கீரை

முளைக்கீரை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

mulai keerai benefits in tamil முளைக்கீரை பயன்கள்

mulai keerai benefits in tamil முளைக்கீரை பயன்கள்  கீரைத்தண்டின் இளம் செடிதான் முளைக்கீரை இதனை குழம்பு வைக்கலாம், கூட்டுப் பொரியல் செய்யலாம். புளி அல்லது பூண்டு அல்லது தயிர் சேர்த்து மசியல் செய்யலாம். இந்த முளைக்கீரையில் வைட்டமின் A, B, C உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது.

மேலும், உடல் ஊட்டத்திற்குத் தேவையான புரதச் சத்தும், இரும்புச் சத்தும் கூட இக்கீரையில் அடங்கி உள்ளது.

பொதுவாக, இக்கீரையை தினசரி உணவாக சமைத்து உண்டுவரின் தலைமயிர் நரைக்காது தவிர்க்கப்பா கண் பார்வையும் சீர் கெடாது. பலவீனமான உடலைத் தேற்றும்.

பசியைத் தூண்டும். சாம நோய்களான சொறி, சிரங்கு போன்றவை அணுகாது.

வளரும் சிறுவர், வாலிபர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்கள் நல்ல பலத்துடன் வளருவார்கள். எலும்புகள் வளர்ச்சியடையும். பற்கள் பலம் பெறும்.

சாதம் சாப்பிடக் கூடிய அளவில் பக்குவம் அடைந்த குழந்தைகளுக்கு, இந்த முளைக்கீரையுடன் பருப்புச் சேர்த்துக் கடைந்து பகல் சாதத்துடன் எலுமிச்சம்பழ அளவு கீரையைத் தினசரி கொடுத்து வந்தால் குழந்தை நல்ல பலத்துடன் வளரும். மலம் சிக்கலின்றி வெளியேறும். சுகமாக வளரும் mulai benefits in tamil.

முளைக்கீரை குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆகையால் எண்ணெய் ஸ்நானம் செய்த அன்று சாப்பிடக் கூடாது.

முளைக்கீரை பயன்கள் (mulai keerai benefits in tamil)

முளைக்கீரையை தினசரி சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட எல்லா வியாதிக குணமாகும்.

 1. சர்ம சம்பந்தமான சொறி, சிரங்கு, மற்றும் புண் இரணங்கள் ஆறும்.
 2. பற்கள் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.
 3. மூக்கு சம்பந்தமான எல்லா வியாதிகளையும் மருந்துப் போல குணப்படுத்தும்.
 4. நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு முறுக்கேறும்.
 5. எலும்பு வளர்ச்சி பெறாதவர்களுக்கு முளைக்கீரையைக் கொடுத்து வந்தால் நல்ல பலன் காணலாம்.
 6. முளைக்கீரைக்கு அறிவை விருத்தி செய்யும் சக்தியும் உண்டு.
 7. சிறுநீர் சம்பந்தமாகக் கஷ்டப்படுகிறவர்கள் முளைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் நல்ல குணம் காணலாம்.
 8. எல்லா வியாதிக்கும் காரணமான மலச்சிக்கல் உள்ளர்வர்கள் முளைக்கீரையைச் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.
 9. முளைக்கீரை நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். பசி தீபனத்தை உண்டுப் பண்ணும்.

20 கிராம் எடையுள்ள முளைக்கீரையில் எவ்வளவு உயிர்ச்சத்துக்கள்

முளைக்கீரையைப் பயிரிடும் இடத்திலுள்ள எருவின் சக்தியைப் பொறுத்து அந்தக் கீரையிலும் உயிர்ச்சத்துக் கூடுதல், குறைவாக இருக்கும்.

 • A வைட்டமின்  உயிர்ச்சத்து 710 முதல் 3120 மில்லி கிராம் வரை இருக்கிறது.
 • B1 வைட்டமின்  உயிர்ச்சத்து 8 மில்லிகிராமும்,
 • B2 வைட்டமின்  உயிர்ச்சத்து 28 மில்லிகிராமும்,
 •  C வைட்டமின் உயிர்ச்சத்து 110 மில்லிகிராமும்,
 • இரும்புச் சத்து 6.1 மில்லிகிராமும் இருக்கிறது.

இவ்வளவு உயிர்ச்சத்துள்ள கீரையை சாதாரண ஒரு கீரையாக நினைத்துப் பலர் விரும்பிச் சாப்பிடுவதில்லை. முளைக்கீரையை குளிர்ச்சி என்று கருதி சிலர் தங்கள் குழந்தைகளுக்குச் கொடுக்கப் பயப்படுகிறார்கள்.

ஆனால், தக்காளிப்பழத்தை நிறையக் கொடுப்பார்கள். முளைக் கீரையைவிட தக்காளிப்பழம் இருமடங்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே முளைக்கீரையை வளரும் குழந்தைகளுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம் முளைக்கீரை பயன்கள் mulai keerai benefits in tamil முளைக்கீரை பயன்கள்.

எங்க போறீங்க இதையும் படிங்க

அரைக்கீரை பயன்கள்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button