அகன்று முடி கருகருவென்று வளரும் neem tree uses in tamil வேம்பு மருத்துவ பயன்கள்.

மஞ்சள் மருத்துவ பயன்கள்

வேம்பு மருத்துவ பயன்கள் – neem tree uses in tamil

neem tree uses in tamil வேம்பு மருத்துவ பயன்கள் வேப்ப மரம் பயன்கள் malai vembu benefits in tamil neem leaf uses in tamil

 1. வேப்பங்கஷாயத்தைக் குளியலுக்கும், பருகவும் பயன்படுத்தினால் குட்டம் நீங்கும்.
 2. வேப்பங்கொட்டைக் கஷாயத்தைப் பருகினால் சுரா மேகம் என்னும் நோய் தணியும்.
 3. முதலில் கெட்ட இரத்தத்தை வெளியேற்றிப் பிறகு பேப்பம்பட்டைக் கஷாயத்தை மேல் ஊற்றி வந்தால் தலையில் தோன்றும் விரணங்கள் நீங்கும்.
 4. வேப்பம்பூ கஷாயத்தைக் கொண்டு வாந்தி எடுக்கும்படிச் செய்வித்தால் கபத்தால் தோன்றும் நாவறட்சி நீங்கும்.
 5. வேப்பிலை கஷாயத்தில் தேன் சேர்த்துப் பருகச் செய்தால் வாதரக்த நோய் தணியும்.
 6. வேப்பிலையை மைய அரைத்துத் தேன் கலந்து பூசினல் விரணங்கள் எளிதில் ஆறும்.
 7. வேப்ப மரத்து வோக் கஷாயத்தை இளஞ்சூட்டில் கொண்டு நன்றாக வாய்க் கொப்பளித்தால் பல் நோய் தீரும்.
 8. வேப்பங் கொட்டையை மைய அரைத்து வெந்நீருடன் உட்கொண்டாள் நஞ்சு நீங்கும். அதாவது வாந்தியாகிக் குடலுக்குள் உள்ள விஷம் வெளியேறுவதால் நன்மை உண்டாகும்.
 9. வேப்பெண்ணெயை மூக்கிலிடு மருந்தாக ஒரு மாத காலம் பயன்பதேதிப் பால்சோறு உணவாகக் கொண்டால் தலைமுடி உதிர்தல், நமை ஆகியவை தோன்றாது.
 10. வேப்பிலை, நெல்லி முள்ளி இவ்விரண்டையும் மைய அரைத்து நெ கலந்து மேல் பூச்சாகப் பயன்படுத்தினால் அக்கி, காயம், சீதபித்தம், அரிப் முதலியன நீங்கும்.
 11. வேப்பங்கொட்டைக் கஷாயத்தில் தேன் கலந்து நாள்தோறும் உட்கொண்டால் காமாலை தணியும்.
 12. வேப்பங்கொட்டையையும். பேய்ப் பீர்க்கு விதையையும் மைய அரைத்து நீரில் கலந்து பருகி வாந்தி எடுத்தால் கபத்தால் தோன்றிய இதயநோய் தணியும்.
 13. சுக்கு, வேப்பிலை இவற்றை மைய அரைத்து அத்துடன் சிறிதளவு இந்துப்பும் கலந்து கொதிக்க வைத்து இளஞ்சூடுள்ள போது கண்களின் மேல் வைத்துக் கட்டினால் கண்வீக்கம், அரிப்பு, வலி ஆகியன நீங்கும்.
 14. வேப்பிலை, தேன், நெய் இம்மூன்றையும் கலந்து புகை போட்டால் குழந்தைகளுக்குத் தோன்றிய காய்ச்சல் தணியும்.
 15. வேப்ப இலைக் கஷாயத்தில் தேன் கலந்து உட்கொண்டால் கிருமி நோய் அகலும்.
 16. வேப்பந்தளிரைக் கறியாகச் சமைத்து உட்கொண்டால் இரத்தபித்த நோய் தணியும்.
 17. பெருங்காயத்தையும், வேப்பிலையையும் மைய அரைத்துப் பூசினால் விரணங்கள் ஆறும், கிருமிகள் அழியும்.
 18. வேப்ப எண்ணெயை மூக்கிலிடு மருந்தாகப் பயன்படுத்தி வந்தால் கண்டமாலை (கழுத்தைச் சுற்றி மாலைபோல் தோன்றும் கட்டிகள்) தீரம்.
 19. வேப்பங்கொட்டையையும், கடுக்காயையும் அல்லது வேப்பங்கொட்டை யையும், நெல்லி முள்ளியையும் மைய அரைத்து ஒரு மாதம் உட்கொண்டால் குட்டம் நீங்கும்.
 20. வேப்பங்கொட்டைக் கஷாயத்துடன் பெண்குறியைப் பல முறைக் கழுவி பிறகு வேப்பங்கொட்டைத் தூளைக் கொண்டு புகை போட்டால் பெண்குறியில் தோன்றும் கெட்ட நாற்றமும், கொழகொழப்பும் நீங்கும்.

வேம்பு பால் மருந்துகள்

நிம்பாதி தைலம்: நிம்பாதி தைலத்தை நாள் தோறும் ஐந்து சொட்டுகள் உட்கொண்டு வந்தால் வாத நோய்கள், குட்டம், நரம்புச் சிலந்தி, கட்டி, பௌத்திரம், குன்மம், கழுத்துக்கு மேல் உடற் பகுதியில் தோன்றும் வாத நோய்கள், மூலம், நீரிழிவு, க்ஷயம், சுவையின்மை, இருமல், இழுப்பு, பீநிசம், வீக்கம், இதயநோய் ஆகியவை தீரும்.

பஞ்ச நிம்பாதி சூரணம்: இச்சூரணத்தை அரை ரூபாய் எடை உட்கொண்டு வந்தால் வயிற்றுவலி, ஆம்ல பித்தம் என்பவைத் தணியும்.

பஞ்சநிய சூரணம்: இது குட்டவகைகள், அக்கி, பகந்தரம், யானைக்கால், வாதரத்தம், நரம்புச் சிலந்தி, நீரிழிவு, உடல் பருமன் பெருவயிறு ஆகியவற்றைப் போக்கும் neem tree uses in tamil வேம்பு மருத்துவ பயன்கள்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button