நாட்டு மருந்து

நால்பாமராதி தைலம் பயன்கள்

நால்பாமராதி தைலம் என்றால் என்ன 

nalpamaradi thailam benefits in tamil நல்பமரடி தைலம் என்பது ஃபிகஸ் மரங்களின் தண்டு பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆயுர்வேத மூலிகை எண்ணெய் ஆகும். இந்த பட்டைகள் பல்வேறு தோல் நோய்கள், புண்கள் மற்றும் நரம்பு கோளாறுகளை குணப்படுத்துவதில் சிறந்தது. நல்பமரடி எண்ணெயைத் தயாரிக்க, நான்கு வெவ்வேறு வகையான ஃபிகஸ் மரங்களின் மரப்பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நான்கு ஃபிகஸ் மர  இனங்கள், அதாவது ரெலிஜியோசா, பெங்கலென்சிஸ், மைக்ரோ கார்பா மற்றும் ரேஸ்மோசா ஆகியவை ஆயுர்வேதத்தில் நல்பமாரா என்று அழைக்கப்படுகின்றன. நல்பமரடி தைலம் என்பது முகம் மற்றும் உடல் இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும். 

நால்பாமராதி தைலம் பயன்கள் – nalpamaradi thailam benefits in tamil

 • நல்பமரடி எண்ணெயின் பயன்பாடு அதன் கலவையைப் பொறுத்து மாறுபடும்.
 • நால்பாமராதி தைலம் முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கி முக பொலிவை உண்டாக்குகிறது.
 • இது முகத்தில் உள்ள சரும சுருக்கங்களை அகற்றுகிறது.
 • திருமணம் செய்ய போகும் பெண்கள் திருமணத்திற்கு 1 மாதம் முன்பில் இருந்து இந்த தைலத்தை உபயோகித்து வந்தால் முகம் நன்கு அழகாகும்.
 • நல்பமரடி தைலம் தோல் நோய்கள், ஹெர்பஸ், ஸ்கெபிஸ், எக்ஸ்ஸிமா, டெர்மடிஸ், ஒவ்வாமை தோல் நோய்கள் போன்ற சிகிச்சைகளுக்கு இந்த தைலம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
 • இந்த தைலம் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யவும் பயன்படுகிறது.
 • இந்த தைலத்தில் மஞ்சள் மற்றும் சந்தனம் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
 • முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் உள்ளவர்கள் இந்த தைலத்தை பயன்படுத்தி வந்தால் படிப்படியாக குறையும்.
 • கண்களுக்கு கீழே கரும்புள்ளி இருப்பர்வர்கள் இந்த தைலத்தை உபயோகித்து வந்தால் படிப்படியாக கரும்புள்ளிகள் மறையும்.
 • முகத்தில் அதிக எண்ணெய் பசை உள்ளவர்கள் இந்த தைலத்தை உபயோகித்து வந்தால் எண்ணெய் பசை படிப்படியாக குறையும்.
 • முடி உதிரும் பெண்கள் இந்த தைலத்தை 100மிலி மற்றும் 5கிராம் மஞ்சள் பொடியுடன் சேர்த்து தலையில் தடவி வந்தால் முடிஉதிர்வு பிரச்சையில் இருந்து விடுபடலாம்.
 • ஹோமியோபதி டாக்டர் சில நோய்களுக்கு நால்பாமராதி தைலத்தை பரிந்துரைக்கிறார்கள். nalpamaradi thailam benefits in tamil

ஹோமியோபதி டாக்டர் சில நோய்களுக்கு நால்பாமராதி தைலத்தை பரிந்துரைக்கிறார்கள் என்ன என்ன நோய்கள் என்பதை பற்றி கீழே காணலாம்.

 1. முக பருக்களை குணப்படுத்த 
 2. முகம் மற்றும் கண்களுக்கு கீழே உள்ள கரும்புள்ளிகளை மறைக்க 
 3. தடிப்பு தோல் அலர்ஜி 
 4. எக்சிமா தீ காயங்கள் 
 5. தோளில் உள்ள தழும்புகளை மறைக்க 
 6. முகத்தில் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் 
 7. முடி உதிர்வை தடுக்க 

மேற்கண்ட நோய்களுக்கு ஹோமியோபதி டாக்டர் இந்த தைலத்தை உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள்.

நால்பாமராதி தைலம் உபயோகிக்கும் முறை 

இந்த தைலத்தை வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கண்களின் கீழே கரும்புள்ளி இருப்பவர்கள் ஆள் காட்டி விரலின் மேல் நுனியில் 2 சொட்டு விட்டு கண்களுக்கு கீழ் கரும்புள்ளி மேல் தேய்த்து விடவும். அதன்பின் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி விடவும். இதை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

முகத்தில் எண்ணெய் பசை உள்ளவர்கள் இந்த தைலத்தை 5 சொட்டு எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடத்திற்கு பின் சூடான  தண்ணீரில் கழுவவும். 

30 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க கூடாது அது தீங்கு விளைவிக்கும்.

முடி உதிரும் பெண்கள் நால்பாமராதி எண்ணெய் 100மிலி எடுத்து அதனுடன் 5 கிராம் மஞ்சள் பொடியுடன் கலந்து தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து பின் 30 நிமிடத்திற்கு பின்பு மிதமான சூடான நீரில் குளிக்கவும்.

நால்பாமராதி தைலம் தீமைகள் 

 • இந்த தைலம் தேங்காய் எண்ணையில் இருந்து தயாரிப்பதால் ஒரு சிலருக்கு சளி பிடிக்கும்.
 • இயற்கையாகவே சருமத்தில் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இந்த தைலத்தை அதிகமாக பயன்படுத்தினால் எண்ணெய் சருமம் அதிகரிக்கும். எனவே இந்த தைலத்தை சிறிய அளவில் பயன்படுத்தினால் நன்மை அளிக்கும்.
 • குளிர்காலத்தில் மருத்துவரின் ஆலோசனை கேட்டு பயன்படுத்தவும். மேலும் இந்த தைலத்தை தொடர்ந்து உபயோகித்து வரக்கூடாது உங்களின் நோய் தன்மைகள் குறித்து மருத்துவரின் ஆலோசனை கேட்டு பயன்படுத்தவும்.
 • குழந்தைகளுக்கு பயன்படுத்தும் முன் மருத்துவரின் அறிவுரை கேட்டு பயன்படுத்தவும்.

குழந்தைகளுக்கு நல்பமரடி தைலம் பயன்படுத்தலாமா?

குழந்தைகளுக்கு, குளிப்பதற்கு 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் மசாஜ் செய்யவும். பின்பு தண்ணீர் மற்றும் சோப்புடன் கழுவவும். நல்பமரடி தைலம்  மிக நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தப்படலாம்.

நல்பமரடி தைலத்திற்கும் கும்குமடி தைலத்திற்கும் என்ன வித்தியாசம்?

 • மந்தமான மற்றும் குறைந்த நிறம் மற்றும்  சேதமடைந்த வயதான சருமத்திற்கு சிகிச்சை அளிக்க கும்குமடி தைலம் பரிந்துரைக்கப்படுகிறது.
 • நல்பமரடி தைலம் என்பது முகம் மற்றும் உடல் இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு சக்திவாய்ந்த சருமப் பொலிவு மற்றும் தடுப்பு சிகிச்சையாகும் nalpamaradi thailam benefits in tamil.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button