கீரை

முடக்கத்தான் கீரை பயன்கள் | mudakathan keerai benefits in tamil

முடக்கத்தான் கீரை பயன்கள் mudakathan keerai benefits in tamil முடக்கத்தான் கீரை முடக்கத்தான் கீரை இந்தியா முழுவதும் பயிராகின்ற ஒரு கொடி இனமாகும். பொதுவாக இக்கீரை தமிழகம், வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளர்கின்றது. இமயமலைப் பிரதேசத்திலும் இந்திய சமவெளிப் பகுதி களிளும் இது தன்னிச்சையாக வளரக்கூடிய ஒன்றாகும். இந்தியா மட்டுமன்றி இலங்கை, மலேசியா முதலிய நாடுகளிலும் இக்கீரை கிடைக்கின்றது.

முடக்கத்தான் கீரை கசப்புச்சுவை உடையது. இதனை அடையாகத் தட்டி உண்பது வழக்கம். பொதுவாக தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடுவார்கள்.

தோசை தயாரிப்பதற்கு உளுந்து மாவுக்குப் பதிலாக இக்கீரையைப் பயன்படுத்துவதும் உண்டு. கீரையை நன்றாக அரைத்து ஆட்டி வைத்துள்ள அரிசி மாவுடன் கலந்து இரவில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை தோசைக்கு ஏற்ற புளிப்புத் தன்மையை மாவு பெற்றுவிடும். இந்த மாவில் தோசை செய்து சாப்பிட்டால் மிகச் சுவையாக இருக்கும். தோசை மிருதுவாக இருக்கும்.

இக்கீரையைத் துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு இவற்றுடன் சேர்த்துக் கூட்டுத் தயார் செய்து உண்ணலாம். மற்றப் பயறு வகைகளுடன் சேர்த்தும் கூட்டு செய்யலாம். இக்கீரையைப் பொறியல் செய்தும் உண்ணலாம்.

பொரியலில் வெங்காயம் அதிகம் சேர்ப்பது நல்லது. இதனை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வெந்தயம், உளுந்து இவைகளை நன்கு உண்ணலாம். நெய்விட்டு வறுத்து தேங்காய் சேர்த்துத் துவையல் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம்.

இக்கீரையை மிளகு ரசம் வைத்தும் உண்ணலாம். ஆனால் முடக்கத்தான் கீரையைப் பச்சையாக உண்பதே சிறப்பான பயனைத் தரும். இக்கீரையை உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், புளி சேர்த்து பச்சையாக உண்ணலாம்.

ஊட்டச் சத்தைப் பொருத்தளவிற்கு இக்கீரையில் புரதம், தாது உப்புக்கள், மாவுச் சத்து முதலியன நிறைந்த அளவில் உள்ளன.

இக்கீரையில் 83.3 விழுக்காடு நீரும், 4.7 விழுக்காடு புரதச் சத்தும், 0.6 விழுக்காடு கொழுப்பும், 2.3 விழுக்காடு தாது உப்புகளும், 9.1 விழுக்காடு மாவுச்சத்தும் அடங்கி உள்ளன. வெப்ப ஆற்றலைக் கொடுப்பதால் இக்கீரை 61கலோரி வெப்ப ஆற்றலைக் கொடுக்கின்றது.

முடக்கத்தான் கீரை பயன்கள் – mudakathan keerai benefits in tamil

முடக்கத்தான் கீரை பயன்கள் mudakathan keerai benefits in tamil mudakathan keerai uses in tamil

முடக்கத்தான் கீரை பச்சிலை மருந்துகளில் மிகச்சிறந்த பச்சிலையாக விளங்குகிறது. இலையும், வேரும் இரண்டுமே வைத்தியத்துக்கு உதவுகின்றன.

முடக்கத்தான் கீரையை அரைத்துக் காலையில் நெல்லிக்காய் அளவு உண்ணலாம். சொரிசிரங்கு, கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும்.

இதன் குடிநீர் குடலைச் சுத்தமாக்கி மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் பெற்றது. முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு அரைத்து சிறு கருப்பட்டி கூட்டித் தின்ன குடலிறக்க நோய் குணமாகும்.

குடைச்சல்

இடுப்புப் பிடிப்பு, இடுப்புக் குடைச்சல், கை – கால் வலி, கை – கால் குடைச்சல் முதலியவற்றை முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகிறது.

நரம்பு மற்றும் தசை வலுவூட்டும்

இக்கீரை உடலுக்கு வலுக்கொடுக்கும் ஆற்றலைத் தன்னுள்ளே கொண்டுள்ள ஒன்றாகும். நிறைந்த ஆற்றலையும் சக்தியையும் உடலுக்கு வழங்க வல்லது. அதனால் நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. நரம்பு மற்றும் தசை நார்களுக்கு வலுவூட்டும் மருந்துகளில் இக்கீரை சேர்க்கப்படுகிறது. அன்றியும் இக்கீரையை முறையாக உண்டு வந்தால் தசைநாரும், நரம்புகளும்வலுப்பெறும்.

இக்கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி உண்பதால் உடல் வலி மற்றும் தசைவலிகளையும் போக்க வல்லது.

முள்ளுக்கீரை பயன்கள்

கீரையை வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கி உண்ண கண்வலி நீங்கும். கண் சம்பந்மான நோய்களுக்கு இக்கீரை நல்லது.

இக்கீரையை நன்றாக அரைத்து வாத நோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதிகளுக்கும். உடல் விரைப்புகளுக்கும் பூசினால் குணமாகும். இதனைப் பாலுடன் சேர்த்து அரைத்துக் கொப்புளங்களுக்கும், கட்டிகளுக்கும் தடவிவரகுணம் கிடைக்கும் mudakathan keerai uses in tamil.

காது வலி

காது வலி

காது வலிக்கும் இக்கீரையைப் பயன்படுத்துகின்றார்கள். கீரையை வதக்கிப் பிழிந்து சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காதுவலி, காது குத்தல் முதலியன நீங்கும். சீழ் வடியும் காதுகளில் இலைச் சாறைவிட சீழ்வடிதல் நீங்கி காது சுத்தப்படும்.

மூல நோய்

மூல நோய் குணமாக

மூல நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். ஒரு பிடி முடக்கத்தான் கீரையை இடித்து ஒரு பழகின சட்டியில் போட்டு அரைப்படி நீர் விட்டு அரைக்கால் படியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் இரண்டு வேளை மூன்று நாட்கள் குடிக்க நரம்புகள் சம்பந்தமான மேகவாய்வு, மூச்சுப்பிடிப்பு மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் இவைகள் குணமாகும்.

இலைகளை வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்டச் கதகத்தை அதிகப்படுத்தி சிக்கல்பட்ட உதிரத்தை வெளியே அகற்றி கருப்பாசயத்தைச் சுத்தப்படுத்தும்.

முடக்கத்தான் கீரையை இடித்துப் பிரசவிக்கும் நிலையிலுள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதினாலும், இலையின் சாறை பூசுவதினானும் சிறிது நேரத்திற்குள் சுகப்பிரசவம் ஆகும். தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பார்கள். பிரசவமானவுடன் வயிற்றை வெந்நீரில் கழுவ வேண்டும் mudakathan keerai uses in tamil.

இலையை எண்ணெய் விட்டு காய்ச்சி அவ்வெண்ணெயை வாத வலிகளுக்குப் பூசலாம்.

முடக்கத்தான் செடி

முடக்கத்தான் செடியின் இலையும் வேரும் மருந்தாகப் பயன் படுகிறது. இவை துவர்ப்பு, கைப்பு, வெப்பம், கார்ப்பு ஆகிய குணங்களைக் கொண்டிருக்கும். இக்கீரை சிறுநீர்ப் பெருக்கி, மலமிளக்கி, பசித் தூண்டி உடல் உரமாக்கி, தடிப்புண்டாக்கி ஆகிய செயல்களைப் புரியும்.

முடக்கத்தான் கஷாயம்

இலை, வேர் முதலியவைகளைக் கஷாயம் செய்து வாதம், மூலம், நாள்பட்ட இருமல் முதலியவைகளுக்கும் கொடுக்கலாம். இலைச் சூரணத்துடன் சித்திரமூல வேர்ப்பட்டைச் சூரணம், கரியபோளம் இவைகளைச் சேர்த்து மூன்று நாள் கொடுக்க கதகக் கட்டு நீங்கும்.

வேர்க்கஷாயத்தை மூல நோய்க்குக் கொடுக்கலாம். இதன் கஷாயத்துடன் ஆமணக்கு எண்ணெய் விட்டுக் கொடுக்க பேதியாகி வயிற்றிலுள்ள வாதநீர், பித்தநீர் முதலியவைகளை பேதி மூலம் வெளிப்படுத்திதேக ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

மாதவிடாய் காலங்களில் அதிகமாகப் போகும் உதிரப்போக்கைத் நடுக்க இக்கீரையின் சாறினை மேசைக் கரண்டி அளவு உண்ண சமப்படுத்தும். இதன் விதையை உண்பதால் நினைவாற்றல் மிகச் சிறந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முடக்கத்தான் கீரை சாதாரணமாக எங்கும் கிடைக்கும் ஒன்றாயினும் அதனைப் பயன் படுத்துவோர் அருகி வருகின்றனர். காரணம் கீரையைப் பற்றிய முழு விபரமும் நாட்டு மக்களுக்குக் கிடைக்காததேயாகும். இதன் பண்பையும், பயனையும் கருதி இக்கீரையை நாம் உணவுடன் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாகும் mudakathan keerai uses in tamil.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button