செடி மரம்மூலிகை

நாயுருவி இலை பயன்கள்

nayuruvi plant uses in tamil நாயுருவி இலை பயன்கள் நாயுருவி செடி சாதாரணமாக மரங்கள், செடிகள் இவற்றுக்கு இடையிலும், புதர்களின் இடையிலும் வளர்ந்திருக்கும். இது பொதுவாக நான்கு அடி உயரம் வளரும். இதன் தண்டு சற்றுப் பருமனாகவும் சாம்பல் நிறத்துடனும் இருக்கும்.

இதன் இலைகள் கணுக்களில்தான் விடும். இந்தச் செடி கறுப்பு, வெளுப்பு என இரு நிறத்தில் இருக்கும். இதன் பூக்கள் மேல்நோக்கி இருக்கும்.

நாயுருவிச் செடியின் இலை, தண்டு, வேர் ஆகியவைகள் எல்லாம் மருத்துவத்திற்குப் பயன் தருவனவாகும்.

கறுப்பு நிறச் செடியின் சுவை சற்று துவர்ப்பாகவும், காரமாகவும் இரண்டும் சேர்ந்தாற்போல் இருக்கும்.

வெள்ளைநிறச் செடியின் சுவை துவர்ப்பாக மட்டுமே இருக்கும். ஆனால் இரண்டும் ஒரே மருத்துவப் பலனை அளிக்கக் கூடியவை.

இளம் நாயுருவியைக் கறிகாய் போன்று சமைத்து உண்ணலாம்; உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும். இதன் விதைகளை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் மூக்கு சம்பந்தமான நோய்கள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

நாயுருவி இலை பயன்கள் – nayuruvi plant uses in tamil

nayuruvi plant uses in tamil நாயுருவி இலை பயன்கள்

நோய்களை அகற்றும் நாயுருவி கஷாயம்

நாயுருவியின் இலைகளைக் கஷாயம் செய்து உட்கொண்டால் பலவிதநோய்கள் குணமாகும்.

இரத்தச் சுத்திக்கு நாயுருவி இலையைப் பறித்து வந்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தியாகும்.

தவிர இந்தக் கஷாயத்தினால் கபம், வாதம், வாயுத் தொல்லை, மூச்சுக்குழாய் சம்பந்தமான நோய்கள், பல் நோய்கள் என எல்லா நோய்களும் குணமாகும்.

மூலத்திற்கு

மூல நோய் குணமாக

இளம் நாயுருவி இலைகளைக் கொடியுடன், மிளகையும் சேர்த்து வைத்து அரைத்துச் சாப்பிட்டால் கொடுமையான மூலநோய் குணமாகும்.

பூவரசு மரம் பயன்கள்

கண் நோய்க்கு நாயுருவி இலை பயன்கள்

மஞ்சள் காமாலைக்கு

நாயுருவிச் செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து அரைத்துக் கஷாயம்வைத்துச் சாப்பிட்டால் காதில் சீழ்வடிதல்,  கண் சிவப்பாகி அரிப்பு உண்டாகுதல் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.

விஷக்கடிக்கு நாயுருவி இலை பயன்கள்

தேளோ, சிலந்தியோ கடித்துவிட்டால் உடனடியாக நாயுருவி இலையைக் கொண்டு வந்து கடிகண்ட இடத்தில் சாறை பிழிந்து தேய்த்து விட்டால் விஷம் விரைவில் இறங்கிவிடும் nayuruvi plant uses in tamil நாயுருவி இலை பயன்கள்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button