கீரை

murungai keerai benefits in tamil | முருங்கை கீரை பயன்கள் நன்மைகள்

murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள் முருங்கை கீரை நன்மைகள் முருங்கை மரத்தின் இலைகளையே ‘முருங்கை கீரை’ என்று கூறுகிறோம். முருங்கை கீரையை இதரக் கீரை வகைபோலச் சமைத்துச் சாப்பிட்டு வருகின்றனர். முருங்கை கீரை உடல் நலத்துக்குச் சிறந்தது. இதனை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் பேதியாகும். இதனைப் பகல் நேரத்தில்தான் சாப்பிட வேண்டும்.

முருங்கை கீரையை பெரும்பாலும் தேங்காய், பருப்பு, மிளகாய் சேர்த்து இளம்சூட்டில் புரட்டிச் சாப்பிடுவார்கள். இது மிகவும் சுவையானது. இதில் வைட்டமின் A, B, C போன்ற சத்துக்களுடன் கண்ணாம்பு சத்தும் இரும்பு சத்தும் சோர்ந்துள்ளது.

முருங்கை கீரையைப் பருப்புச் சேர்த்துக் கூட்டு வைப்பார்கள். பொரியல், துவட்டல் செய்வார்கள். முருங்கை கீரை பொரியலில் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து வேகவைத்துச் சிலர் சாப்பிடுவதும் உண்டு.

கீரையில் நிறைய வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் இருப்பதால், அது உடலை நன்றாக வளரச் செய்யும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்ல எல்லா பலத்தைத் தரும்.

கண் சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளையும் முருங்கை கீரை பூரணமாகக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

முருங்கை வியத்தகு பயனை அளிக்கக் கூடியதாகும். இது மர வகையைச் சார்ந்ததாகும். இதன் பூக்கள் இளமஞ்சள் அல்லது வெள்ளை மத்தில் கொத்துகொத்தாகப் பூக்கும். இதன் காய்கள் நீளமாக இருக்கும்.

பொதுவாக எல்லாரும் முருங்கைக் கீரையையும், முருங்கைக் காயையும் சமையலில் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆகையால் முருங்கையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.

முருங்கையின் இலை, பூ, காய், விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன.

இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின் – B, வைட்டமின் – B2, வைட்டமின் – C ஆகிய சத்துகள் அடங்கியுள்ளனன. இந்தக் கீரையை சமையலில் வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டுவந்தால் இரும்புச் சக்தி குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் குணமாகும்.

அத்துடன் பெண்களுக்கு வரும் சோகை, காமாலை, உப்புச் சத்துக் குறைபாடு போன்ற நோய்களும் குணமாகும்.

இந்தக் கீரையைப் பகல் நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் உபயோகிக்கக் கூடாது. காலையில் சமையல் செய்து அதனை இரவில் சாப்பிட்டால் பேதியாகும்.

Table of Contents

முருங்கை கீரை நன்மைகள்

murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள் முருங்கை கீரை நன்மைகள்

 1. முருங்கைக் கீரையை நாம் உணவாகச் சமைத்துச் சாப்பிடுகிறோம். அதே நேரத்தில் பல வியாதிகளைக் குணப்படுத்தும் பச்சிலை மூலிகையாகவும் பயன்பட்டு வருகிறது.
 2. முருங்கைக் கீரையை அடிக்கடி உபயோகித்தால் உடல் நாகு செயல்படும்.
 3. நரம்புகள் வலிமைவறும்.
 4. வயிறு, குடல், கல்ரேல், மண்ணீரல், சிறுங்கம் இவைகள் எல்ணம் சீரான இயக்கத்தைப் பெறும்.
 5. முருங்கைக் கீரையை – எள்ளு புண்ணாக்குடன் சேர்த்து சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டுவந்தால் நீரிழிவு நோய் அகன்றுவிடும்.
 6. ஆண்மை விருத்திக்கு இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மை விருத்தியாகி இன்பம் அளிக்கும்.
 7. தலைவலி, தொண்டை வலி, சயித்தியம் போன்றவைகளுக்கு இந்த இலையின் சாற்றுடன் மிளகு சேர்த்து, அரைத்துப் பற்றுப் போட்டால் இத்துன்பங்கள் பறந்து போகும்.
 8. கண் நோய் உடையவர்கள் இந்த இலையைச் சிறிது சுத்தமான விடும், கையில் காக்கி இரண்டு சொட்டு கண்ணில் விட்டால் கண் நோய் அகன்று
 9. இரும்புச் சத்துக் குறைபாடுகளினால் உண்டாகும் நோய்களுக்கு முருங்கைக்கீரையைப் பயன்படுத்தினால் அக்குறைபாடுகள் நீங்கும்.
 10. சன் தியரன தொண்டைக்கம்மனால் பேசமுடியாமல் தரைவாக இவர்களுக்கு முருங்கைக் கீரை சாறுடன் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றைச் சேர்த்து குழைத்துத் தொண்டை குழியில் தடவினால் இந்நோய் அகன்று விடும்.
 11. கண் பார்வை தெளிவடையும். வயோதிகம் வரை தேகத்தின் மேலுள்ள தோல் சுருக்கமடையாமல் வழுவழுப்புடனிருக்கும்.
 12. பற்கள் உறுதியாக இருக்கும். பல் சம்பந்தப்பட்ட எந்தக் கோளாறும் ஏற்படாது.
 13. வயோதிகக் காலத்திலும் நரம்புகள் முறுக்குடனிருக்கும். சோர்வின்றி நடைபோட முடியும்.
 14. பிறரைத் தொற்றக் கூடிய எந்த வியாதியும் தொற்ற முடியாது. இரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்.
 15. இருதயத் துடிப்பை இயற்கை அளவில் வைத்திருக்கும். தசைகள் பலப்படும்; சுருங்காது.
 16. நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
 17. முருங்கை கீரையுடன், கோழி முட்டையையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். நல்ல இரத்தம் விருத்தியாகும்.

முருங்கை கீரை – சாம்பார், கூட்டு, பொரியல், மோர்க்குழம்பு ஆகிய முறையில் சமையல் செய்து சாதத்துடன் சேர்த்துக் கொண்டால் எண்ணப்பன்களையும் பெறலாம் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்..

பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்

முருங்கை கீரை நன்மைகள் – murungai keerai benefits in tamil

குழந்தை பெற்ற தாய்க்கு பால் சுரக்க

சில தாய்மார்கள், தன் குழந்தைக்குத் தேவையான பால் கிடைக்காததால், மன சங்கடமடைகின்றனர். முருங்கைக் கீரையுடன் பருப்புச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

குழந்தைக்கு ஏற்படும் வயிற்று உப்புசம் குணமாக

குழந்தைக்கு பால் கொடுத்து வரும் தாய்மார்கள் சீக்கிரம் ஜீரணமாகக் கூடாத பதார்த்தங்களைச் சாப்பிட்ட காரணத்தினாலும்,  முருங்கை கீரை வாயு உண்டு பண்ணும் எந்த வகையான பதார்த்தத்தையாவது சாப்பிட்ட காரணத்தினாலும், அது பால் குடிக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

இதன் காரணமாகக் குழந்தைக்கு வயிற்று உப்பிசம் உண்டாகும். இந்த சமயம் குழந்தையின் வயிறு உப்பலாக இருக்கும். அது கல்லு போல கடினமாக இருக்கும், குழந்தை மூச்சு விடக் கஷ்டப்படும்.

அதே போல் சாப்பிடக் கூடிய குழந்தைகளும், சில சமயம் சீக்கிரம் ஜீரணிக்கக் கூடாத பதாாததததைச் சாப்பிட்ட காரணத்தினாலும், வாயுவை உண்டு பண்ணும் பதார்த்தங்களைச் சாப்பிட்டு விடுவதினாலும், வயிற்று உப்பிசம் உண்டாகும். இதனால் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படும்.

இந்த சமயம் முருங்கைக் கீரையைச் சுத்தம் பார்த்து, அதை உள்ளங்கைக்கு அடங்கும் அளவு எடுத்து இரண்டு கைகளையும் சேர்த்து நன்றாகக் கீரையைக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும்.

இந்தச் சாற்றை ஒரு சுத்தமான ணியைக் கொண்டு வடிகட்டி அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் பட்டாணி அளவு கறி உப்பைப் போட்டுக் கரைத்து, மேலும் அரைத் தேக்கரண்டி அளவு வெந்நீரையும் சேர்த்துக் கலக்கி, உடனே உள்ளுக்குக் கொடுத்து விட வேண்டும்.

மறுபடி இன்னும் கொஞ்சம் கீரையை எடுத்து அதையும் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து அந்தச் சாற்றுடன், சுண்டைக்காயளவு சுட்ட வசம்புத் தூளையும் சேர்த்துக் குழப்பி குழந்தையின் தொப்புளைச் சுற்றிக் கனமாகவும், பிறகு வயிறு முழுதும் லேசாகவும் பற்றுப் போட்டு விட்டால், கொஞ்சம் நேரத்தில் மலம் கழிந்தவுடன் நீரும் பிரியும். வயிற்று உப்பிசம் உடனே வாடிவிடும்.

சில சமயம் மருந்துக் கொடுத்தவுடன் வாந்தியாவதும் உண்டு இதற்காகப் பயப்படத் தேவையில்லை. பூரண குணம் ஏற்படும் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

உஷ்ண பேதி குணமாக முருங்கை கீரை நன்மைகள்

உஷ்ணம் காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். ஒரு நாளைக்குப் பல முறை மலம் குழம்பு போல கழியும். இந்த சமயம் வயிற்றில் வலியும் இருக்கும்.

சில சமயம் இது அஜீரண பேதியைப் போல சரிவர ஜீரணமாகாத பொருளுடன் பேதியாகும். சில சமயம் வயிற்றில் வாயு சேர்ந்து கடமுடா என்று இரைச்சல் உண்டாகும். இரைச்சலுடன் வயிற்றால் போகும்.

இதை உடனடியாகக் கவனித்து தக்க சிகிச்சை அ குணப்படுத்த வேண்டும். இந்த வயிற்றுப் போக்கை நீடிக்க விட்டால் அது கிராணியாக மாறிவிடும். நாளாவட்டத்தில் உடல் பலம் குன்றிவிடும்.

இதைக் குணப்படுத்தும் சக்தி முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையை ஆய்ந்து ஒரு கையில் பிடிக்கக் கூடிய அளவு கீரையை எடுத்து, ஒரு புதுச் சட்டியில் போட்டு, சட்டியை அடுப்பில் வைத்து நன்றாகத் தீயெரிக்க வேண்டும்.

இந்த சமயம் கீரையைக் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கீரை வெந்து வரும் சமயம் அரை கைப்பிடியளவு கறி உப்பை எடுத்து அதில் போட்டு மேலும் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கீரை சிவந்து, சருகாக மாறி, பிறகு தீய ஆரம்பிக்கும்.

கீரையும், உப்பும் சேர்ந்து கரிபோல மாறிவிடும். விடாமல் கிளறிக் கொண்டே இருந்தால், அதில் சில சமயம் தீப்பொறி தோன்றும். இந்த சமயம் சட்டியை இறக்கி வைத்து விட வேண்டும்.

சட்டி நன்றாக ஆறியபின் அதிலுள்ள கீரைத் தூளை எடுத்து, அம்மியில் வைத்துப் பட்டுப் போலத் தான் பண்ணி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தூளில் தினசரி காலை, மாலை இருவேளைக்கும் அரைத் தேக்கரண்டி மோரைக் குடிக்கக் கொடுத்து வந்தால் உஷ்ணபேதி குணமாகி விடும் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

உடல் பலம் பெற

அரைக்கீரை பயன்கள் arai keerai benefits in tamil

அளவு தூளைக் கொடுத்து, சிறிதளவு வெந்நீர் அல்லது உடல் பலம் பெற, உடலில் புதிய இரத்தம் உண்டாக சாம்பார் வேண்டும். இதற்கு முருங்கைக் கீரை டானிக் போல வேலை செய்யும்.

முருங்கைக் கீரையை ஆய்ந்து எடுத்து, ஒரு சுத்தமான வாணலியில் இரண்டு தேக்கரண்டி அளவு நெய் விட்டு, நெய் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுத்தம் பருப்பைப் போட்டுச் சிவந்தவுடன், வெங்காயத்தில் ஐந்து எடுத்துப் பொடியாக நறுக்கி அதில் போட்டு, சற்று சிவந்தவுடன் அதில் முருங்கைக் கீரையைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். இந்த சமயம் தேவையான அளவு உப்புக்கரைத்த தண்ணீரை விட வேண்டும்.

கீரை நன்றாக வெந்தவுடன் ஒரு கோழி முட்டையை உடைத்து அதில் விட்டு, நன்றாகக் கிளறவேண்டும். முட்டை வெந்தவுடன் வாணலியை இறக்கிக் கீழே வைத்து, அதைச் சற்று ஆறவைத்து, இளஞ்சூட்டுடன் நன்றாக மென்றுச் சாப்பிட்டு விட வேண்டும்.

இதை சாப்பாட்டுக்கு முன்னதாகத் தயார் செய்துச் சாப்பிட வேண்டும். சூட்டுடன் சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் எவ்வளவு பலம் ஏறி இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

நீர்க்கட்டி குணமாக

நீர்க்கட்டி குணமாக

சில சமயம் குழந்தைகளுக்காவது, பெரியவர்களுக்காவது நீர்க்கட்டு ஏற்பட்டு சிறுநீர் வெளியேறாமல் உள்ளேயே தங்கி வயிற்று உப்பிசத்தை உண்டு பண்ணும், இந்த சமயம் மூச்சுவிடக் கஷ்டமாக இருக்கும். இதை உடனடியாகக் கவனித்து தக்க சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றி விட வேண்டும்.

இதற்கு முருங்கைக் கீரை மருந்தாகப் பயன்படுகிறது. தேவையான அளவு முருங்கைக் கீரையை எடுத்து அம்மியில் வைத்து, அதே அளவு வெள்ளரி விதையும் சேர்த்து வெந்நீர் விட்டு மைபோல அரைத்து, அதை வழித்து, உப்பிசமாக இருக்கும் வயிற்றின் மேல் கனமாகப் பற்றுப் போட்டு விட்டால் ஒரு சில நிமிஷத்தில் சிறுநீர்க்கட்டு உடைந்து வெளியேறும்.

முருங்கைக் கீரையில், வேறு எந்த வகையான கீரைகளிலும் இல்லாத அளவு வைட்டமின் ‘A’ உயிர்ச்சத்தும், வைட்டமின் ‘C’ உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி அடையும். ஆயுள் விருத்தியாகும் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

முருங்கைக் கீரையில் உயிர்ச்சத்து – Murungai keerai vitamin

 • A  வைட்டமின் உயிர்ச்சத்து 3210 மில்லிகிராமும்,
 • வைட்டமின் B உயிர்ச்சத்து 17 மில்லிகிராமும்,
 • வைட்டமின் C உயிர்ச்சத்து 62 மில்லிகிராமும்,
 • சுண்ணாம்புச் சத்து 120 மில்லிகிராமும்,
 • இரும்புச் சத்து 2.0 மில்லிகிராமும் இருக்கிறது.
 • இதன் காலரி என்னும் உஷ்ண அளவு

விந்தைக் கெட்டிப்படுத்த

விந்து நீர்த்து உடனே வெளியேறினால் முருங்கையின் விதையை லேகியமாக்கி உபயோகிக்க வேண்டும்.

இதனால் விரைவில் விந்து வெளியேறாது. விந்து கெட்டிப்பட்டு உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.

உடலிலுள்ள கெட்டநீர் வெளியேற

கீழ்க்காணும் முறையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலம் பெறும்.

முருங்கை இலையில் ஈர்க்கை தயார் செய்து கொண்டு, அதனை நன்றாக இடித்து ஒரு மட்பாண்டத்தில்போட்டு ஒருபடி சுத்தமான நீர் விட்டுக் கால்படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

காலை, மாலை என இரண்டு வேளையும் இந்த கஷாயத்தில் மூன்று அவுன்ஸ் எடுத்து சாப்பிட்டுவந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறி உடல் நலமாக இருக்கும் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

இருமல் நீங்க

turmeric in tamil மஞ்சள் மருத்துவ பயன்கள் முருங்கை கீரை நன்மைகள்

முருங்கை இலையைச் சாறு பிழிந்து எடுத்து அதில் சிறிது சுண்ணாம்பு, தேன் ஆகியவற்றை நன்றாகக் கலக்கிக் குழைத்துத் தொண்டைக் குழியின்மேல் தடவி வந்தால் இருமல், தொண்டைக் கம்மல் ஆகிய குறைபாடுகள் உடனடியாக அகன்றுவிடும்.

பெண்மலட்டுத்தன்மைக்கும், ஆண்மை பெருக்கிற்கும்

முருங்கைப் பூவை நன்றாகக் கழுவி பசும்பாலில் போட்டு வேக வைத்துப்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வரவும்.

இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்ணின் மலட்டுத் தன்மை அகன்றுவிடும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

நாய்க்கடிக்கு நல்ல மருந்து

நாய்கடியின் விஷத்தை முறிப்பதில் முருங்கை இலை சிறந்ததாக இருக்கிறது.

முருங்கை இலையோடு பூண்டு பல் இரண்டு, ஒரு துண்டு மஞ்சள் சிறிதளவு மிளகு, உப்பு ஆகியவற்றையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து மெழுகாக அரைத்து ஓரளவுக்கு உள்ளுக்குக் கொடுத்து, இதனையே நாய் கடித்த கடிவாயில் பூசி வரவும்.

இதனால் நாய்க்கடியின் விஷம் முறியும்; கடியினால் உண்டான புண்ணும் ஆறும்.

பாரிசவாயு, காக்கை வலிப்பு நீங்க

 • இது போன்ற நோய்கள் குணமாக முருங்கைப் பட்டை பலன் அளிக்கிறது.
 • முருங்கைப் பட்டையை நைத்து மட்பாண்டத்தில் போட்டு நீர் விட்டு சுண்டக் காய்ச்சி கஷாயமாக்கிக் கொள்ளவும்.
 • இந்தக் கஷாயத்தைத் தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாரிச வாயு, காக்கை வலிப்பு போன்றவைகள் குணமாகும்.

வாய்வு தொல்லை நீங்க முருங்கை கீரை பயன்கள்

உடம்பில் வாய்வு அதிகமாகிவிட்டால் தொந்தரவுகள் உண்டாகும். ஆகையினால் முருங்கைப் பிஞ்சைக் கறியாக சமைத்து உட்கொண்டால் வாய்வு அகலும்; வாய்வினால் ஏற்பட்டப் பிடிப்புகள் அகன்று குணமாகும்.

தாதுபலம் பெற

ஆண்களுக்குத் தாது பலம் பெறவேண்டுமாயின் முருங்கை பிசின் சூரணம் நல்ல பலன் தரும்.

முருங்கைப் பிசினைக் கொண்டு வந்து நன்றாக உலர்த்தி இடித்துத் தூளாக்கிச் சூரணமாக்கிக் கொள்ளவும்.

தினசரி காலை, மாலை என இருவேளையும் பசுவின் பாலில் இந்தச் சூரணத்தைக் கலந்து சாப்பிடவும். இதுபோன்று தினமும் செய்து வந்தால் தாது கெட்டிப்படும்.

தலைவலியா?

தலைவலியினால் வேதனைப்படுபவர்கள், முருங்கைப் பட்டையை இடித்து சாறு எடுத்து சாறின் அளவுக்குப் பசும்பால் சேர்த்து நெற்றியில் பற்றுப் போட்டால் உடன் தலைவலி தீரந்துவிடும்.

வயிற்றுவலிக்கும், வயிற்றிலுள்ள புழுக்கள் ஒழிய

nellikai benefits in tamil முருங்கை கீரை நன்மைகள்

மேற்கண்ட குறைபாடுகள் அகல முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு இரண்டையும் சேர்த்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடிநீரில் விட்டுக் குடித்துவரவும். இதனால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்; வயிற்று வலியும் அகன்றுவிடும் murungai keerai benefits in tamil.

குழந்தைக்கு டானிக்

குழந்தைக்கு டானிக்

வளரும் குழந்தைக்கு முருங்கை டானிக்காக இருந்து சிறந்த பலனைக் கொடுக்கும்.

முருங்கைக் கீரையைச் சுத்தமாக கழுவி சாறு பிழிந்து அதைப் பாலுடன் கலந்து பிறந்த குழந்தைகளுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் புகட்டலாம்.

இதிலுள்ள இரும்பு, சுண்ணாம்பு சத்தினால் குழந்தைகள் திடமாக வளரும்.

சிறுநீரகக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை நன்மைகள்

ஒரு கரண்டி முருங்கை இலையின் சாறு எடுத்து அதில் கேரட் அல்லது வெள்ளரி சாறு ஒரு டம்ளர் சேர்த்துக் கலந்து குடித்து வரவும். இதனால் நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் துவாரத்தில் எரிச்சல் ஆகிய தொந்தரவுகள் நீங்கும் murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள் .

முருங்கைகீரையினால் குணமாகும் நோய்கள்

முருங்கைகீரையினால் குணமாகும் நோய்கள்

 • இந்த இலையைக் கசக்கி சாறை இரண்டொரு துளிகள் கண்களில் விட்டால் கண்நோய்கள் குணமாகும்.
 • இந்தக் கீரையை எள் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 • இந்தக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் தாய்ப் பால் அதிகமாகச் சுரக்க வைக்கும்.
 • உடலிலுள்ள எலும்புகளைப் பலப்படுத்தும் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான உயிர்ச்சத்துகள் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்புசத்தையும் அளிக்கும்.
 • முருங்கை இலையை நன்கு அரைத்து வீக்கம் உள்ள இடங்களில் பூசிவர வீக்கம் குறையும்.
 • வாத நோய்களினால் உண்டாகும் வலியைக் குறைக்க இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பூசினால் நல்ல பலன் கொடுக்கும். murungai keerai benefits in tamil முருங்கை கீரை பயன்கள்.

முருங்கை கீரை சாறு பயன்கள்

 • முருங்கை கீரை சாறு மிகவும் சத்தானது.
 • முருங்கை கீரை சாறு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது.
 • இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
 • முருங்கை கீரை சாறு வீக்கத்தை குறைக்கிறது.
 • இந்த சாறு கொழுப்பை குறைக்கிறது.
 • முருங்கை கீரை சாறு நச்சுத்தன்மை வெளியேற்றுகிறது.

முருங்கை கீரை தீமைகள்

 1. முருங்கை கீரை அதிகம் சாப்பிட்டால் வயிற்று வலி, வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
 2. முருங்கை கீரை சுவை பிடிக்காதவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் என்பதால் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
 3. கர்ப்பிணிப் பெண்கள் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவை கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது..
 4. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் முருங்கை கீரை சாப்பிடுவதை  தவிர்க்கவும் சில பொருட்கள் குழந்தைகளுக்கு நல்லதாக இருக்காது.
 5. முருங்கை விதை தீமைகள் சாறுகள் நோயெதிர்ப்பு உயிரணுக்களில் நச்சுத்தன்மை க்கு வழிவகுக்கும் என்பதால் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 6. இரவில் சாப்பிடக் கூடாது.

கேரட் பயன்கள்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button