பழங்கள்

நாவல் பழம் நன்மைகள்

நாவல் பழம் நன்மைகள் naval palam benefits in tamil நாவல் நாவல் மரத்தின் பழத்தை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். நாவல் பழம் எப்போதும் கிடைக்காது. குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டும்தான் கிடைக்கும். நாவல் பழத்தை அப்படியே சாப்பிடாமல் சிறிது உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் மிக ருசியாக இருக்கும்.

நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இதில் நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மருத்துவப் பொருட்கள் அதிகம் உள்ளன.

நாவல் பழம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும். ஆகையினால் நாவல் பழத்தை ஒரு அளவாகத்தான் சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிட்டால் தொண்டைக் கட்டு உண்டாகும். இருமலும் உண்டாகும். இருப்பினும் இப்பழத்தைச் சிறியவர் முதல் பெரியவர்வரை சாப்பிடலாம்.

நாவல் பழத்தில் வைட்டமின் சி, பி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் உள்ளன. தவிர இதில் மாவுச் சத்து 14 சதவீதம் உள்ளது.

நாவல் பழம் மருத்துவ சிறப்புப் பெற்றது என்பதை சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் பண்டைக் காலம் முதல் அறிவுறுத்தி வந்துள்ளன. அதுமட்டுமன்றி அவசியம் எல்லாரும் நாவல் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

நாவல் பழம் நன்மைகள் – Naval palam benefits in tamil

நாவல் பழம் நன்மைகள் - Naval palam benefits in tamil

சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைய

நீரிழிவு நோய் சர்க்கரை சத்து அதிகமாவதால் உண்டாகி தொல்லை கொடுப்பது. இந்நோய் உள்ளவர்கள் தங்களது சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதனால் நீரிழிவு நோய் மட்டுப் படும்.

நாவல் பழத்தின் கொட்டைகளைச் சேகரித்து நன்கு காயவைத்து இடித்துத் தூளாக்கி ஒரு கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளைக்கு மூன்று கிராம் தூள் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இதுபோன்று தினமும் இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.

சாதாரண பேதி, சீதபேதி குணமாக

சாதாரண பேதியோ, சீத பேதியோ உண்டானால் உடல் பலஹீனமாகும். ஆதலின் இதனை அகற்றிக் கொள்ள ஒருவழி. நாவல் பழத்தின் கொட்டைகளைச் சேகரித்து நன்கு காயவைத்து தூளாக்கி அதில் 10 கிராம் வீதம் மோருடன் கலந்து குடித்துவந்தால் சாதரண பேதி, சீதபேதிகுணமாகும்.

மூலநோயுள்ளவர்களுக்கு

மூல நோய் குணமாக

மூல நோயினால் வேதனைப் படுகிறவர்கள் தொடர்ந்து நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையலாம்.

தினசரி மூன்று பழங்கள் வீதம் தேனில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.

வில்வம் மருத்துவ குணங்கள்

நீரிழிவு நோய்க்கு நாவல் மரப்பட்டையின் சாம்பல்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகளுக்குப் பூரண குணம் கிடைக்க நாவல் மரத்தின் பட்டையின் சாம்பல் உதவுகிறது.

நாவல் மரத்தின் பட்டையைக் கொண்டு வந்து நிழலில் உலர்த்தி எரிக்க வேண்டும். எரிந்ததும் அதில் கிடைக்கும் வெள்ளை நிறச் சாம்பலை எடுத்துத் தூளாக்கிக் கண்ணாடி பாட்டிலில் பத்திப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தத் தூளிலிருந்து அரைத் தேக்கரண்டி எடுத்து தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். பின்னர் பகல் உணவுக்கு முன்னர் ஒரு தடவையும் அதற்குப் பின்னர் இரவு உணவுக்குப் பின்னர் ஒரு தடவையும் என மூன்று வேளைகள் வீதம் தினசரி குடித்துவர வேண்டும்.

நீரிழிவு மட்டுப்பட மட்டுப்பட பவுடரின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் நீரிழிவுநோய் குணமாகும் நாவல் பழம் நன்மைகள் naval palam benefits in tamil .

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button