கீரை

மூக்கிரட்டை கீரை பயன்கள் | mookirattai keerai benefits in tamil

mookirattai keerai benefits in tamil மூக்கிரட்டைக் கீரை மூக்கிரட்டைக் கீரை படர்கொடி வகுப்பைச் சார்ந்ததாயினும், இதில் ஒரு வகை குத்துச் செடி போன்று கிளைகள் விட்டு நிமிர்ந்து நிற்கும். அடுத்த வகை உயரமாக கிளைவிட்டு வளரும். இச்செடிகள் தன்னிச்சையாக வளரும் தன்மை பெற்றவை.

தமிழ்நாட்டில் இதனைக் கீரைக்காகவே பயிரிடுகின்றனர். இக்கீரையைக் கறி செய்து உண்பது நம்நாட்டு வழக்கம், மற்றக் கீரைகளுடன் சேர்த்தும் இக்கீரையைச் சமைக்கலாம்.

மூக்கிரட்டைக் கீரையை வேகவைத்துக் குழம்பாக செய்தும் உண்ணலாம். பருப்பு வகையுடன் சேர்த்து கூட்டுத் தயாரிக்கலாம். மூக்கிரட்டைக் கீரையைப் பொரியல், கடையல், துவையல் செய்தும் உண்ணலாம்.

மூக்கிரட்டையில் நீரானது 84.6 விழுக்காடுள்ளது. புரதச் சத்து 6.1 விழுக்காடும், கொழுப்புச் சத்து 0.9 விழுக்காடும், தாது உப்புகள் 1.3 விழுக்காடும், மாவுப்பொருள் 7.2 விழுக்காடும் இருக்கின்றன. வெப்ப ஆற்றல் கலோரி கொடுக்கின்றது.

நூறு கிராம் கீரையில் 667 மில்லிகிராம் சுண்ணாம்பும், 99 மில்லி கிராம் மணிச்சத்தும், 18.4 மில்லிகிராம் இரும்புச் சத்தும் உள்ளன. உயிர் சத்துகளில் ஒன்றான வைட்டமின் சி 27 மில்லிகிராம் உள்ளது.

Table of Contents

mookirattai keerai benefits in tamil

மூக்கிரட்டைக் கீரை குழந்தைகள் மருத்துவத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பெறுகிறது. பண்டைக்காலத் தமிழர்கள் இக்கீரையைக் கொண்டுதான் குழந்தைகளை நோயிலிருந்து காத்துவந்தனர். விதமான குழந்தை நோயானாலும் அந்த நோய்க்கு மூக்கிரட்டை ஒரு சிறந்த நோய் நீக்கும் நிவாரணியாகும்.

மூக்கிரட்டைக் கீரையைச் சமையலுடன் சேர்த்து வாரம் இரண்டு முறை உண்டு வந்தால் உடனுக்கு வாய்வு சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இவ்வாறு உண்பதால் இரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் உடலை அணுகாது .

மருதாணி மருத்துவ குணங்கள்

மேலும் இரத்த விருத்தி செய்து உடலுக்கு ஆண்மையையும், அழகையும் ஊட்டவல்லது. கண் நோயைத் தீர்ப்பதில் இக்கீரை பொன்னாம் கண்ணிக்கு நிகரானது. பொன்னாங்கண்ணிக் கீரையைப் போன்றே இக்கீரையும் நெய்யிட்டு வதக்கி ஒரு மண்டலம் உண்டு வர கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இக்கிரையால் மலச்சிக்கல் நீங்கும். உடல் காந்திபெறும் இக்கரையை உணவாக சமைத்து ரொட்டி அல்லது சப்பாத்தி இவைகளுடன் சேர்த்து உண்டுவர துட்டு நீர்க்கட்டு போன்ற வாத வலி நோய்கள் நீங்கும் நமைச்சல் வாத நோய்களை நிவர்த்தி செய்யும். நீர் தாராளமாகப் போகும், வாய்வைச் சிக்கறுக்கும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button